Archives: டிசம்பர் 2022

தொலைநோக்குக் கனவுகள்

கிறிஸ்துமஸிற்கு முந்தின ஒரு பரபரப்பான நாளில், மூதாட்டி ஒருவர் என் வீட்டினருகே உள்ள தபால் நிலையத்திற்கு வந்தார். அவருடைய மெதுவான அசைவைப் பொறுமையாகக் கவனித்த தபால் நிலையத்தின் எழுத்தர், "வருக இளம் பெண்ணே" என்றார். அவர் வார்த்தைகளிலிருந்த கனிவைக் கவனித்த அனைவருக்கும் "இளம் பெண்ணே" என்று அவர் அழைத்தது பிடித்திருந்தது.

வயது முதிர்ந்தவர்கள் நமது நம்பிக்கையை ஊக்குவிப்பதை வேதத்தில் காணலாம். பிள்ளையாகிய இயேசுவைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க மரியாளும் யோசேப்பும் ஆலயத்திற்கு வந்தனர் (லூக்கா 2:23; யாத்திராகமம் 13:2, 12), அங்கே திடீரென இரண்டு முதியவர்கள் மையப்படுத்தப்படுகிறார்கள்.

முதலாவது சிமியோன், இவர் மேசியாவை காணப் பல ஆண்டுகள் காத்திருந்தார். இவர் இயேசுவைக் கையில் ஏந்தி, " ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" (லூக்கா 2:29–32). என்றார்.

பிறகு சிமியோன், மரியாளிடமும் யோசேப்பிடமும் பேசிக்கொண்டிருக்கையில் அன்னாள் என்னும் மிகவும் வயதான தீர்க்கதரிசி (வ.36) அங்கே வருகிறாள். திருமணமாகி ஏழே ஆண்டுகளில் விதவையான இவள், தனது எண்பத்து நான்காம் வயதுவரை தேவாலயத்தில் வாழ்ந்தவள். தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தவள். இவள் இயேசுவைக் கண்டவுடன், தேவனைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அந்தப் பிள்ளையைக் குறித்துப் பேசினாள். (வ.37–38).

நமக்கு எவ்வளவு வயதானாலும், பெரும் எதிர்பார்ப்புகளோடு தேவனுக்காகக் காத்திருப்பதை நிறுத்த வேண்டாமென்று நம்பிக்கையான இவ்விரு ஊழியக்காரர்களும் நமக்கு நினைப்பூட்டுகின்றனர்.

தேவனின் மன்னிப்பு - நாள் 7

banner image

...இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பு ஆகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
எபேசியர் 1:7

தேவனின் பிதாத்தன்மையின் இனிதான பார்வையை கவனத்துடன் அணுகுங்கள்: தேவன் மிகவும் கருணையும் அன்பும் நிறைந்தவர்.…

ஒப்புரவாக "போ" - நாள் 6

banner image

நீ ...உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டு என்று அங்கே நினைவு கூருவாயாகில்...
மத்தேயு 5:23

இந்த வசனம் சொல்கிறது, "நீ பலிபீடத்தின் இடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த…

மனந்திரும்புதல் - நாள் 5

banner image

தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப் படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கு ஏதுவான மனம் திரும்புதலை உண்டாக்குகிறது.
2 கொரிந்தியர் 7:10

பாவ உறுதி பற்றி சிறப்பாக விளக்கும் வார்த்தைகள் :…

அவர் வந்து - நாள் 4

banner image

அவர் வந்து, பாவத்தைக் குறித்தும்,... உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யோவான் 16:8

முழுமையான பாவஉணர்வு பற்றி சிலர் மட்டுமே அறிவர். நாம் தவறுகளைச் செய்யும் போது வருந்துகிறோம்.…

பாரபட்சமற்ற தேவ வல்லமை - நாள் 3

banner image

பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தி இருக்கிறார்.
எபிரெயர் 10:14

நாம் பாவத்திற்கு வருத்தப்படுவதால் மன்னிக்கப்பட்டோம் என்று நினைத்தால் , நாம் தேவ குமாரனின் இரத்தத்தை…

நமக்கு பதிலாக - நாள் 2

banner image

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படிக்கு,... பாவம் அறியாத அவரை நமக்காக பாவம் ஆக்கினார்...
2 கொரிந்தியர் 5: 21

இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப் பற்றிய நவீன…

கண்கள் திறக்கப்பட்டன - நாள் 1

banner image

...நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
அப்போஸ்தலர் 26:17-18

புதிய ஏற்பாட்டில் இந்த வசனங்கள் தான் இயேசு கிறிஸ்துவின் சீடரின் உட்கருத்தை…

மன்னிப்பு

கண்கள் திறக்கப்பட்டன - நாள் 1

தேவனின் முதன்மையான கிருபையின் உயரிய கிரியை, ”அவர்கள் பாவமன்னிப்பை பெறுகின்றனர்”.....என்ற வார்த்தைகளில் இருக்கின்றன. ஒரு நபர் தம்முடைய சுய கிறிஸ்தவ வாழ்க்கையில் தோல்வியுற்றால் பெரும்பாலாக அவர் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே பொருள். ஒருவர் இயேசு கிறிஸ்துவிடம் ஏதோ ஒன்றை பெற்றுக் கொண்டார் என்பதே அவர் இரட்சிக்கப்பட்டதற்கு அடையாளமாக திகழ்கின்றது.

நமக்கு பதிலாக - நாள் 2

இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப் பற்றிய நவீன பார்வையில், அவர் நம் மேல்லுள்ள ஏற்றுக்கொண்டார் என்று கருதப்படுகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டின்…