“மெல்லமான ஆடை வடிவமைப்பு” பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த பிரபல இயக்கமானது, வேகமாகவும் மலிவாகவும் ஆடைகளை உற்பத்திசெய்யும் இயக்கத்திற்கு எதிரானது. இந்த வேகமான பாணியில் உருவாக்கப்படும் ஆடைகள் கடைவீதிகளுக்கு விற்பனைக்கு வந்த மாத்திரத்திலேயே, பழமையானதாக மாறிவிடுகிறது. அதிலும் சில பெரிய நிறுவனங்கள் அதிக அளவிலான ஆடைகளை அதே பாணியில் உற்பத்திசெய்து, அந்த வடிவமைப்பை பழமையானதாக மாற்றிவிடுகிறது.
ஆனால் மெல்லமான ஆடை வடிவமைப்பு இயக்கமானது, பொறுமையாக மக்களை அணுகும்படிக்கு வலியுறுத்துகிறது. நவீன யுகத்திற்கேற்றாற்போல் உடனே நம்முடைய ஆடையை மாற்றிக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்கு மத்தியில், அந்த இயக்கமானது நேர்த்தியாகவும் தரமாகவும், நீண்டகாலத்திற்கு உழைக்கக்கூடிய ஆடைகளை வடிவமைத்து அதை தேர்ந்தெடுக்க வலியுறுத்துகிறது.
மெல்லமான இந்த ஆடை வடிவமைப்பு இயக்கத்தின் அழைப்பை ஏற்றபோது, வேகமான ஆடை வடிவமைப்பு இயக்கத்தின் நவீன ஆடையை தேர்ந்தெடுக்கும் பரபரப்பான எண்ணத்தைக் குறித்து நான் ஆச்சரியப்பட்டதுண்டு. கொலோசெயர் 3இல், கிறிஸ்துவில் மறுரூபமாக்கப்படும் அனுபவமானது துரிதமாய் நிகழும் காரியமல்ல என்பதை பவுல் வலியுறுத்துகிறார். இது வாழ்நாள் முழுவதும் மெல்லமாய் நிகழும் மறுரூப அனுபவமாகும்.
நவீன உலக ஆடைகளால் நாம் நம்மை அலங்கரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதைப் பார்க்கிலும், “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமை” (வச. 12) என்று நம்முடைய தாகத்தை மாற்றிக்கொள்ள பிரயாசப்படுவோம். கிறிஸ்து நம்முடைய இருதயத்தை மறுரூபமாக்கும் இந்த நித்திய பயணத்தில், நாம் பொறுமையைக் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம் (வச. 15).
நவீன காலத்தின் ஆடை வடிவமைப்புகளை உடுத்திக்கொள்ள நீங்கள் சோதிக்கப்படுகிறீர்களா? கிறிஸ்துவில் திருப்தியாய் ஜீவிக்க எது உங்களுக்கு உதவுகிறது?
அன்பான தேவனே, என்னுடைய கவலைகளை உம்மீது வைத்துவிட்டு, இளைப்பாறுதலின் பாதையில் உம்மோடு நடந்துவருவதற்கு ஏங்குகிறேன்.