banner image

அவர் வந்து, பாவத்தைக் குறித்தும்,… உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யோவான் 16:8

முழுமையான பாவஉணர்வு பற்றி சிலர் மட்டுமே அறிவர். நாம் தவறுகளைச் செய்யும் போது வருந்துகிறோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் பாவத்தை பற்றி உணர்த்தும் போது, உலகில் யாருக்கும் எதிராக இல்லாமல், சங்கீதம் 51: 4 -இல் கொடுக்கப்பட்டுள்ளபடி “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ் செய்து”.. என்று அறிக்கையிடுவோம். ஒருவர் தாமாக பாவ அறிக்கை யிட்டால், தேவன் தம்மை மன்னிதார் என்று முழு மனத்திருப்தி கிடைக்காது. ஆனால், தேவன் அவரை மன்னித்தால் தேவனை விட நீதி பற்றிய உணர்வு அவருக்கு வலிமையாக இருக்கும். தேவன் மன்னிக்கிறார், ஆனால் அவ்வாறு தேவன் மன்னிக்க, அதற்கு விலையாக கிறிஸ்து மரித்தார் என்பதே, இருதயத்தைத் துக்கப்படுத்தி உடைக்கும். தேவனின் கிருபையின் பெரிய அற்புதம், நம் பாவத்தை மன்னிப்பது தான். இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் மட்டுமே தெய்வீக இயல்பால் பாவமன்னிப்பு கிடைத்தது அவ்வாறு செய்வதில் மெய்யும் இருக்கிறது. தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பதால் நம் பாவத்தை மன்னிக்கிறார் என்பது ஆழமற்ற அர்த்தமற்ற சொற்களாகும் . ஒரு முறை பாவஉணர்வு வந்த பிறகு நாம் அவ்வாறு சொல்ல மாட்டோம். தேவனின் அன்பு என்றால் கல்வாரி- அதற்கு குறைவாக ஒன்றுமில்லை! தேவனின் அன்பு சிலுவையில் வெளிப்படுத்தப்பட்டது, வேறெங்கும் இல்லை. தேவனால் என்னை மன்னிக்க முடிவதற்கு ஒரே அடிப்படை கிறிஸ்துவின் சிலுவை தான். அங்கே, அவர் மனசாட்சி திருப்தி ஆகிறது .

மன்னிப்பு என்பது நான் நரகத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு, பரலோகத்திற்கு தயார் படுத்தப்பட்டேன் என்பதன்று. (மன்னிப்பை இந்நிலையில் யாரும் ஒத்துக்கொள்வதில்லை). மன்னிப்பு என்பது புது உறவில் உருவாக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் தேவன் என்னை அடையாளப்படுத்துவது ஆகும். மீட்பு என்னும் அற்புதத்தின் மூலம் தேவன் என்னை மாற்றி, பாவியை அவருடைய தர நிலைக்கு ஏற்ப பரிசுத்தம் ஆக்குகிறார். எனக்குள் இயேசு கிறிஸ்துவின் இயல்பை போன்ற ஒரு புதிய இயல்பை தந்து மன்னிக்கிறார்.