banner image

பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தி இருக்கிறார்.
எபிரெயர் 10:14

நாம் பாவத்திற்கு வருத்தப்படுவதால் மன்னிக்கப்பட்டோம் என்று நினைத்தால் , நாம் தேவ குமாரனின் இரத்தத்தை பாதத்தால் மிதிக்கிறோம். தேவனின் மன்னிப்பு மற்றும் அவர் நம் பாவத்தை மறத்ததின் ஆழத்திற்கு உரிய ஒரே விளக்கமானது- இயேசு கிறிஸ்துவின் மரணம் தான். கிறிஸ்து பாவநிவாரணபலியாக தம்மையே ஒப்புக்கொடுத்ததை, தனிப்பட்ட முறையில் உணர்தலினாலே நாம் வருத்தப்படுகிறோம். “கிறிஸ்து இயேசு… நமக்கு ஞானம், நீதி,பரிசுத்தம் மற்றும் மீட்பை வழங்கியிருக்கிறார்.” கிறிஸ்து நமக்கு அனைத்தையும் வழங்கி இருப்பதை உணரும் போது எல்லையில்லா மகிழ்ச்சி தொடங்குகிறது; எங்கெங்கு தேவனுடைய மகிழ்ச்சி இல்லையோ அங்கே மரண தண்டனை கிரியை செய்கிறது.

 நாம் யார், என்ன என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல, இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக தேவனுக்குள் முழுமையான மறுசீரமைப்பு இருக்கிறது. வேறு எந்த வழியிலும்  இல்லை. இயேசுகிறிஸ்து மன்றாடுவதால் இல்லை, ஆனால் அவர் மரணத்தால் தான். அது சம்பாதிப்பது இல்லை, ஏற்றுக்கொள்வது ஆகும் .சிலுவையை மறுக்கும் அனைத்து மன்றாட்டுதலும் வீண்; அது இயேசு திறந்த கதவை விட்டு விட்டு அடுத்த கதவை தட்டுவதைப் போல் இருக்கும் .”பாவி என்று அழைக்கப்படுவது அவமானமாய் இருக்கிறது, அதனால் நான் அந்த வழியாய் வர விரும்பவில்லை”. “அவர் நாமத்தைத் தவிர வேறு நாமம் இல்லை…” தேவனுடைய இதயமின்மை வெளிப்படையானது என்ற விளக்கம் ,அவருடைய உண்மையான இதயத்தையும் அவருடைய வழியின் எல்லையற்ற நுழைவு வாயிலையும் வெளிப்படுத்துகிறது. “அவருடைய இரத்தத்தின் மூலமாக நமக்கு பாவ மன்னிப்பு உண்டு”. அவரிடம் இல்லாத அனைத்தும் மரிப்பதன் அடையாளமே, இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் அடையாளம் ஆகும் .

தேவன் பாவிகளை மீட்டு பரிசுத்தமானவர்களாய் ஆக்குவதால் தேவனை நியாயப்படுத்துகிறோம். நம் தேவன், நாம் பாவியாய் இருக்கும்போது சரியானவர் என்று பாசாங்கு செய்கிறவர் அல்லர். பாவ நிவாரணம் என்பது தேவன், இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக பாவியை, பரிசுத்தராக மாற்றும் பரிகாரம் ஆகும்.