மரிக்கும் எவரும் “நான் சுயநலமாகவும், என்னுடைய தேவையை மட்டும் சந்தித்துக்கொண்டதற்காகவும், என்னை மட்டும் சரியாய் பாதுகாத்துக்கொண்டு வாழ்ந்ததற்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று மகிழ்ச்சியடைவதில்லை” என்று பார்க்கர் பாமர் பட்டம்பெறும் விழாவில் மாணவர்களுக்கு அறிவித்தார். ஆகையால் “திறந்தமனதுடன் கூடிய தயாளகுணத்தை உலகிற்கு அர்ப்பணியுங்கள்” என்று வலியுறுத்தினார்.
ஆனால் பார்க்கர் தொடர்ந்து, இந்த வாழ்க்கைமுறையை நீங்கள் தத்தெடுத்துக்கொள்வது என்பது, “உங்களுக்கு எவ்வளவு குறைவாய் தெரிந்திருக்கிறது என்பதையும் தோல்வியடைவது எப்படி” என்பதையும் கற்றுக்கொள்வதைக் குறிக்கிறது என்கிறார். “இந்த உலகத்தின் சேவைக்காய் தன்னை அர்ப்பணிக்கிறவர்கள், அறியாத ஒரு பாதையில், மீண்டும் மீண்டும் விழுந்து, மீண்டும் மீண்டும் எழுந்து, மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ளும் ஒரு சிறுபிள்ளையின் சிந்தையை பிரஸ்தாபப்படுத்தவேண்டும்.
இரக்கத்தின் அடித்தளத்தில் நம் வாழ்வு கட்டமைக்கப்படும் போதுதான், அச்சமற்ற “திறந்த இதயம் கொண்ட தாராள மனப்பான்மை” போன்ற ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தைக் காணலாம். பவுல் தனது உடன் ஊழியர் தீமோத்தேயுவுக்கு சொன்னதுபோல, தேவன் நமக்கு அளித்த கிருபைவரத்தை அனல்மூட்டி எழுப்பிவிட்டு (2 தீமோத்தேயு 1:5), தேவனுடைய கிருபையே நம்மை இரட்சித்து, நோக்கமுள்ள வாழ்க்கை வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது (வச. 9) என்பதை அறிவோம். அவர் நம்முடைய சோதனைகளை மேற்கொள்ள “பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியை” (வச. 7) நமக்குக் கொடுக்கிறார். நாம் இடறிவிழும்போது அவருடைய அன்பு நம்மை தாங்கி, வாழ்நாள் முழுதும் நம்மை நடத்துகிறது (வச. 13-14).
பயந்து வாழ எது உங்களை தூண்டுகிறது? தேவனுடைய கிருபையும் வல்லமையும் அவருக்காக மிகவும் துணிச்சலாய் வாழ உங்களுக்கு எப்படி உதவுகிறது?
ஆண்டவரே, நாங்கள் பயந்து, தோற்றுபோன வாழ்க்கை வாழவேண்டிய நிலை எங்களுக்கு இல்லாததால் உமக்கு நன்றி. உம்முடைய தைரியத்தில் சாய்ந்துகொள்ள எங்களுக்கு உதவிசெய்யும்.