Archives: அக்டோபர் 2023

உன்னிடத்திலுள்ளதை கிறிஸ்துவுக்காய் பயன்படுத்து

2001 இல் நிறுவப்பட்ட “சூவிங் ஹால் ஆஃப் ஃபேம”; பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது “தையல் கல்வி மற்றும் தயாரிப்பு மேம்பாடு மூலம் தனித்துவமான மற்றும் புதுமையான பங்களிப்புகளுடன் வீட்டு தையல் துறையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய” நபர்களை அங்கீகரிக்கிறது. 2005இல் இந்த நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட மார்த்தா புல்லென் போன்ற நபர்கள் இதில் உள்ளடங்குவர். அவள் “நீதிமொழிகள் 31 ஆம் அதிகாரத்தின் குணசாலியான ஸ்திரீயாய் அங்கீகரிக்கப்பட்டவர்… அவளுடைய வலிமை, உத்வேகம் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு யார் காரணம் என்பதை அவள் பகிரங்கமாய் சாட்சியிடத் தவறவில்லை.”

இந்த தையல் இயக்கமானது 21ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் இந்த இயக்கமானது முதலாம் நூற்றாண்டில் இஸ்ரவேல் தேசத்தில் இருந்துள்ளது. தபீத்தாள் என்னும் பேர்கொண்ட பெண் இந்த குணத்திற்கு பாத்திரவானாய் இருந்துள்ளாள். இவள் ஒரு கிறிஸ்துவின் விசுவாசி. தன்னுடைய சமுதாயத்தில் வாழ்ந்த ஏழை விதவைகளுக்கு அங்கிகளையும் வஸ்திரங்களையும் தைத்து உதவிசெய்துவந்தவள் (அப்போஸ்தலர் 9:36,39). அவள் வியாதிப்பட்டு மரித்தபின்பு, பேதுரு மூலமாய் அவளை உயிரோடு எழுப்பக்கூடுமோ என்று எண்ணி அவரை அழைத்துகொண்டுவந்தனர். அவர் வந்தபோது, அழுதுகொண்டிருந்த விதவைகள் தபீத்தாள் தைத்துக்கொடுத்த அங்கீகளையும் வஸ்திரங்களையும் அவரிடத்தில் காண்பித்தனர் (வச. 39). அவள் தன்னுடைய ஊரிலிருந்த மக்களுக்கு எப்போதும் உதவிசெய்தாள் என்பதற்கு இந்த வஸ்திரங்களே ஆதாரம் (வச. 36). தேவனுடைய வல்லமையினால் தபீத்தாள் மீண்டும் உயிரோடு எழுப்பப்பட்டாள். 

தேவன் நம்முடைய திறமைகளைப் பயன்படுத்தி நம்முடைய சமுதாயத்தையும் உலகத்தையும் கட்டியெழுப்பும் அழைப்பை நமக்கு அருளியிருக்கிறார். நாம் நம்முடைய திறமைகளை கிறிஸ்துவின் சேவைக்காய் அர்ப்பணிப்போம். அவர் நம்முடைய அன்பான இருதயத்தையும் ஜீவியத்தையும் எவ்வண்ணமாய் ஒன்றாக தைக்கிறார் என்பதை பார்ப்போம் (எபேசியர் 4:16).

நம் நம்பிக்கையின் நங்கூரம்

ஒரு மங்கலான சந்தில் அட்டைத் துண்டுகளுக்கு அடியில் மக்கள் தூங்கும் காட்சியை நான் படம்பிடித்தேன். “அவர்களுக்கு என்ன தேவை?” என்று என்னும் ஆறாம் வகுப்பு ஞாயிறுபள்ளியில் கேட்டேன். “உணவு” என்று யாரோ சொன்னார்கள். “பணம்” என்றான் இன்னொருவன். “பாதுகாப்பான இடம்,” என்று ஒரு சிறுவன் யோசித்து பதில் சொன்னான். பின்னர் ஒரு சிறுமி, “நம்பிக்கை” என்று பதில் சொன்னாள். 

“நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பதே நம்பிக்கை” என்று அவள்; விளக்கம்கொடுத்தாள். சவால்கள் காரணமாக, வாழ்க்கையில் நல்லதை எதிர்பார்ப்பது சாத்தியமேயில்லாதபட்சத்தில், அவள் அவ்வாறு பேசியது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. ஆயினும்கூட, என் மாணவர்களுடன் ஒத்துப்போகும் விதத்தில் வேதாகமம் நம்பிக்கையைக் குறித்து பேசுகிறது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதி” (எபிரெயர் 11:1) என்பது நிஜமானால், நல்லதே நடக்கும் என்று நாம் விசுவாசிப்பது சிறந்தது.

எந்த மேன்மையான நன்மையை கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கையோடே எதிர்பார்க்கலாம்? “அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பது” (4:1). விசுவாசிகளைப் பொறுத்தவரை, தேவன் கொடுக்கிற இளைப்பாறுதல் என்பது அவரது சமாதானம், இரட்சிப்பின் நம்பிக்கை, அவருடைய வல்லமையின் மீதான நம்பிக்கை மற்றும் எதிர்கால பரலோக வீட்டின் உறுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. நம்முடைய தேவைகளின் மத்தியில், ஏன் தேவனுடைய உத்திரவாதமும் இயேசுவின் இரட்சிப்பும் நம்முடைய வாழ்க்கையின் நங்கூரமாய் இருக்கிறது என்பதை விவரிக்கிறது (6:18-20). உலகத்திற்கும் நம்பிக்கை தேவை: சரியான மற்றும் மோசமான தருணங்களில் தேவன் நம்மை கைவிடாமல் பாதுகாப்பார் என்பது உறுதி. நாம் அவரை நம்பும்போது, அவர் தம்முடைய காலத்தில் நமக்காக எல்லாவற்றையும் செய்வார் என்பதை நாம் அறிய முற்படுவோம். 

