சரியான ஒன்றைச் செய்வது
“ஜேசன்” என்ற கைதியின் கடிதம் என்னையும் என் மனைவியையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக நாய்க்குட்டிகளை, "வளர்ப்பு" நாய்களாக பயிற்றுவிக்கிறோம். அத்தகைய ஒரு நாய்க்குட்டி அடுத்த பயிற்சி கட்டத்திற்கு தேர்ச்சி பெற்றது. அது சிறை கைதிககளால் பயிற்றுவிக்கப்பட்ட நாயாகும். ஜேசன் எங்களிடம் எழுதிய இக்கடிதம், அவரது கடந்த காலத்தின் வேதனையை வெளிப்படுத்தியது. பின்னர் அவன் கூறினான், "ஸ்னிக்கர்ஸ் நான் பயிற்றுவித்த பதினேழாவது சிறந்த நாய். அது என்னை நிமிர்ந்து பார்த்த போது, இறுதியில் நான் சரியான ஏதோ ஒரு காரியத்தைச் செய்தது போல் உணர்ந்தேன்".
மனவருத்தம் என்பது ஜேசனுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும்தான். யூதாவின் ராஜாவான மனாசேக்கு அனைத்தும் ஏராளம் இருந்தது. 2நாளாகமம் 33, அவனுடைய சில அட்டூழியங்களை கோடிட்டுக் காட்டுகிறது: புறமத தேவர்களுக்கு வெளிப்படையாகவே பாலியல் சார்ந்த பலிபீடங்களைக் கட்டுதல் (வ. 3), சூனியம் செய்தல் மற்றும் தனது சொந்தக் குழந்தைகளை பலியிடுதல் (வ. 6). அவன் இந்த மோசமான பாதையில் முழு தேசத்தையும் வழிநடத்தினான் (வச. 9).
“கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்” (வ.10. இறுதியில், தேவன் அவனது கவனத்தை திருப்பினார். பாபிலோனியர்கள் படையெடுத்து, ”அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்”(வ.11), ”தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்” (வ.12) தேவன் அவனுக்கு செவிசாய்த்தார், அவனை மீண்டும் ராஜாவாக மாற்றினார். மனாசே புறமத நடைமுறைகளுக்குப் பதிலாக, உண்மையான ஒரே தேவ வழிபாட்டைத் துவங்கினான் (வ. 15-16).
உங்கள் மனவருத்தங்கள் உங்களை மேற்கொண்டு விடும் போல் தோன்றுகிறதா? இப்போதும் தாமதமாகவில்லை. மனந்திரும்புதலின் தாழ்மையான ஜெபம் செய்யுங்கள். தேவன் அதைக் கேட்பார்.
எனது நோக்கம் என்ன?
"நான் மிகவும் பயனற்றவனாக உணருகிறேன்" என ஹெரால்டு கூறினார். "விதவைகள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் சொந்த குடும்பங்களுடன் மும்முரமாக இருக்கிறார்கள், சுவரில் நிழல்களைப் பார்த்துக்கொண்டு அமைதியான மதியங்களை செலவிடுகிறார்கள்" என அவர் தனது மகளிடம் அடிக்கடி கூறுவார். “நான் வயதாகிவிட்டேன், நிறைவான வாழ்க்கையையும் வாழ்ந்து விட்டேன். இனி எனக்கு எந்த நோக்கமும் இல்லை. தேவன் என்னை எந்த நேரத்திலும் தம்மிடத்திற்கு அழைத்துச் செல்வார்” என்பார்.
இருப்பினும், ஒரு பிற்பகல் உரையாடல் ஹெரால்டின் மனதை மாற்றியது. "என் பக்கத்து வீட்டுக்காரருக்கு, அவருடைய குழந்தைகளுடன் சில பிரச்சனைகள் இருந்தது. அதனால் நான் அவருக்காக ஜெபித்தேன்" என்று ஹெரால்டு கூறினார். “பின்னர், நான் அவருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்". அப்பொழுதுதான் என் வாழ்க்கைக்கு இன்னும் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்! இயேசுவைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்கும் வரை, நான் அவர்களுக்கு இரட்சகரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றார்.
ஹெரால்டு தனது விசுவாசத்தை எப்போதும் போன்ற சாதாரண சந்திப்பில் பகிர்ந்தபோது, அவரது அயலாகத்தாரின் வாழ்கை மாறியது. 2தீமோத்தேயு 1 ல், அப்போஸ்தலனாகிய பவுல் இன்னொருவரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு, தேவனால் பயன்படுத்தப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றி குறிப்பிடுகிறார்: பவுலின் இளம் சக ஊழியனான தீமோத்தேயுவின் வாழ்க்கையில் அவரது பாட்டி லோவிசாள் மற்றும் தாயார் ஐனிக்கேயாள் ஆகியோர் "மாயமற்ற விசுவாசத்தை" கொண்டிருந்தனர் (வ.5) எனக் காண்கிறோம். ஒரு சாதாரண குடும்பத்தில் அன்றாட நிகழ்வுகள் மூலம், இளம் தீமோத்தேயு ஒரு மாயமற்ற விசுவாசத்தைக் கற்றுக்கொண்டார். அவனுடைய வளர்ச்சி, இயேசுவின் உண்மையுள்ள சீஷனாகவும், இறுதியில் எபேசு தேவாலயத்தின் தலைவனாக அவனுடைய ஊழியத்தை வடிவமைத்தது.
