Archives: டிசம்பர் 2023

நிழலும் தேவனுடைய வெளிச்சமும்

எலைனுக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவளுக்கும் அவள் கணவனான சக்கும் அவள் இயேசுவை ஏற்றுக்கொண்டு வெகுகாலம் ஆகியிருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இருவரும் தங்கள் ஐம்பத்து நான்கு வருடங்களின் ஆழமான மற்றும் கடினமான பள்ளத்தாக்கில் ஒன்றாகப் பயணிக்கும்போது தேவன் அவர்களுடன் இருப்பார் என்ற சங்கீதம் 23இன் வாக்குறுதியை பொக்கிஷமாக கருதினர். பல தசாப்தங்களுக்கு முன்னரே இயேசுவில் நம்பிக்கை வைத்து, எலைன் இயேசுவைச் சந்திக்கத் தயாராக இருந்தாள் என்று அவர்கள் நம்பினர்.

தன்னுடைய மனைவி மரணத்தின் நினைவு நாளில், சக், இன்னும் “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே” நடக்கிறேன் (சங்கீதம் 23:4) என்று பகிர்ந்து கொண்டார். அவருடைய மனைவியின் பரலோக வாழ்க்கை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் “மரணத்தின் நிழல்” இன்னும் அவருடனும் எலைனை பெரிதும் நேசித்த மற்றவர்களுடனும் இருந்தது.

மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் பயணிக்கும்போது, நம் ஒளியின் ஆதாரத்தை எங்கே காணலாம்? அப்போஸ்தலனாகிய யோவான், “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1 யோவான் 1:5). மேலும் யோவான் 8:12ல் இயேசு, “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” என்று சொல்லுகிறார்.

இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, நாம் “அவருடைய முகத்தின் வெளிச்சத்தில்” நடப்போம் (சங்கீதம் 89:15). மரண பள்ளத்தாக்கின் வழியாக நாம் பயணிக்கும் போது கூட, நம்முடன் இருப்பேன் என்றும் நமக்கு ஒளியின் ஆதாரமாக நம் தேவன் நமக்கு வாக்களித்திருக்கிறார்.

இயேசுவுக்கு ஒப்புவித்தல்

1951 ஆம் ஆண்டில், ஜோசப் ஸ்டாலினின் மருத்துவர், அவரது உடல்நிலையைப் பாதுகாப்பதற்காக அவரது பணிச்சுமையைக் குறைக்குமாறு அறிவுறுத்தினார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியாளர், அந்த மருத்துவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி அவரை கைது செய்தார். பொய்களால் பலரை ஒடுக்கிய கொடுங்கோலன் உண்மையைக் கடைப்பிடிக்க முடியவில்லை. மேலும் அவர் வழக்கம்போல, உண்மையைச் சொல்கிறவர்களை பணியை விட்டு அகற்றினார். ஆனால் உண்மை கடைசியில் வென்றது. ஸ்டாலின் 1953இல் இறந்தார்.

எரேமியா தீர்க்கதரிசி, தனது துணிகரமான தீர்க்கதரிசனங்களுக்காக கைது செய்யப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டார் (எரேமியா 38:1-6; 40:1). அவர் எருசலேமுக்கு என்ன சம்பவிக்கும் என்பதை யூதாவின் ராஜாவிடம் கூறினார். “நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும். அப்பொழுது... உம்முடைய ஆத்துமா பிழைக்கும்” (எரேமியா 38:20) என்று அவர் சிதேக்கியா ராஜாவிடம் கூறினார் (38:20). நகரைச் சூழ்ந்திருக்கும் இராணுவத்திடம் சரணடையத் தவறினால், அது நிலைமையை மோசமாக்கும். “உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டுபோவார்கள். நீரும் அவர்கள் கைக்கு தப்பிப்போகாமல்...” (வச. 23) என்று எரேமியா எச்சரிக்கிறார்.

அந்த உண்மையைச் செயல்படுத்த சிதேக்கியா தவறிவிட்டார். இறுதியில் பாபிலோனியர்கள் யூதேயாவின் ராஜாவைப் பிடித்து, அவனது குமாரர்கள் அனைவரையும் கொன்று, நகரத்தை தீக்கிரையாக்கினர் (அதி. 39).

ஒரு வகையில், ஒவ்வொரு மனிதனும் சிதேக்கியாவின் இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறான். பாவம் மற்றும் தவறான தீர்மானங்கள் என்ற நமது சொந்த வாழ்வின் சுவர்களுக்குள் நாம் சிக்கிக் கொள்கிறோம். பெரும்பாலும், நம்மைப் பற்றிய உண்மையைச் சொல்பவர்களைத் தவிர்ப்பதன் மூலம் விஷயங்களை மோசமாக்குகிறோம். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொன்னவரின் சித்தத்திற்கு நாம் சரணடைவது மட்டுமே நம்முடைய அடிப்படை தேவை.

