இளஞ்சிவப்பு கோட்
பிரெண்டா பெரிய விற்பனை மையத்தின் வெளியே செல்லும் பாதை வழியாய் வந்தபோது, இளஞ்சிவப்பு நிறத்தில் ஏதோ ஒன்று அவளுடைய பார்வையைக் கவர்ந்தது. அந்த பஞ்சுமிட்டாய் நிற கோர்ட் அவளை வெகுவாய் கவர்ந்தது. ஓ! ஹோலி இதை எப்படி விரும்புவாள்? ஒற்றைத் தாயாக அவளுடன் பணிபுரியும் அவளின் சிநேகிதிக்கு இப்படி ஒரு கோர்ட் அவசியப்படும் என்று யோசித்தாள். ஆனால் அவள் தனக்கென்று செலவுசெய்து இந்த கோர்ட்டை ஒருபோதும் வாங்கமாட்டாள் என்பதையும் ப்ரெண்டா நன்கு அறிந்திருந்தாள். கடும் யோசனைக்கு பின்னர், அந்த கோர்ட்டை விலைகொடுத்து வாங்கி, அதை ஹோலியின் வீட்டிற்கு அனுப்பிவைத்தாள். அத்துடன் “நீங்கள் மிகவும் நேசிக்கப்படுகிறீர்கள்” என்று பெயர் குறிப்பிடாத அட்டையை வைத்து அனுப்பி, அதைக் குறித்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.
மகிழ்ச்சி என்பது தேவன் ஏவும் கொடுத்தலுக்கு கிடைக்கும் துணை சலுகையாகும். கொரிந்திய திருச்சபை விசுவாசிகளுக்கு, “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:7) என்று கொடுத்தலின் மேன்மையை வலியுறுத்துகிறார். அத்துடன், “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (வச. 6) என்றும் குறிப்பிடுகிறார்.
சிலவேளைகளில் நாம் காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போடுகிறோம். சிலவேளைகளில் தகுதியான ஊழியங்களுக்கு அனுப்புகிறோம். சிலவேளைகளில் தேவையிலிருக்கும் நம்முடைய சிநேகிதர்களுக்கு கொடுத்து நம்முடைய அன்பை வெளிப்படுத்த ஏவப்படுகிறோம். பலசரக்கு பைகள், உணவுப்பொருட்கள்... சிலவேளைகளில் இளஞ்சிவப்பு கோர்ட் போன்ற காரியங்கள் அதற்கு வழிவகுக்கலாம்.
உனக்கும் எனக்குமான இரக்கம்
கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளில் ஒன்றாக, உல்லாசக் கப்பல்களை நிறுத்தி, பயணிகளை தனிமைப்படுத்தினர். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை சில சுற்றுலாப் பயணிகளின் நேர்காணல்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட இந்த தருணங்கள் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பாய் இருந்தது என்று சொன்ன ஒரு பயணி, தன்னுடைய மனைவியைக் குறித்து சொல்லும்போது, அவர் செய்த தப்பிதங்கள் அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிற அவளுடைய நியாபகச் சக்தியை வேடிக்கையாய் எடுத்துச் சொன்னார்.
இது போன்ற பதிவுகள் நம்மை சிரிக்க வைக்கலாம், நமது மனிதநேயத்தை நினைவூட்டலாம். நாம் வெளியே சொல்லவேண்டிய விஷயங்களை மிகவும் இறுக்கமாக நமக்குள்ளே வைத்திருக்கும் நம்முடைய சுபாவத்தின் எச்சரிப்பாகவும் இருக்கலாம். ஆயினும், நம்மைத் துன்புறுத்துபவர்களிடம் கனிவாக இருக்க எது நமக்கு உதவுகிறது? சங்கீதம் 103:8-12 நம்முடைய பெரிய தேவனை குறித்து சித்தரிப்பதுபோன்ற எண்ணங்களேயாகும்.
8-10 வசனங்கள் சொல்லுவது கவனத்தில்கொள்ள வேண்டும்: “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.” நாம் ஜெபத்துடன் வேதத்தை வாசிக்கும்போது தேவனுடைய உதவியை நாடுவது என்பது சிலவேளைகளில் அவர்களை தண்டிக்கும் தவறான பாதைக்கு நம்மை திசைதிருப்பலாம். இது நமக்காகவும், நாம் காயப்படுத்த நினைப்பவர்களுக்காகவும் கிருபையோடும் இரக்கத்தோடும் மன்னிப்பை செயல்படுத்துவதற்கு உதவுகிறது.
