மிகவும் தாமதமாக, டாம் தனது போர் காலணியின் அடியில் குளிர்ந்த உணர்வை அடைந்தார். பாய்ந்தோடிய அட்ரினலின் என்னும் எரிபொருளின் தாக்கத்திலிருந்து விலகிச்சென்றார். பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொடிய வெடிகுண்டு வெடிக்கவில்லை. பின்னர், வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து 36 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை கண்டெடுத்தனர். டாம் அவருடைய அந்த காலணி கிழியும் வரை அணிந்திருந்தார். அவர் அதை தன்னுடைய அதிருஷ்ட காலணி என்று சொல்லிக்கொள்கிறார். 

அவருடைய உயிரைக் காப்பதற்கு அந்த காலணி பயன்பட்டதினால் உணர்ச்சிவசப்பட்டு டாம் அந்த காலணிகளை அணிந்திருக்கலாம். ஆனால் பொருட்களை “அதிர்ஷ்டம்” என்று கருதுவதற்கு அல்லது “ஆசீர்வதிக்கப்பட்டவைகள்” என்ற ஆன்மீக முத்திரையைக் கொடுக்க மக்கள் அடிக்கடி ஆசைப்படுகின்றனர். நாம் ஒரு பொருளையோ அல்லது அடையாளத்தையோ தேவனுடைய ஆசீர்வாதத்தின் ஆதாரமாக வைக்கும்போது அங்கே அபாயம் நிகழுகிறது. 

இஸ்ரவேலர்கள் இந்த பாடத்தை தங்களுடைய வாழக்கையின் கடினமான தருணத்தில் கற்றுக்கொண்டனர். பெலிஸ்தியப் படை அவர்களை யுத்தத்தில் வீழ்த்தியது. ஏன் தோல்வியடைந்தோம் என்று யோசிக்கும்வேளையில், நாம் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச்செல்லலாம் என்று யாரோ ஒருவர் ஆலோசனை சொல்கின்றனர் (1 சாமுவேல் 4:3). அது நல்ல யோசனையாகத் தோன்றியது (வச. 6–9). எல்லாவற்றிற்கும் மேலாக, உடன்படிக்கைப் பெட்டி பரிசுத்தமான ஒன்றாகக் கருதப்பட்டது.

ஆனால் இஸ்ரவேலர்களின் புரிதல் தவறானது. உடன்படிக்கைப் பெட்டியைக்கொண்டு அவர்களால் எதையும் திருப்பிக்கொண்டுவர முடியவில்லை. தங்களுடைய விசுவாசத்தை தேவன் மீது வைப்பதற்கு பதிலாக ஒரு பொருளின் மீது வைத்ததினால் யுத்தத்தில் இஸ்ரவேலர்கள் மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டது. பெலிஸ்தியர் பெட்டியையும் கைப்பற்றிக் கொண்டுபோய் விட்டனர் (வச. 10-11).

தேவன் நம்முடைய வாழ்க்கையின் செய்த நன்மைகளை நினைப்பூட்டும் நினைவுச்சின்னங்கள் நமக்கு அவசியப்படலாம். ஆனால் அவைகள் ஒருபோதும் ஆசீர்வாதத்தின் ஆதாரமாக இருப்பதில்லை. தேவன் மாத்திரமே ஆசீர்வாதத்தின் ஆதாரம்.