Archives: அக்டோபர் 2023

சாத்தியமில்லாத பரிசு

என் மாமியாரின் பிறந்தநாளுக்கு சரியான பரிசைக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன்: கை வளையலில் அவளுக்கு பிடித்தமான கல் பதிக்கப்பட்டிருந்தது! ஒருவருக்கு சரியான பரிசைக் கண்டுபிடிப்பது எப்போதுமே ஒரு முழுமையான மகிழ்ச்சி. ஆனால் ஒரு மனிதனுக்குத் தேவையான பரிசு நம் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் என்ன செய்வது? நம்மில் பலர் ஒருவருக்கு மன அமைதி, ஓய்வு அல்லது பொறுமையைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவற்றை விலை கொடுத்து வாங்கி பரிசுக்காகிதத்தில் சுற்றிக்கொடுப்பது சாத்தியமா?

இதுபோன்ற பரிசுகளை ஒருவர் மற்றவருக்கு வாங்கிக்கொடுப்பது சாத்தியமில்லை. ஆனால் மாம்ச ரூபத்தில் வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படிப்பட்ட சாத்தியமில்லாத ஒரு பரிசைக் கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். அதுவே சமாதானம் என்னும் பரிசாகும். இயேசு பரமேறி செல்லுவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை வாக்குப்பண்ணுகிறார்: இவர் “உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26) என்றும் சொல்லுகிறார். அவர்களுடைய இருதயம் பயப்படாமலும் கலங்காமலும் இருப்பதற்காக, இயேசு அவர்களுக்கு தன்னுடைய சமாதானத்தை விட்டுச் சென்றார். அவரே தேவனோடும், மற்றவர்களோடும், நமக்குள்ளும் கிரியை செய்யும் சமாதானம். 

நாம் விரும்புகிறவர்களுக்கு பொறுமையையோ அல்லது சரீர ஆரோக்கியத்தையோ நாம் பரிசாகக் கொடுக்க முடியாது. வாழ்க்கையின் போராட்டங்களை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு அவசியப்படும் சமாதானத்தையும் அவர்களுக்கு கொடுக்கும் அதிகாரம் நம்மிடத்தில் இல்லை. ஆனால் நிலையான சமாதானத்தை அருளும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்து அவர்களிடத்தில் நாம் பகிர்ந்துகொள்ள முடியும். 

நம்பிக்கைக்கு இணங்குதல்

ஒரு குளிர்காலக் காலையில் கண்மூடித்தனமான காட்சியை நான் எதிர்கொள்ள நேரிட்டது. ஒரு மேகத்தினாலான சுவர். “உறைந்த மேகம்” என்று வானிலை முன்னறிவிப்பாளர் அதை அழைத்தார். எங்கள் இருப்பிடத்திற்கு அரிதாக, இந்த மேகச் சுவர் இன்னும் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. நீல வானம் மற்றும் சூரிய ஒளியும் இன்னும் ஒருமணி நேரத்திற்குள் வந்துவிடும் என்று வானிலை அறிக்கை வெளியிடப்பட்டது. “இது சாத்தியமேயில்லை” என்று என் கணவரிடம் சொன்னேன். “எங்களால் ஒரு அடி முன்னால் பார்க்க முடியவில்லை.” ஆனால், ஒரு மணி நேரத்திற்குள், அந்த மேச்சுவர் மறைந்தது. வானம் ஒரு சூரிய ஒளியோடு கூடிய ஒரு தெளிவான நீல நிறமாக மாறியது.

ஒரு ஜன்னலில் நின்று, நான் வாழ்க்கையில் இதுபோன்ற மேகச்சுவரை மட்டுமே பார்க்க முடிகிறதே என்று என் நம்பிக்கையின் அளவை யோசித்தேன். “நான் கண்ணால் காண்கின்றவைகளை வைத்தே தேவனை நம்பிகிறேனா?” என்று என் கணவரிடம் கேட்டேன். 

எசேக்கியா ராஜா மரித்த பின்பு, சில கறைபடிந்த ராஜாக்கள் ஆட்சிக்கு வந்தபோது, ஏசாயாவும் இதே கேள்வியையே கேட்கிறார். யாரை நாம் நம்புவது? தேவன் ஏசாயாவுக்கு தரிசனத்தைக் கொடுத்து, எதிர்காலத்தில் நடக்கப்போகிறவைகளுக்காக தற்போது தேவனை நம்பலாம் என்று அவருடைய மனதை தேற்றுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி, “உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3) என்று சொல்லுகிறார். அத்துடன் “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்” (வச. 4) என்றும் வலியுறுத்துகிறார். 

நம்முடைய சிந்தை தேவனை மாத்திரம் நம்பும்போது, வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும்போது கூட நம்மால் அவரை விசுவாசிக்கக்கூடும். அதை தற்போது நம்மால் தெளிவாய் பார்க்கமுடியாது. ஆனால் அவரை நாம் விசுவாசிக்கும்போது, நமக்கான உதவி நம்மை நோக்கி வருகிறது என்பதை உறுதியாய் விசுவாசிக்கக்கூடும். 

