எங்கள் காரை அந்த திறந்தவெளியில் நிறுத்திவிட்டு, அதைக் கடந்து எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பெரும்பாலும் அங்கிருக்கும் ஒட்டுத் துத்திகள் (பர் மலர்கள்) எங்கள் ஆடையில் ஒட்டிக்கொள்ளும். குளிர்காலத்தில் இது வாடிக்கையானதுதான். இந்தச் சிறியத் தாவரங்கள் தங்களைக் கடப்பவர்களின் ஆடைகள், காலணிகள் மற்றும் எங்குவேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டு, உதிரும்வரை அங்கேயே நிலைத்திருக்கும். அருகாமையிலும், உலகெங்கிலும்கூட விதையைப் பரப்பும் ஒட்டுத் துத்திகளின் இயற்கை வழிமுறை இது.
என்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தத் தாவரங்களை அகற்றும்போதெல்லாம், “நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்” (ரோமர் 12:9) என்று விசுவாசிகளை அறிவுறுத்தும் இயேசுவின் செய்தியை நினைத்துக்கொள்வேன். மற்றவர்களிடம் அன்பு கூறுவது சற்று கடினமாகத் தோன்றலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு பிறரிடம் காணப்படும் தீமையானவற்றைப் புறந்தள்ளி, நன்மையான காரியங்களைப் பற்றிக்கொண்டால், ஆவியானவரின் வழிநடத்துதலால் நமது அன்பில் “மாயமற்றவர்களாய்” இருக்க முடியும் (வ.9).
இந்த ஒட்டுத் துத்திகளை லேசாக அகற்ற முடியாது, அவ்வளவு வலுவாக ஒட்டியிருக்கும். நாமும்கூட நன்மையானவற்றையே நோக்கிப் பார்க்க வேண்டும். நமது சிந்தையை தேவனின் இரக்கம், தயவு மற்றும் கற்பனைகள் ஆகியவற்றில் பதிய வைக்கும்போது, அவருடைய பெலத்தால் நாமும் மற்றவர்கள் மீதான நம்முடைய அன்பில் கட்டப்பட முடியும். நமது தேவைகளைக் காட்டிலும் பிறர் தேவைகளை முன்னிலைப்படுத்தி, நாம் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருக்க” (வ.10) தேவனே நமக்கு உதவி செய்வார்.
அந்த ஒட்டுத் துத்திகள் எரிச்சலூட்டுபவைதான், எனினும் அவைகள் எனக்கு அன்பிலே பிறரைப் பற்றிக்கொண்டிருக்கவும்; தேவனின் வல்லமையால் “நன்மையானவைகளை” (வ.9, பிலிப்பியர் 4:8–9) இறுகப் பிடித்துக்கொள்ளவும் நினைவூட்டின.
நேசிக்கக் கடினமான நண்பரையோ அல்லது குடும்ப உறுப்பினரைக்கூட நீங்கள் நேசிக்க "நன்மையைப் பற்றிக்கொண்டிருத்தல்" எவ்வாறு உதவ முடியும்? மாயமற்ற அன்பே உறுதியான அன்பாய் உள்ளதெப்படி?
இயேசுவே, என் முழு பெலத்தோடும் நன்மையைப் பற்றிக்கொள்ள நினைப்பூட்டும். உமது அன்பை நான் பிறரிடம் வெளிப்படுத்த வாஞ்சிக்கிறேன்.