கிசோம்போ தனது வாழ்க்கையின் பெரிய கேள்விகளைப் பற்றி யோசித்து, எரிகிற நெருப்பு ஜூவாலையினைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். நான் என்ன சாதித்தேன்? என்று யோசித்தான். “அதிகமில்லை” என்று பதில் விரைவாக வந்தது. அவன் பிறந்த மண்ணுக்குத் திரும்பினான், மழைக்காடுகளில் தனது தந்தை தொடங்கிய பள்ளியில் பணியாற்றினான். இரண்டு உள்நாட்டுப் போர்களில் இருந்து தப்பிய தனது தந்தையின் சக்திவாய்ந்த கதையையும் எழுத முயன்றான். இதையெல்லாம் செய்ய நான் எம்மாத்திரம்? என்று யோசித்தான். 

கிசோம்போவின் தவறான எண்ணம் மோசேயை நமக்கு நினைப்பூட்டுகிறது. தேவன் மோசேக்கு ஒரு வேலையைக் கொடுக்கிறார்: “நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்” (யாத்திராகமம் 3:10). அதற்கு மோசே, “நான் எம்மாத்திரம?;” (வச. 11) என்கிறான். 

அதற்கு பின்பாக மோசேயிடத்திலிருந்து வந்த பெலவீனமான சாக்குபோக்குகளைத் தொடர்ந்து தேவன் அவனிடத்தில், “உன் கையிலிருக்கிறது என்ன என்றார்” அதற்கு அவன் “ஒரு கோல் என்றான்” (வச. 4). தேவனுடைய பெலத்தினால் மோசே பார்வோனை சந்திக்கக்கூடும். அவனுடைய கையில் தேவன் எகிப்தியர்களின் தெய்வமான பாம்பை கொடுத்தனுப்பினார். ஒரே மெய்யான தேவனுக்கு முன்பாக எகிப்திய விக்கிரகங்களுக்கு வல்லமையில்லை. 

கிசோம்போவும் மோசேயைப் போல் யோசித்து, கர்த்தருடைய வார்த்தையை உணர்ந்தான்: நீ என்னையும் என்னுடைய வார்த்தையையும் உடையவனாயிருக்கிறாய்.” அவனுடைய தகப்பனாருடைய வாழ்க்கைக் கதையைக் குறித்து அவன் எழுதினால் தேவனுடைய வல்லமையைக் குறித்து அநேகர் அறிந்துகொள்ளக்கூடும் என்று அவனுடைய நண்பர்களும் அவனை உற்சாகப்படுத்தினர். அவன் தனிமையாய் இல்லை. 

நம்முடைய சொந்த முயற்சிகள் போதுமானதல்ல. ஆனால் “நான் உன்னோடே இருப்பேன்” (3:12) என்று நாம் ஆராதிக்கிற தேவன் சொல்லுகிறார்.