மன்னிக்கும் அன்பு
80 ஆண்டுகால திருமண வாழ்க்கை. மே 31, 2021 அன்று எனது கணவரின் மாமா பீட் மற்றும் அத்தை ரூத் அதைக் கொண்டாடினர். 1941இல் ரூத் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட சந்திப்பு திருமணம் செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்தி, பள்ளியிலிருந்து பட்டம்பெற்ற பின்னர் இருவரும் தங்களுடைய சுயவிருப்பத்தின் பிரகாரம் திருமணம் செய்துகொண்டனர். தேவனே அவர்களை இணைத்ததாகவும் இத்தனை ஆண்டுகளாக அவர்களை வழிநடத்தினார் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
இந்த 80 ஆண்டுகள் திருமண வாழ்வில் பீட்டும் ரூத்தும் மன்னிப்பை தேர்ந்தெடுத்து தங்கள் திருமண வாழ்க்கையை பலப்படுத்த முயற்சித்தனர். ஆரோக்கியமான உறவில் இருப்பவர்கள் அனைவரும் நாம் மற்றவர்களை காயப்படுத்துகிற சுபாவங்களில் மன்னிப்பின் அவசியத்தை அறிந்திருப்பர். அது தவறான வார்த்தைகள், நிறைவேற்றத் தவறின வாக்குறுதிகள், செய்ய மறந்த பொறுப்புகள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாய் வாழவேண்டும் என்று பவுல் விசுவாசிகளுக்கு அறிவுறுத்தும் வேதப்பகுதியில் மன்னிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும்” (கொலோசெயர் 3:12) தரித்துக்கொள்ளுமாறு விசுவாசிகளுக்கு வலியுறுத்திய பின்னர், “ஒருவரையொருவர் தாங்கி... ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (3:13) என்று ஊக்கப்படுத்துகிறார். அவர்களுடைய அனைத்து பேச்சுகளும் அன்பினால் ஊன்றப்பட்டிருக்கவேண்டும் என்பதை முக்கியமாய் வலியுறுத்துகிறார் (வச. 14).
In a famous scene from the film adaptation of The Count of Monte Cristo,फिल्म द काउंट ऑफ मोंटे क्रिस्टो, का एक प्रसिद्ध चित्रण उस जवान लड़के के 16वें जन्मदिन के लिए बिल्कुल अनुकूल था, “मेरे जवान मित्र, जीवन एक तूफान है। एक क्षण तुम सूर्य के प्रकाश का आनन्द उठाने लगते हो, और दूसरे ही क्षण चट्टानों पर बिखर जाते हो।…
மின்னும் காரியங்களை எதிர்கொள்வது
1960களில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி தொடர் ஒன்றின் கதாநாயகனைப் பார்த்து, ஒருவர் தன்னுடைய மகனை அவனுடைய வாழ்க்கையை சுய வழிகளில் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கொடுப்பதாக சொல்லுகிறார். அதற்கு கதாநாயகன், இளைஞர்களை அவர்கள் போக்குக்கு விட்டுவிடக்கூடாது என்று பதிலளிக்கிறான். அவர்கள் தங்கள் கண்களுக்கு முன்பாக மின்னக்கூடிய முதல் காரியத்தையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அதில் பிரச்சனை இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் தருவாயில் காலம் கடந்துவிடும். தவறான தேர்ந்தெடுப்புகள் மின்னக்கூடிய பாக்கெட்டுகளில் பார்வையை அதிகம் கவரக்கூடிய வகையில் இருக்கும். அதைத் தெரிந்தெடுப்பவர்களை சரியான பொருட்களின் வெகுகால பயன்பாட்டை சொல்லி புரியவைப்பது கடினம். ஆகையால் சரியான பழக்கவழக்கங்களை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து “சோதனையை மேற்கொள்ள செய்வது” மிகவும் முக்கியமானது என்று அவர் சொல்லி முடிக்கிறார்.
இந்த கதாநாயகனுடைய வார்த்தைகள் நீதிமொழிகளின் ஞானத்திற்கு ஒத்திருக்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (22:6). நம்மில் பலர் இந்த வசனத்தை தேவனுடைய வாக்குத்தத்தமாய் கருதலாம். ஆனால் அவைகள் நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள். நாமெல்லாரும் சுயமாய் தீர்மானம் எடுத்து இயேசுவை பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனையும் வேதத்தையும் நேசிப்பதின் மூலம் அதற்கான அஸ்திபாரத்தைப் போடமுடியும். நம்முடைய பாதுகாப்பில் இருக்கும் சிறுபிள்ளைகள் நாளை வளரும்போது, இயேசுவை தன்னுடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு, “மாறுபாடுள்ளவனுடைய வழியிலே” (வச. 5) நடவாமல், அவருடைய வழியிலே நடப்பர்.
கண்களுக்கு முன்பாக மின்னக்கூடிய காரியங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் நம்மை விலக்கி, உறுதியான சாட்சியாய் நிறுத்துகிறார். கிறிஸ்துவின் ஆவி நம்முடைய சோதனைகளை மேற்கொள்ளச் செய்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியான ஜீவியமாய் நம்முடைய ஜீவியத்தை மாற்றுகிறது.