அமெரிக்காவின் நியோடெஷா என்னும் பகுதியில் முந்நூறு பள்ளி மாணவர்கள், திடீரென்று அசெம்பிளிக்கு வரவழைக்கப்பட்டனர். அந்த ஊரில் வசித்த ஒரு தம்பதியினர் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் படிப்பு கட்டணத்தைச் செலுத்துவதாகத் தீர்மானித்திருப்பதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியத்தில் திளைத்தனர். மாணவர்கள் வியப்பில் ஆழ்த்தப்பட்டு, மகிழ்ச்சியடைந்து கண்ணீர் சிந்தினர்.
நியோடெஷா, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி. அதில் வசிக்கும் மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தொகையை செலுத்துவதற்கும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு இந்த உதவி பெரிய ஆதரவாக இருக்கும் என்றும், வெளி மாகாணங்களில் வசிக்கும் பல்வேறு மக்கள் இந்த பகுதிக்கு இடம்பெயர்வதற்கும் இந்த முயற்சி ஆதரவாயிருக்கும் என்றும் அந்த தம்பதியினர் நம்பினர். அவர்களின் இந்த தாராள மனப்பான்மை, அங்கு வசிக்கும் மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள், புதிய வாழ்வாதாரங்கள் மற்றும் புதிய எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்று அந்த தம்பதியினர் நம்பினர்.
தேவனும், தம்முடைய மக்கள் தங்களுடைய சுய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதில் நிறைவடைகிறவர்களாய் இல்லாமல், மற்றவர்களின் தேவைகளுக்கு உதாரத்துவமாய் செயல்படுகிறவர்களாய் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். தேவனுடைய வழிகாட்டுதல் தெளிவாய் உள்ளது: “உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்” (லேவியராகமம் 25:35). நம்முடைய தாராள குணம் அவர்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்வதாக மட்டும் இல்லாமல், அவர்களின் எதிர்காலத்திற்கு ஆதாயமாய் இருக்கவேண்டும். “அவனை ஆதரிக்கவேண்டும்… அவன் உன்னோடே பிழைப்பானாக” (வச.35) என்று தேவன் சொல்லுகிறார்.
உதாரத்துவமாய் கொடுத்தல் என்பது வித்தியாசமான எதிர்காலத்தைப் பார்க்கச் செய்கிறது. தேவனுடைய உதாரத்துவமான தயாள குணமானது, நாம் ஒன்றுக்கும் குறைவில்லாமல் நிறைவாய் மகிழ்ச்சியோடு வாழும் எதிர்காலத்திற்கு நேராய் நம்மை நடத்துகிறது.