நல்லெண்ணத்தை உருவாக்குதல்

சிறந்த வணிக நடைமுறைகளைப் பற்றி நாம் சிந்திக்கும் போது, முதலில் நினைவுக்கு வருவது கருணை மற்றும் பெருந்தன்மை போன்ற குணங்கள் அல்ல. ஆனால் தொழில்முனைவோர் ஜேம்ஸ் ரீயின் கூற்றுப்படி, அவைகள் தான் முதலில் நினைவுக்கு வரவேண்டும் என்கிறார். நிதி அழிவின் விளிம்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ரீயின் அனுபவத்தில், அவர் “நல்லெண்ணம்” – “இரக்கம் காண்பிக்கும் குணம்” மற்றும் கொடுக்கும் மனப்பான்மை போன்றவைகளே அந்த நிறுவனத்தை விளிம்பு நிலையிலிருந்து மாற்றி வளர்ச்சியின் பாதையில் கொண்டுவந்தது என்கிறார். இந்த குணங்களை மையப்படுத்துவது மக்களுக்கு ஒருங்கிணைக்கவும், புதுமைப்படுத்தவும், சிக்கலைத் தீர்க்கவும் தேவையான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது. ரீ சொல்லும்போது, “நல்லெண்ணம் என்பது ஒரு உண்மையான சொத்து. அது திரளாய் பெருகக்கூடிய சுபாவம் கொண்டது” என்கிறார்.

 

அன்றாட வாழ்க்கையிலும், மற்ற காரியங்களோடு ஒப்பிடும்போது, இரக்கம் போன்ற குணங்களை தெளிவற்ற மற்றும் அற்பமானதாக நினைப்பது இயல்பு. ஆனால் இத்தகைய குணங்கள் எல்லாவற்றிலும் மிக முக்கியமானவை என்று அப்போஸ்தலர் பவுல் நமக்கு கற்பிக்கிறார்.

புதிய விசுவாசிகளுக்கு பவுல் எழுதும்போது, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் முதிர்ச்சி பெற்ற அங்கத்தினர்களாய் அவர்களை மறுரூபமடையச்செய்வதே ஆவியின் செயல்பாடு என்று குறிப்பிடுகிறார் (எபேசியர் 4:15). அதற்காக ஒவ்வொரு வார்த்தையும், கிரியையும் மற்றவர்களை எடுப்பித்து கட்டுகிற வகையில் இருந்தால் அது மதிப்பு மிக்கதாய் இருக்கும் (வச. 29). இரக்கம், தயவு, மற்றும் மன்னிப்பு ஆகியவைகளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவப்படுத்துவதின் மூலமே கிறிஸ்துவில் மறுரூபமாக்கும் அனுபவத்திற்குள் நாம் வரமுடியும் (வச. 32).

பரிசுத்த ஆவியானவர் நம்மை மற்ற கிறிஸ்தவர்களிடத்திற்கு வழிநடத்தும்போது, நாம் ஒருவரையொருவர் பார்த்து கற்றுக்கொள்ளும்போது நாம் வளர்ந்து முதிர்ச்சியடைகிறோம்.

அனைவருக்கான தேவனின் இருதயம்

ஒன்பது வயது நிரம்பிய மகேஷ் தனது நெருங்கிய நண்பன் நிலேஷ_டன் அவர்களது வகுப்பு தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு வந்தான். பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தாயார், மகேஷைப் பார்த்தபோது, “போதுமான நாற்காலிகள் இல்லை," என்று சொல்லி அவனை உள்ளே வருவதற்கு அனுமதிக்கவில்லை. ஏழையாகத் தோற்றமளித்த தனது நண்பருக்கு இடம் கொடுக்க தரையில் உட்கார நிலேஷ் முன்வந்தான். ஆனால் அந்த பெண்மணி அதையும் அனுமதிக்கவில்லை. மனச்சோர்வடைந்த நிலேஷ், கொண்டுவந்த பரிசுப்பொருட்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு, மகேஷ_டன் வீடு திரும்பினான். இந்த நிராகரிப்பை அவனுடைய இதயம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அந்த சம்பவம் நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு, நிலேஷ் ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அவர் தனது வகுப்பறையில் ஒரு காலி நாற்காலியை வைத்திருக்கிறார். ஏன் என்று மாணவர்கள் கேட்டால், “யாருக்கும் வகுப்பறையில் எப்பொழுதும் இடமளிக்க வேண்டும்” என்பது தனது நினைவூட்டல் என்று அவர் விளக்குகிறார்.

எல்லா மக்களையும் நேசிக்கும் இயேசுவின் இருதயத்தை அவருடைய வாழ்க்கையில் நாம் காணக்கூடும்: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் (மத்தேயு 11:28). இந்த அழைப்பு “முதலாவது யூதருக்கு” (ரோமர் 1:16) என்னும் இயேசுவின் ஊழியத்தின் நோக்கத்திற்கு முரணாகத் தெரியலாம். ஆனால் இயேசுவை விசுவாசிக்கும் அனைவருக்கும் இரட்சிப்பு என்னும் பரிசு கொடுக்கப்படுகிறது. “விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை” (3:22) என்று பவுல் சொல்லுகிறார்.

அனைவருக்குமான கிறிஸ்துவின் அழைப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29). அவரது இளைப்பாறுதலை நாடும் அனைவருக்காகவும் அவர் திறந்த மனதுடன் காத்திருக்கிறார்.