Archives: நவம்பர் 2022

முன்னேறு! விலகிச் செல்லாதே!

“ஓய்வு” என்ற கவிதையில், வேலை செய்வதிலிருந்து ஓய்வு நேரத்தை பிரிக்கும் நமது போக்கை கவிஞர் நயமாக சவால் விடுகிறார். உண்மையான உழைப்போடு வருவதுதான் உண்மையான ஓய்வாகுமல்லவா? நீங்கள் உண்மையான ஓய்வு நேரத்தை அனுபவிக்க விரும்பினால், வாழ்க்கையின் கடமைகளைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, “இன்னும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்; - அதைப் பயன்படுத்துங்கள் - வீணாக்காதீர்கள்; இல்லையெனில் அது ஓய்வாய் கருதப்படாது” என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். உனக்கு முன்பாக அழகு நிற்கிறது, அதைக் கண்டு உன் வேலையைச் செய்து, ஓய்வை அனுபவியுங்கள் என்று வரிகள் நீளுகிறது. 

உண்மையான ஓய்வு மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டும், அன்பு மற்றும் சேவையின் மூலமாகவே கிடைக்கிறது என்று கவிஞர் முடிக்கிறார். இது தெசலோனிக்கேயர்களுக்கு பவுலின் ஆலோசனையை நினைவுபடுத்துகிறது. தனது அழைப்பை விவரித்து, விசுவாசிகளை ஊக்குவித்த பிறகு, “தேவனுக்கு  நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று” (வச. 11) விசுவாசிகளுக்கு தொடர்ந்து புத்தி சொல்லுகிறார். 

அத்தகைய வாழ்க்கையை, நேர்மை, அன்பு மற்றும் சேவை ஆகியவற்றைக் கொண்டு விளக்குகிறார். “ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து” (3:12) உங்களை ஆசீர்வதிப்பார் என்று பவுல் வேண்டிக்கொள்ளுகிறார். மேலும், “அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டுமென்று” சபையை ஊக்குவிக்கிறார் (4:11). தேவனை நேசித்து, அவர் நமக்கு எந்தெந்த விதங்களில் உதவியிருக்கிறாரோ, அதேபோன்று மற்றவர்களுக்கு உதவிசெய்து விசுவாச வாழ்க்கையின் அழகை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் வாழ்க்கை முறையே மெய்யான ஓய்வாகும் (வச. 12).

அல்லது கவிஞர் சொல்வது போல், உண்மையான மகிழ்ச்சி, “அன்பு மற்றும் சேவையில் நிலைத்திருக்கிறது.” அதுதான் உண்மையான ஓய்வு.

ஜாக்கிரதையாய் இருங்கள்

ஒருவன் தன் சிநேகிதர்களுடன் பனிச்சரிவு எச்சரிக்கை பலகைகள் பதிக்கப்பட்டிருந்த பனிச்சறுக்கு விடுதியின் வாயில் வழியாகச் சென்று பனிச்சறுக்கு விளையாட்டை ஆரம்பித்தார். கீழிறங்கும் இரண்டாவது பயணத்தில், யாரோ ஒருவர், “பனிச்சரிவு!” என்று சப்தமிட, ஆனால் அந்த மனிதன் தப்பிக்க முடியாமல் பனியில் இறந்து போனான். சிலர் அவரை கத்துக்குட்டி என்று விமர்சித்தனர். ஆனால் அவர் கத்துக்குட்டியில்லை. அவர் ஒரு “சான்றளிக்கப்பட்ட பனிச்சரிவு பயிற்சியாளர்.” “அவர் பாதுகாப்பாய் பயணிக்காததினால் தான் மரித்துவிட்டார்" என்று விபத்தில் மரித்தவர்களைக் குறுpத்து பனிச்சறுக்கு வீரர்களும், பனிச்சரிவு பயிற்சியாளர்களும் தவறான காரணங்களைக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். 

இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லத் தயாரானபோது, தம்முடைய ஜனங்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் காத்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே, அவருடைய அனைத்து “கட்டளைகளையும் நியாயங்களையும்” (உபாகமம் 4:1-2) கைக்கொள்ளும்படிக்கும், அதைக் கைக்கொள்ளாதவர்கள் மீது தேவன் அனுமதித்த நியாயத்தீர்ப்பையும் நினைவுகூரும்படிக்கு அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் தங்களைத் தாங்களே பரிசோதிக்கவும், தங்கள் உள்ளான வாழ்க்கையைக் கண்காணிக்கவும் “சாக்கிரதையாய்" இருக்கவேண்டும் (வச. 10). இது வெளியேயிருந்து வரும் ஆவிக்குரிய ஆபத்துகளிலிருந்தும் உள்ளான பொறுப்பற்ற தன்மையிலிருந்தும் அவர்களை காப்பாற்ற அவர்களுக்கு உதவியாயிருக்கும். 

நம்முடைய பாதுகாப்பைத் தகர்த்து, அக்கறையின்மை மற்றும் சுய வஞ்சனைக்கு ஆளாவது இயல்பு. நாம் வாழ்க்கையில் தோற்காமல் இருக்கும்பொருட்டும், அவருடைய கிருபையினிமித்தம் பாவமன்னிப்பையும் நமக்கு அருளுவாராக. அவருடைய ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பதினிமித்தமும், நம்முடைய பாதுகாப்பைப் பலப்படுத்தி, நல்ல தீர்மானங்களை எடுப்போம்.

