கண்கள் திறக்கப்பட்டன – நாள் 1

தேவனின் முதன்மையான கிருபையின் உயரிய கிரியை, ”அவர்கள் பாவமன்னிப்பை பெறுகின்றனர்”…..என்ற வார்த்தைகளில் இருக்கின்றன. ஒரு நபர் தம்முடைய சுய கிறிஸ்தவ வாழ்க்கையில் தோல்வியுற்றால் பெரும்பாலாக அவர் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே பொருள். ஒருவர் இயேசு கிறிஸ்துவிடம் ஏதோ ஒன்றை பெற்றுக் கொண்டார் என்பதே அவர் இரட்சிக்கப்பட்டதற்கு அடையாளமாக திகழ்கின்றது.

நமக்கு பதிலாக – நாள் 2

இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப் பற்றிய நவீன பார்வையில், அவர் நம் மேல்லுள்ள ஏற்றுக்கொண்டார் என்று கருதப்படுகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டின் பார்வையில், அவர் நம் பாவங்களை சுமந்தது அனுதாபத்தினால் அல்ல, அவருடைய அடையாளத்தினால்தான் பாவமாக்கப்பட்டார். அவர் மரணத்தால் நம் பாவங்கள் நீக்கப்பட்டது. அவர் மரணத்துக்கான விளக்கம் அவர் பிதாவுக்கு கீழ்ப்படிந்ததனால்தான், தவிர அனுதாபம் அன்று. நாம் தேவனுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது,

பாரபட்சமற்ற தேவ வல்லமை – நாள் 3

நாம் பாவத்திற்கு வருத்தப்படுவதால் மன்னிக்கப்பட்டோம் என்று நினைத்தால், நாம் தேவ குமாரனின் இரத்தத்தை பாதத்தால் மிதிக்கிறோம். தேவனின் மன்னிப்பு மற்றும் அவர் நம் பாவத்தை மறத்ததின் ஆழத்திற்கு உரிய ஒரே விளக்கமானது – இயேசு கிறிஸ்துவின் மரணம் தான்.

அவர் வந்து – நாள் 4

முழுமையான பாவஉணர்வு பற்றி சிலர் மட்டுமே அறிவர். நாம் தவறுகளைச் செய்யும் போது வருந்துகிறோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் பாவத்தை பற்றி உணர்த்தும் போது, உலகில் யாருக்கும் எதிராக இல்லாமல், சங்கீதம் 51:4 இல் கொடுக்கப்பட்டுள்ளபடி “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ் செய்து”.. என்று அறிக்கையிடுவோம்.

மனந்திரும்புதல் – நாள் 5

பாவஉணர்வு என்பது ஒரு மனிதருக்கு பொதுப்படையாக இல்லாத விஷயம் ஆகும். அது தேவனைப் பற்றிய புரிதலின் ஆரம்பம். இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவர் பாவத்தை குறித்து மக்களை கண்டித்து உணர்த்துவார் என்றார் (பார்க்க யோவான் 16:8).

ஒப்புரவாக “போ” – நாள் 6

இந்த வசனம் சொல்கிறது, “நீ பலிபீடத்தின் இடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டு என்று அங்கே நினைவு கூருவாயாகில்,…”அது “உன் சமநிலையற்ற எரிச்சலில் நீ தேடி எதையாவது கண்டு பிடித்தால்”, என்று சொல்லவில்லை, ஆனால் “நீ நினைவு கூருவாயாகில் …” என்கிறது.

 

தேவனின் மன்னிப்பு – நாள் 7

தேவனின் பிதாத்தன்மையின் இனிதான பார்வையை கவனத்துடன் அணுகுங்கள்: தேவன் மிகவும் கருணையும் அன்பும் நிறைந்தவர். அவர் நம்மை மன்னிப்பார். அந்த எண்ணம் உணர்வை மட்டுமே சார்ந்தது. புதிய ஏற்பாட்டின் ஆகமங்களில் எங்கும் காணப்படாதது. கிறிஸ்துவின் சிலுவையை சார்ந்தே தேவன் நம்மை மன்னிக்கிறார்.