அறிதலும் அன்புகூருதலும்

“என் மகனுக்கு உன்னைத் தெரியுமா?” என்ற பிரபல கட்டுரையில் விளையாட்டு எழுத்தாளர் ஜொனாதன் ஜார்க்ஸ் டெர்மினல், புற்றுநோயுடன் அவர் போரிடுவதையும், மற்றவர்கள் தனது மனைவியையும் இளம் மகனையும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற தனது ஏக்கத்தையும் எழுதியிருந்தார். முப்பத்தி நான்கு வயதான அவர் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அக்கட்டுரையை எழுதினார். விசுவாசியான ஜார்க்ஸ், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். ஆனால் அவருடைய தந்தை இறப்பதற்கு முன்பு, விதவைகளையும் திக்கற்றவர்களையும் ஆதரிக்கும் வேதப்பகுதியை அவருக்கு வாசித்துக் காண்பித்திருக்கிறார் (யாத்திராகமம் 22:22; ஏசாயா 1:17; யாக்கோபு 1:27). மேலும் அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய வார்த்தைகளில், “நான் உங்களை பரலோகில் பார்க்கும்போது, நான் கேட்கப் போவது ஒன்றே ஒன்றுதான் - என் மகனுக்கும் என் மனைவிக்கும் நீங்கள் நல்லவராக இருந்தீர்களா? . . . என் மகனுக்கு உங்களைத் தெரியுமா?” என்று எழுதுகிறார். 

“யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா” என்று தாவீது ஆச்சரியமாய் கேட்கிறானாம் (2 சாமுவேல் 9:1). அப்போது இரண்டு கால்களும் முடமான மேவிபோசேத் (வச. 3) என்று யோனத்தானின் குமாரன் ஒருவன் இருக்கிறான் என்று அவனை ராஜாவுக்கு முன்பு கொண்டுவந்தார்கள். தாவீது அவனைப் பார்த்து, “உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்” (9:7). தாவீது மேவிபோசேத்து என்று ஒருவன் இருக்கிறான் என்பதை கேள்விப்பட்ட மாத்திரத்தில், அவனுக்கு பரிவு காண்பிக்க தீர்மானிக்கிறான் (பார்க்க: 19:24-30). 

இயேசு நம்மை அவர் நேசிப்பதுபோல் மற்றவர்களை நாம் நேசிக்கும்பொருட்டு நமக்கு அழைப்பு விடுக்கிறார் (யோவான் 13:34). அவர் நம்மிலும், நம் மூலமாகவும் கிரியை செய்யும்போது, நாமும் மற்றவர்களை அறியவும் நேசிக்கவும் பிரயாசப்படுவோம்.

என் இருதயத்தின் கண்களை திறந்தருளும்

2001 ஆம் ஆண்டில், கிறிஸ்டோபர் டஃப்லி என்ற குறைமாத குழந்தை உயிர்பிழைத்து மருத்துவர்களை ஆச்சரிப்படுத்தியது. அவனுடைய அத்தை அவனை தத்தெடுக்கும் வரை ஐந்து மாதங்களாக அவன் மருத்துவ கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. நான்கு வயது கிறிஸ்டோபர் பார்வையற்றவனாகவும் மனவளர்ச்சி குன்றியவனாகவும் இருந்தாலும், சரியான இசை சுருதியுடன் இருப்பதை ஒரு ஆசிரியர் உணர்ந்தார். சரியாய் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தேவாலயத்தின் பலிபீடத்தில் கிறிஸ்டோபர் நின்று, “என் இதயத்தின் கண்களைத் திறந்தருளும்” என்றும் ஆங்கில பாடலை பாடினான். இந்த வீடியோ ஆன்லைனில் மில்லியன் கணக்கானவர்களை எட்டியது. 2020 இல், கிறிஸ்டோபர் ஊனமுற்ற வழக்கறிஞராக பணியாற்றுவதற்கான தனது இலக்குகளைப் பகிர்ந்து கொண்டார். தேவன் இதயத்தின் கண்களை திறந்தருளினால் பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்பதை அவன் நிருபித்துக் காண்பித்தான். 

பவுல் அப்போஸ்தலர் எபேசு திருச்சபையை அதனுடைய துணிகரமான விசுவாசத்திற்காய் பாராட்டுகிறார் (1:15-16). தேவன் அவர்களுக்கு “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” (வச. 17) கொடுத்து அவர்களை விளங்கிக்கொள்ளச் செய்யும்படிக்கு அவர் வேண்டுகிறார். தேவன் தன்னுடைய ஜனங்களுக்கு வாக்குப்பண்ணியிருக்கும் காரியங்களை பார்ப்பதற்கு அவர்களுடைய பிரகாசமான மனக்கண்களை திறக்கும்படிக்கு தேவனிடத்தில் விண்ணப்பிக்கிறார் (வச. 18).

தேவன் தன்னை நமக்கு வெளிப்படுத்தும்படிக்கு நாம் அவரிடத்தில் கேட்டுக்கொண்டால், அவரைக் குறித்து நாம் அதிகம் அறிந்துகொள்ளவும் அவருடைய நாமம், வல்லமை மற்றும் அதிகாரத்தை உறுதியுடன் அறிக்கையிடலாம் (வச. 19-23). கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினாலும், தேவ ஜனத்தின் மீதான அன்பினிமித்தமும், நம்முடைய இருதயத்தின் பிரகாசமான மனக்கண்களை திறந்தருளும்படிக்கு தேவனிடத்தில் விண்ணப்பித்து, அவருடைய வரம்பற்ற வாய்ப்புகளை நிருபிக்கும் ஜீவியத்தை ஜீவிக்கலாம்.