“சபை முடிந்துவிட்டதா?” ஞாயிறு ஆராதனை முடிவடையும்போது, இரண்டு குழந்தைகளுடன் எங்கள் தேவாலயத்திற்கு வந்த ஒரு இளம் தாய் கேட்டார். ஆனால் வரவேற்பில் நின்றிருந்தவர், அருகாமையில் ஒரு திருச்சபை இருக்கிறது; அங்கே இரண்டு ஆராதனைகள் நடைபெறுகிறது. நீங்கள் அங்கே கடந்துசெல்லலாம் என்று அவளை வழிநடத்தினார். அங்கு செல்ல வாகன வசதியை விரும்புகிறீர்களா? என்று கேட்க, அந்த இளம் தாய் ஆம்! அந்த திருச்சபைக்கு என்னை கொண்டுபோய்விட்டால் நான் நன்றியோடிருப்பேன் என்றாள். அவள் போன பின்பு, அவளை வரவேற்ற அந்த நபர், “சபை முடிந்துவிட்டதா?” என்ற அவளுடைய கேள்வியை மனதிற்குள் தியானித்து, “தேவனுடைய சபை முடிவில்லாமல் எப்போதும் தொடரக்கூடியது” என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டாராம்.
திருச்சபை என்பது உடைந்துபோகக்கூடிய ஒரு கட்டிடம் இல்லை. ஆகையால் பவுல் திருச்சபையைக் குறித்து பதிவிடும்போது, “நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்” (எபேசியர் 2:19-22) என்று எழுதுகிறார்.
இயேசு தன்னுடைய திருச்சபையை நித்தியத்திற்காய் ஸ்தாபித்திருக்கிறார். திருச்சபை இன்று சந்திக்கும் சவால்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், “பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்தேயு 16:18) என்று அறிக்கையிடுகிறார்.
இந்த ஊக்கப்படுத்தும் கண்ணாடி வழியாக, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாகும்பொருட்டு திருச்சபையையும் அதிலுள்ள அங்கத்தினர்களையும் நாம் பார்க்கலாம்.
உங்களுடைய ஸ்தல சபையில் இருக்கும் எது உங்களை பெருமைப்படுத்துகிறது? தேவனுடைய உலகளாவிய திருச்சபையின் வளர்ச்சிக்கு நீங்கள் எந்த விதத்தில் பங்காற்றுவீர்கள்?
அன்பான இயேசுவே, உம்முடைய திருச்சபையின் பகுதியாக உம் மீது என்னைக் கட்டும்.