கோடை விடுமுறை நெருங்கிய நேரத்தில், இணையத்தில் ஆர்டர் செய்திருந்த பொருட்கள் வந்து சேருவதற்கு தாமதமாகியது. இணைய விநியோகத்தை நாம் நம்பமுடியாது. ஆகையினால் இந்த பொருட்களை நாம் நேரடியாய் கடைக்குச் சென்று வாங்கலாம் என்று என் குடும்பத்தினர் தீர்மானித்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் என்னுடைய தாயார், இணைய ஆர்டரை பதிவுசெய்தபோது, என் நம்பிக்கை மாறியது. இரண்டு நாட்களில் பொருட்களை ஒப்படைப்போம் என்று வாக்கு பண்ணியிருந்த இணைய நிறுவனம் தாமதமாகியதால் நாங்கள் கவலையுற்றோம்.
நாம் வாழும் இந்த அவசர உலகத்தில் அனைத்தையும் உடனடியாக பெற்றுக்கொள்ள விரும்புகிறோம். காத்திருப்பது மிகவும் கடினமாய் தோன்றுகிறது. ஆனால் ஆவிக்குரிய உலகத்தில் காத்திருத்தல் வெகுமதியைப் பெற்றுத் தருகிறது. புலம்பல் புத்தகம் எழுதப்பட்டபோது, பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட எருசலேமைக் குறித்து இஸ்ரவேலர்கள் புலம்பி, பல தொடர் சவால்களைச் சந்தித்துக்கொண்டிருந்தனர். இந்த குழப்பங்களுக்கு மத்தியிலும் தேவன் தன் தேவைகளைச் சந்திப்பார் என்றும் தான் தேவனுக்காய் காத்திருப்பதாகவும் தம்முடைய நம்பிக்கையை உறுதியாய் ஆசிரியர் முன்வைக்கிறார் (புலம்பல் 3:24). நம்முடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படவில்லையெனில் நாம் சோர்ந்து போவோம் என்பதைத் தேவன் நன்கு அறிவார். தேவனுக்காய் காத்திருக்கும்படி வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது. “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” என்பதினால் நாம் சோர்ந்துபோகவேண்டியதில்லை. மாறாக, “கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்காய் காத்திரு” (சங்கீதம் 37:7) என்று வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளோடும் பதிலளிக்கப்படாத ஜெபங்களோடும் உறுதியாய் போராடினாலும், நாம் கர்த்தருக்குக் காத்திருந்து; அவருடைய அன்பையும் கிருபையையும் நம்புவோமாக.
நீங்கள் எவ்வாறு தேவனுக்காய் காத்திருக்கிறீர்கள்? அவருடைய குறித்த காலத்தை நீங்கள் எவ்வாறு நம்பலாம்?
பரலோகப் பிதாவே, சிலவேளைகளில் உமக்காக காத்திருப்பது கடினமாயிருக்கிறது. தொடர்ந்து உம்மை விசுவாசிக்க எனக்குப் பெலன் தாரும்.