ஜான் எம். பாரி தனது பிரபல புத்தகமான “தி கிரேட் இன்ஃப்ளூயன்ஸா”வில் 1918 காய்ச்சல் தொற்றுநோய் பற்றிய கதையை விவரிக்கிறார். சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பில் இருந்து பிடிபடுவதற்குப் பதிலாக, ஒரு பெரிய பாதிப்பை எவ்வாறு எதிர்பார்த்தார்கள் என்பதை பாரி வெளிப்படுத்துகிறார். முதல் உலகப் போர், நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் அகழிகளில் அடைக்கப்பட்டு, எல்லைகளைத் தாண்டிச் செல்வது, புதிய வைரஸ்களைக் கட்டவிழ்த்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். ஆனால் அழிவைத் தடுக்க இந்த அறிவு பயனற்றது. சக்திவாய்ந்த தலைவர்கள், போர் மேளங்களை அடித்து, வன்முறையை செயல்படுத்தினர். தொற்றுநோய் நிபுணர்கள், போரின் படுகொலையில் கொல்லப்பட்ட இருபது மில்லியனையும் சேர்த்து ஐம்பது மில்லியன் மக்கள் தொற்றுநோயில் இறந்ததாக மதிப்பிடுகின்றனர்.
நம்முடைய மாம்சீக அறிவானது தீமையிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள போதுமான தீர்வல்ல என்பதை நாம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டேயிருக்கிறோம் (நீதிமொழிகள் 4:14-16). நாம் அபரிமிதமான அறிவைப் பெற்றிருந்தாலும், குறிப்பிடத்தக்க நுண்ணறிவுகளை திறமையாய் செயல்படுத்தினாலும், நாம் ஒவ்வொருவரையும் காயப்படுத்திக்கொள்வதை நிறுத்தமுடியவில்லை. காரிருளுக்கு நம்மை அழைத்துச் செல்லும் துன்மார்க்கரின் பாதையில் நாம் செல்ல முடியாது. நாம் சிறந்த அறிவை பெற்றிருந்தாலும், எதில் நாம் இடறுகிறோம் என்பதை நம்மால் கண்டுபிடிக்க இயலாது (வச. 19).
ஆகையினால் தான் நாம் ஞானத்தையும் புத்தியையும் சம்பாதிக்க அறிவுறுத்தப்படுகிறோம் (வச. 5). ஞானமானது, நம்முடைய புத்தியில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது. நமக்கு தேவையான மெய்யான தெய்வீக ஞானமானது தேவனிடத்திலிருந்து நமக்கு வருகிறது. நம்முடைய அறிவு எப்போதும் குறைவுள்ளது. ஆனால் நமக்கு தேவையானதை அவருடைய ஞானம் நமக்கு அருளுகிறது.
எங்கே மனித ஞானம் தோற்றுப்போகிறது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? தேவனுடைய ஞானமானது, எந்த விதத்தில் இன்னும் நேர்த்தியான வாழ்க்கை வாழ உங்களை தூண்டுகிறது?
அன்பான தேவனே, நான் பெருமையோடு போராடிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய அறிவு என்னை காப்பாற்றவில்லை. உம்முடைய சத்தியத்தை தயவாய் எனக்கு போதித்தருளும்.