நான் எம்மாத்திரம்?

கிசோம்போ தனது வாழ்க்கையின் பெரிய கேள்விகளைப் பற்றி யோசித்து, எரிகிற நெருப்பு ஜூவாலையின் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். நான் என்ன சாதித்தேன்? என்று யோசித்தான். “அதிகமில்லை” என்று பதில் விரைவாக வந்தது. அவன் பிறந்த மண்ணுக்குத் திரும்பினான், மழைக்காடுகளில் தனது தந்தை தொடங்கிய பள்ளியில் பணியாற்றினான். இரண்டு உள்நாட்டுப் போர்களில் இருந்து தப்பிய தனது தந்தையின் சக்திவாய்ந்த கதையையும் எழுத முயன்றான். இதையெல்லாம் செய்ய நான் எம்மாத்திரம்? என்று யோசித்தான். 

கிசோம்போவின் தவறான எண்ணம் மோசேயை நமக்கு நினைப்பூட்டுகிறது. தேவன் மோசேக்கு ஒரு வேலையைக் கொடுக்கிறார்: “நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்” (யாத்திராகமம் 3:10). அதற்கு மோசே, “நான் எம்மாத்திரம?;” (வச. 11) என்கிறான். 

அதற்கு பின்பாக மோசேயிடத்திலிருந்த வந்த பெலவீனமான சாக்குபோக்குகளைத் தொடர்ந்து தேவன் அவனிடத்தில், “உன் கையிலிருக்கிறது என்ன என்றார்” அதற்கு அவன் “ஒரு கோல் என்றான்” (வச. 4). தேவனுடைய பெலத்தினால் மோசே பார்வோனை சந்திக்கக்கூடும். அவனுடைய கையில் தேவன் எகிப்தியர்களின் தெய்வமான பாம்பை கொடுத்தனுப்பினார். ஒரே மெய்யான தேவனுக்கு முன்பாக எகிப்திய விக்கிரகங்களுக்கு வல்லமையில்லை. 

கிசோம்போவும் மோசேயைப் போல் யோசித்து, கர்த்தருடைய வார்த்தையை உணர்ந்தான்: நீ என்னையும் என்னுடைய வார்த்தையையும் உடையவனாயிருக்கிறாய்.” அவனுடைய தகப்பனாருடைய வாழ்க்கைக் கதையைக் குறித்து அவன் எழுதினால் தேவனுடைய வல்லமையைக் குறித்து அநேகர் அறிந்துகொள்ளக்கூடும் என்று அவனுடைய நண்பர்களும் அவனை உற்சாகப்படுத்தினர். அவன் தனிமையாய் இல்லை. 

நம்முடைய சொந்த முயற்சிகள் போதுமானதல்ல. ஆனால் “நான் உன்னோடே இருப்பேன்” (3:12) என்று நாம் ஆராதிக்கிற தேவன் சொல்லுகிறார். 

தேவனுடைய எதிர்பாராத வழிகள்

போதகர் தன்னுடைய பிரசங்க காகிதத்தை தன் கண்களுக்கு அருகாமையில் கொண்டுவந்து அதைப் பார்த்து படித்தார். அவர் கிட்டப்பார்வை கொண்டவர் என்பதினால், அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர் கவனமாய் படிக்கும்பொருட்டு அவ்வாறு செய்தார். ஆகிலும் ஜோனத்தன் எட்வர்ட்ஸின் பிரசங்கங்கள், எழுப்புதல் தீயை பரவச்செய்து, ஆயிரக்கணக்கானோரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்தது. 

தேவன் அடிக்கடி எதிர்பாராத காரியங்களைக் கொண்டு அவருடைய நேர்த்தியான சித்தத்தை நிறைவேற்றுகிறார். மக்களை தேவனுடைய சிலுவை அன்பிற்கு நேராய் ஈர்க்கும் முயற்சியில் எழுத்துப்பணியை ஏறெடுத்த பவுல் அப்போஸ்தலர், “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரிந்தியர் 1:27) என்று எழுதுகிறார். தெய்வீக ஞானமானது தவிர்க்கமுடியாத சக்தியுடன் வரும் என்று உலகம் எதிர்பார்த்தது. மாறாக, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற இயேசு சாதாரணமாகவும் தாழ்மையின் ரூபத்திலும் வந்தார். அதனால் “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (வச. 30).

நித்தியமான, அனைத்து ஞானமுமுள்ள தேவன் ஒரு மனிதக் குழந்தையாக இவ்வுலகத்தில் அவதரித்தார். அவருடைய வீட்டிற்கு செல்லும் வழியைக் நமக்குக் காண்பிப்பதற்காக, அவர் வளர்ந்து, துன்பப்பட்டு, மரித்து, உயிரோடு எழுத்தளுளினார். நம்முடைய சொந்த பலத்தில் நம்மால் ஒருபோதும் சாதிக்க முடியாத பெரிய காரியங்களைச் செய்வதற்கு அவர் தாழ்மையான வழிகளையும் மக்களையும் பயன்படுத்த விரும்புகிறார். நாம் சித்தமாயிருந்தால், அவர் நம்மையும் பயன்படுத்தக்கூடும்.