ஒரு மங்கலான சந்தில் அட்டைத் துண்டுகளுக்கு அடியில் மக்கள் தூங்கும் காட்சியை நான் படம்பிடித்தேன். “அவர்களுக்கு என்ன தேவை?” என்று ஆறாம் வகுப்பு ஞாயிறுபள்ளியில் கேட்டேன். “உணவு” என்று யாரோ சொன்னார்கள். “பணம்” என்றான் இன்னொருவன். “பாதுகாப்பான இடம்,” என்று ஒரு சிறுவன் யோசித்து பதில் சொன்னான். பின்னர் ஒரு சிறுமி, “நம்பிக்கை” என்று பதில் சொன்னாள்.
“நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பதே நம்பிக்கை” என்று அவள்; விளக்கம்கொடுத்தாள். சவால்கள் காரணமாக, வாழ்க்கையில் நல்லதை எதிர்பார்ப்பது சாத்தியமேயில்லாதபட்சத்தில், அவள் அவ்வாறு பேசியது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. ஆயினும்கூட, என் மாணவர்களுடன் ஒத்துப்போகும் விதத்தில் வேதாகமம் நம்பிக்கையைக் குறித்து பேசுகிறது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதி” (எபிரெயர் 11:1) என்பது நிஜமானால், நல்லதே நடக்கும் என்று நாம் விசுவாசிப்பது சிறந்தது.
எந்த மேன்மையான நன்மையை கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கையோடே எதிர்பார்க்கலாம்? “அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பது” (4:1). விசுவாசிகளைப் பொறுத்தவரை, தேவன் கொடுக்கிற இளைப்பாறுதல் என்பது அவரது சமாதானம், இரட்சிப்பின் நம்பிக்கை, அவருடைய வல்லமையின் மீதான நம்பிக்கை மற்றும் எதிர்கால பரலோக வீட்டின் உறுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. நம்முடைய தேவைகளின் மத்தியில், ஏன் தேவனுடைய உத்திரவாதமும் இயேசுவின் இரட்சிப்பும் நம்முடைய வாழ்க்கையின் நங்கூரமாய் இருக்கிறது என்பதை விவரிக்கிறது (6:18-20). உலகத்திற்கும் நம்பிக்கை தேவை: சரியான மற்றும் மோசமான தருணங்களில் தேவன் நம்மை கைவிடாமல் பாதுகாப்பார் என்பது உறுதி. நாம் அவரை நம்பும்போது, அவர் தம்முடைய காலத்தில் நமக்காக எல்லாவற்றையும் செய்வார் என்பதை நாம் அறிய முற்படுவோம்.
வேதம் எவ்விதம் உங்களை உற்சாகப்படுத்தி உங்களுக்கு நம்பிக்கையையும் உறுதியையும் கொடுக்கிறது? எந்தெந்த காரியங்களில் நீங்கள் தேவனுக்கு நன்றி செலுத்தலாம்?
அன்பான தேவனே, என்னுடைய விசுவாசம் பெலனுள்ளது என்பதினால் அல்ல, நீர் வாக்குப்பண்ணியதை நிறைவேற்றுகிறவர் என்பதினால் உம்மை நான் நம்பியிருக்கிறேன்.