நம்முடைய வயது, பின்னணி அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும், இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் நமக்கும் உண்டு
ஜெபமும், மாற்றமும்
1982 ஆம் ஆண்டில், போதகர் கிறிஸ்டியன் ஃபூரர் ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் செயின்ட் நிக்கோலஸ் தேவாலயத்தில் திங்கட்கிழமை ஜெபக் கூட்டங்களைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக உலகளாவிய வன்முறை, அடக்குமுறை மற்றும் கிழக்கு ஜெர்மன் ஆட்சியின் நடுவிலும் தேவனிடம் சமாதானம் வேண்டி ஒரு சிலர் கூடி ஜெபித்தனர். கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தேவாலயங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த போதிலும், சபை வாசலுக்கு வெளியே வெகுஜனக் கூட்டம் வரும் வரை, அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அக்டோபர் 9, 1989 அன்று, எழுபதாயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்து, அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். எந்த கலவரத்திற்கும் பதிலடி கொடுக்க ஆறாயிரம் கிழக்கு ஜெர்மன் போலீசார் தயாராக இருந்தனர். கூட்டம் அமைதியாக இருந்தது, ஆனால் வரலாற்றாசிரியர்கள் இந்நாளை ஒரு வரலாற்றுத சிறப்பாகவே கருதுகின்றனர். ஒரு மாதம் கழித்து, பெர்லின் சுவர் இடிந்து விழுந்தது. பெரிய மாற்றம் ஜெபக்கூட்டத்துடன் தொடங்கியது.
நாம் தேவனிடம் திரும்பி, அவருடைய ஞானத்தையும், பலத்தையும் நம்பத் தொடங்கும் போது, விஷயங்கள் பெரும்பாலும் மாறவும், மாற்றி அமைக்கப்படவும் தொடங்குகின்றன. இஸ்ரவேலைப் போலவே, "[நம்] துன்பத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது," நம்முடைய மிக மோசமான இக்கட்டான நிலைகளை, ஆழமாக மாற்றியமைக்கவும், நம்முடைய மிகவும் வேதனையான கேள்விகளுக்கு பதிலளிக்கவும் கூடிய தேவனை நாம் கண்டு கொள்வோம் (சங்கீதம் 107:28). தேவன் "கொந்தளிப்பை அமர்த்துகிறார்", "அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும்" மாற்றுகிறார் (வச. 29, 35). நாம் யாரிடம் ஜெபிக்கிறோமோ, அவரே நமக்கு விரக்தியிலிருந்து நம்பிக்கையையும், அலங்கோலத்திலிருந்து அழகையும் கொண்டுவருகிறவர்.
ஆனால் தேவன்தான் (அவரது காலத்தில், நம்முடையது அல்ல) மாற்றத்தை ஏற்படுத்துகிறவர். அவர் செய்யும் மறுரூபமாக்கும் பணியில் நாம் எவ்வாறு பங்கு கொள்கிறோம் என்பதே ஜெபம்.
அனுதின அதிகாரம்
“ஒவ்வொரு வினாடியும் புனிதமானது” என்பது உணவைத் தயாரிப்பது, துணி துவைப்பது போன்ற பல்வேறு செயல்களுக்கான பிரார்த்தனைகளின் அழகான புத்தகமாகும். அதாவது மீண்டும், மீண்டும் செய்யக்கூடிய பணிகள் அல்லது அவசியமான மற்றும் சாதாரணமாக உணரக்கூடிய பணிகளைக் குறிக்கிறது. இப்பணிகள் சலிப்பூட்டுகிறவைகளாயிருக்கும். இவை எழுத்தாளரான ஜி.கே. செஸ்டெர்டென்னின் வார்த்தைகளை எனக்கு நினைப்பூட்டுகிறது. “உணவுக்கு முன் கிருபை வேண்டும் என்று கேட்கிறீர்கள். அது நல்லது தான். ஆனால் நான் வர்ணம் தீட்டுவதற்கு முன்னும், நீச்சல் அடிப்பதற்கு முன்னும், வேலி இடுவதற்கு முன்னும், குத்துச்சண்டை போடும் முன்னும், நடக்கும் முன்னும், விளையாடும் முன்னும், நடனமாடும் முன்னும், பேனாவிற்கு மையை ஊற்றும் முன்னும் தேவனுடைய கிருபைக்காக கேட்கிறேன்.”
இத்தகைய ஊக்கம் எனது நாளின் செயல்பாடுகள் குறித்த எனது கண்ணோட்டத்தை மாற்றியமைக்கிறது. சில சமயங்களில் ஆவிக்குரிய வாழ்க்கையில், முக்கியமானது, முக்கியமற்றது என இரண்டு வகைகளாக பிரிக்க முற்படுகிறேன். இயேசுவுக்காக வாழத் தெரிந்துகொண்ட கொலோசே மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் அந்தப் பிரிவினையை அழித்தார். அவர் இந்த வார்த்தைகளால் அவர்களை உற்சாகப்படுத்தினார்: ”வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து”. (கொலோசெயர் 3:17). இயேசுவின் நாமத்தில் காரியங்களைச் செய்வதென்பது, நாம் அவற்றைச் செய்வது மட்டுமல்லாமல், அதன் மூலம் அவரைக் கனப்படுத்துவதும், அவற்றை நிறைவேற்றுவதற்கு அவருடைய ஆவி நம்மைப் பலப்படுத்துகிறது என்ற உறுதியைக் கொண்டிருப்பதும் ஆகும்.
"நீங்கள் எதைச் செய்தாலும்." நம் வாழ்வின் அனைத்து சாதாரண செயல்களையும், ஒவ்வொரு நேரமும், தேவ ஆவியால் பலப்படுத்தப்பட்டு, இயேசுவைக் கனப்படுத்தும் விதத்தில் செய்யலாம்.