பத்து வயது நிரம்பிய லின்-லின் தத்தெடுக்கப்பட்டாள். ஆனால் அவள் மிகவும் பயந்திருந்தாள். அவள் வளர்ந்த ஆசிரமத்தில், சிறிய தவற்றுக்குக்கூட அவள் தண்டிக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். அவளைத் தத்தெடுத்த தாய், என்னுடைய சினேகிதி. அவள் தன் தாயைப் பார்த்து, “அம்மா, நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா?’ என்று கேட்க, என்னுடைய சினேகிதியும் “ஆம்” என்று தலையசைக்க, “நான் தவறு செய்தாலும் என்னை நேசிப்பீர்களா?” என்று ஆர்வத்துடன் கேட்டாளாம்.
நம்மில் சிலரும் தேவனை துக்கப்படுத்திவிட்டு, “நீர் இன்னும் என்னை நேசிக்கிறீரா?” என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டப்படலாம். இந்த உலகத்தில் நாம் வாழும்வரை நாம் சிலசமயம் பாவத்தால் வீழ்வோம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் என்னுடைய தப்பிதங்கள், என் மீதான தேவனுடைய அன்பை மாற்றக்கூடுமோ? என்று நாம் வியப்படையலாம்.
யோவான் 3:16, தேவனுடைய அன்பை நமக்கு உறுதியளிக்கிறது. அவர் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக தந்தருளினார், அவரை விசுவாசித்தால், நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர் மீது விசுவாசம் வைத்த பின்பு நாம் பாவம் செய்தால் என்ன நேரிடும்? அந்த தருணத்தில்தான், நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார் என்னும் மேலான சத்தியத்தை நினைவுகூரவேண்டும் (ரோமர் 5:8). நாம் பாவிகளாயிருக்கும்போதே அவர் நம்மீது அன்பு வைத்திருப்பார் என்றால், இன்று அவருடைய பிள்ளைகளாய் இருக்கும் நாம் எப்படி அவருடைய அன்பைச் சந்தேகப்பட முடியும்?
நாம் பாவம் செய்யும்போது நம்முடைய பரமபிதா அன்போடு சிட்சித்து, நம்மை உருவாக்குகிறார். அது நம்மை புறக்கணிப்பது அல்ல (8:1); அது அன்பின் பிரதிபலிப்பு (எபிரெயர் 12:6). நம் மீதான அவருடைய அன்பு சீரானது மற்றும் நிலையானது என்னும் நம்பிக்கையில், அவருடைய அன்பின் பிள்ளைகளாய் இளைப்பாறுவோம்.