1990ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆய்வாளர்களின் கணினி பிரச்சினை: ஜீன் காலமென்ட்டின் வயதைப் பதிவேற்றும்போது, பிழைகள் குறுக்கிட்டன. அவருடைய வயது 115. அந்த கணினியின் வரையறையில் அந்த அதிகப்படியான எண்ணிக்கை இடம்பெறவில்லை. அதை வடிவமைத்தவர்கள் அத்தனை ஆண்டுக்காலம் யாரும் வாழ்வது சாத்தியமில்லை என்று எண்ணியிருந்தனர். ஆனால் ஜீன், 122 வயது வரை உயிர் வாழ்ந்தார்.
சங்கீதக்காரன், “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷம்” (சங்கீதம் 90:10) என்று சொல்லுகிறான். இந்த உலகத்தில் எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தாலும், ஜீன் போன்று 122 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தாலும்கூட, இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கை நிலையில்லாததே. நம்முடைய வாழ்க்கை சர்வவல்லமையுள்ள ஆண்டவருடைய கரத்தில் இருக்கிறது (வச.5). ஆவிக்குரிய உலகத்தில் தேவனுடைய காலம் என்பது “ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது” (சங்கீதம் 90:4).
“குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்” (யோவான் 3:36) என்று இயேசுவின் ஆள்தத்துவம் ஆயுசுக்காலத்தின் நீளத்திற்கு புதிய அர்த்தம் கொடுக்கிறது. “உடையவனாயிருக்கிறான்” என்பது நிகழ்காலத்தைக் குறிக்கிறது. நம்முடைய நிகழ்கால பிரச்சினைகள் மற்றும் கண்ணீரை மாற்றி, நம்முடைய எதிர்காலம் ஆசீர்வாதமாகவும் நம்முடைய நாட்கள் முடிவில்லாததாயும் இருக்கும் என்று அறிவிக்கிறது.
இதில் நாம் களிகூர்ந்து, சங்கீதக்காரனோடு சேர்ந்து “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்” (சங்கீதம் 90:14) என்று ஜெபிப்போம்.
வாழ்க்கையில் உங்களுக்கு என்ன கவலை இருக்கிறது? அதின் அளவு என்ன? இயேசு உங்களோடு இருப்பதால் நீங்கள் எந்த விதத்தில் தேற்றப்படுகிறீர்கள்?
அன்பான தேவனே, இந்த வாழ்க்கை சில வேளைகளில் கடினமாயிருக்கிறது. எனினும், உம்முடைய போஷிப்பினால் நான் மகிழ்ச்சியோடு பாடுகிறேன். உம்முடைய மாறாத கிருபையினால் என்னைத் திருப்தியாக்கும்.