ஒரு குளிர்காலக் காலையில் கண்மூடித்தனமான காட்சியை நான் எதிர்கொள்ள நேரிட்டது. ஒரு மேகத்தினாலான சுவர். “உறைந்த மேகம்” என்று வானிலை முன்னறிவிப்பாளர் அதை அழைத்தார். எங்கள் இருப்பிடத்திற்கு அரிதாக, இந்த மேகச் சுவர் இன்னும் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. நீல வானம் மற்றும் சூரிய ஒளியும் இன்னும் ஒருமணி நேரத்திற்குள் வந்துவிடும் என்று வானிலை அறிக்கை வெளியிடப்பட்டது. “இது சாத்தியமேயில்லை” என்று என் கணவரிடம் சொன்னேன். “எங்களால் ஒரு அடி முன்னால் பார்க்க முடியவில்லை.” ஆனால், ஒரு மணி நேரத்திற்குள், அந்த மேச்சுவர் மறைந்தது. வானம் ஒரு சூரிய ஒளியோடு கூடிய ஒரு தெளிவான நீல நிறமாக மாறியது.

ஒரு ஜன்னலில் நின்று, நான் வாழ்க்கையில் இதுபோன்ற மேகச்சுவரை மட்டுமே பார்க்க முடிகிறதே என்று என் நம்பிக்கையின் அளவை யோசித்தேன். “நான் கண்ணால் காண்கின்றவைகளை வைத்தே தேவனை நம்பிகிறேனா?” என்று என் கணவரிடம் கேட்டேன். 

எசேக்கியா ராஜா மரித்த பின்பு, சில கறைபடிந்த ராஜாக்கள் ஆட்சிக்கு வந்தபோது, ஏசாயாவும் இதே கேள்வியையே கேட்கிறார். யாரை நாம் நம்புவது? தேவன் ஏசாயாவுக்கு தரிசனத்தைக் கொடுத்து, எதிர்காலத்தில் நடக்கப்போகிறவைகளுக்காக தற்போது தேவனை நம்பலாம் என்று அவருடைய மனதை தேற்றுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி, “உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3) என்று சொல்லுகிறார். அத்துடன் “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்” (வச. 4) என்றும் வலியுறுத்துகிறார். 

நம்முடைய சிந்தை தேவனை மாத்திரம் நம்பும்போது, வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும்போதுகூட நம்மால் அவரை விசுவாசிக்கக்கூடும். அதை தற்போது நம்மால் தெளிவாய் பார்க்கமுடியாது. ஆனால் அவரை நாம் விசுவாசிக்கும்போது, நமக்கான உதவி நம்மை நோக்கி வருகிறது என்பதை உறுதியாய் விசுவாசிக்கக்கூடும்.