உம்முடைய சத்தத்தைப் பயன்படுத்தி

எட்டு வயதிலிருந்தே, லிசா திக்குவாயுடன் போராடினாள். மக்களோடு பேச வேண்டிய சமுதாய சூழலை துணிச்சலாய் எதிர்கொள்ளத் தயங்கினாள். ஆனால் பேச்சு சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்பு, அது அவளுடைய எதிர்காலத்திற்கு உறுதுணையாயிருந்தது. லிசா மற்றவர்களுக்கு உதவ தனது குரலைப் பயன்படுத்த முடிவு செய்தாள். உணர்வு ரீதியாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் ஆலோசனை வழக்கும் சேவையை அவள் செய்தாள். 

சிறைப்பட்ட இஸ்ரவேலர்களை அவர்களின் சிறையிருப்பிலிருந்து மீட்பதற்கு பேச வேண்டிய அவசியத்தைக் குறித்து மோசே கவலைப்பட்டான். தேவன் மோசேயை, பார்வோனை எதிர்கொள்ளும்படிக்கு கேட்டார். ஆனால், மோசே தான் திக்குவாயன் என்பதினால் அதை ஏற்க மறுத்தான் (யாத்திராகமம் 4:10). தேவன் அவரிடம், “மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?” என்று தேவன் மோசேக்கு சவால் விட்டு, “நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்” (வச. 11-12) என்று வாக்களித்தார். 

தேவனுடைய இந்த பதிலானது, நம்முடைய பெலவீனங்களிலும் தேவன் கிரியை நடப்பிக்க முடியும் என்று உறுதியளிக்கிறது. இதை நாம் இருதயத்தில் நம்பினாலும், அதின் படி வாழ்வது கடினம். மோசே தனக்கு பதிலாய் வேறு யாரையாவது அனுப்பும்படிக்கு தேவனிடத்தில் கேட்டுக்கொண்டான் (வச. 13).  எனவே மோசேயின் சகோதரன் ஆரோனை அவனுடன் வர தேவன் அனுமதித்தார் (வச. 14).

மற்றவர்களுக்கு உதவும்படிக்கு நம்மிடம் குரல் வளம் இருக்கிறது. நாம் பயப்படலாம். நாம் தகுதியற்றவர்களாயிருக்கலாம். நமக்கு சரியான வார்த்தைகள் கிடைக்காமல் இருக்கலாம். 

நம்முடைய சிந்தனைகளை தேவன் அறிவார். அவருடைய சித்தத்தை நிறைவேற்றும்பொருட்டு, மற்றவர்களுக்கு நாம் ஊழியம் செய்வதற்கு ஏதுவான வார்த்தைகளை அவர் அருளுவார்.

தெய்வீக அன்பு

1917 ஆம் ஆண்டில், கலிபோர்னியா தொழிலதிபரான ஃபிரடெரிக் லெஹ்மன், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டார். அப்போது, “தேவனின்; அன்பு” என்ற பாடலுக்கான வரிகளை எழுதினார். அவரது உத்வேகம் அவரை முதல் இரண்டு சரணங்களை விரைவாக எழுத வழிவகுத்தது, ஆனால் அவர் மூன்றாவது சரணத்தில் சிக்கிக்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறைச்சாலையின் சுவர்களில் ஒரு கைதியினால் எழுதப்பட்ட ஒரு கவிதை வரிகளை அவர் நினைவு கூர்ந்தார். தேவனுடைய அன்பின் ஆழமான விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், அந்த கைதி அதை அங்கே கல்லினால் கீறியிருந்தார். லெஹ்மனின் பாடலுடைய  அதே ஸ்ருதிக்கு அந்த வரிகள் பொருந்தியது. அவர் அதை தனது பாடலின் மூன்றாவது சரணமாக மாற்றினார்.

சிறைச்சாலையில் இருந்த அந்த கைதியைப் போலவும்,  லெஹ்மன் என்னும் கவிஞரைப் போலவும் நாமும் கடினமான பின்னடைவை வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். இதுபோன்ற கடினமான தருணங்களின்போது, “உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” (சங்கீதம் 57:1) என்னும் சங்கீதக்காரனுடைய வார்த்தைகளை நாம் எதிரொலிக்கலாம். நம்முடைய பிரச்சனைகளின்போது தேவனை நோக்கிக் கூப்பிடுவதும் (வச. 2), சிங்கங்களின் நடுவில் இருக்கும்போது (வச. 4), அவரிடம் முறையிடுவதும் நல்லது. கடந்த நாட்களில் தேவன் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து, “நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்... அதிகாலையில் விழித்துக்கொள்வேன்” (வச. 7–8) என்ற தாவீதின் வரிகளை எதிரொலிப்போம்.

“உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது” (வச. 10) என்று இந்த பாடல் சித்தரிக்கிறது. நம்முடைய தேவைகளின் போது தேவனை சார்ந்துகொள்வோமாகில், அவருடைய அன்பு வானபரியந்தம் உயர்ந்தது என்பதை நினைவில் கொள்வோம்.