1961லிருந்து குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் பெர்லின் சுவரால் பிரிக்கப்பட்டனர். கிழக்கு ஜெர்மானிய அரசாங்கத்தால் அந்த ஆண்டு அமைக்கப்பட்ட இந்த தடையானது, அதின் குடிமக்கள் மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச் செல்லாமல் தடுத்தது. 1949லிருந்து இந்த சுவர் கட்டப்பட்ட ஆண்டிற்குள்ளதாக, ஏறத்தாழ 2.5 மில்லியனுக்கும் அதிகமான கிழக்கு ஜெர்மானியர்கள் மேற்கு நோக்கிச் சென்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் 1987இல் சுவரில் நின்று, “இந்தச் சுவரை இடித்துவிடுங்கள்” என்று கட்டளையிட்டார். 1989இல் சுவர் இடிக்கப்பட்டது. ஜெர்மனியின் மகிழ்ச்சியான மறுஇணைப்பிற்கு வழிவகுத்தது.

பவுல் இயேசுவால் இடிக்கப்பட்ட “பகைச்சுவர்” பற்றி எழுதுகிறார் (எபேசியர் 2:14). யூதர்களுக்கும் (கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்) மற்றும் புறஜாதிகளுக்கும் (மற்ற அனைத்து மக்களுக்கும்) இடையே தடுப்புச்சுவர் இருந்தது. மேலும் இது பெரிய ஏரோதுவால் எருசலேமில் கட்டப்பட்ட பழங்கால ஆலயத்தின் தடுப்புச்சுவர் (சோரெக்) மூலம் அடையாளப்படுத்தப்பட்டது. அது புறஜாதிகளை கோவிலின் வெளிப் பிராகாரங்களுக்கு அப்பால் நுழையவிடாமல் தடுத்தது. ஆனால் இயேசு, யூதருக்கும் புறஜாதிகளுக்கும் இடையேயான பிரிவையும், தேவனுக்கும் மற்ற ஜனங்களுக்கும் இடையான பிரிவையும் சமரசம் செய்தார். அவர் சிலுவை மரணத்தின் மூலம், பகையாய் இருந்த நடுச்சுவரை தகர்த்து, இறுதிறத்தாரையும் ஒன்றாக்கினார் (வச. 14,16). மேலும் “சமாதானத்தின் சுவிசேஷம்” (வச. 17-18) கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தால் அனைவரும் ஒன்றுபடுவதை சாத்தியமாக்கியது.

 

இன்று, பல விஷயங்கள் நம்மை பிரிக்கக்கூடும். தேவன் நமக்குத் தேவையானதை கொடுப்பதால், கிறிஸ்துவில் காணப்படும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் அனுபவிக்கலாம் (வச. 19-22).