எட்டு வயது நிரம்பிய கேபிரியலுக்கு மூளையிலிருந்த கட்டி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. ஆனால் அது அவனுடைய தலையின் ஒரு ஓரத்தில் தழும்பை ஏற்படுத்தியது. அந்த தழும்பிநிமித்தம், நான் ஒரு மிருகத்தைப் போல உணருகிறேன் என்று அவன் சொல்லக் கேட்ட அவனுடைய அப்பா, ஒரு யோசனையை செயல்படுத்தினார். தன்னுடைய மகன் மீதான தன்னுடைய அன்பிற்கு அடையாளமாய், கேபிரியேலுக்கு இருப்பதுபோலவே தன்னுடைய தலையின் ஓரத்திலும் ஒரு வடிவத்தை பச்சைக் குத்திக்கொண்டார்.
தேவன் “தன் பிள்ளைகளுக்கு” இதே போன்ற இரக்கமுள்ள அன்பை வெளிப்படுத்தினார் என்று சங்கீதக்காரன் கூறுகிறார் (சங்கீதம் 103:13). மனித வாழ்க்கையை தெய்வீக அன்போடு உருவகப்படுத்தி தாவீது கூறுகிறார். ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு மென்மையாய் இரங்குவதுபோல தேவன் இரங்குகிறார் என்று குறிப்பிடுகிறார் (வச. 17). ஒரு மாம்சீக தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு இரங்குவதுபோலவே, பரலோகத்திலிருக்கும் தேவனும் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார். தேவன் தன் ஜனங்கள் மீது மனதுருகும் இரக்கமுள்ள தகப்பன். நாம் நேசிக்கப்படாதவர்களாயும் பெலவீனர்களாயும் உணரும்போது, நம் மீதான பரலோக தகப்பனின் அன்பை விசுவாசத்தால் பெற்றுக்கொள்ளலாம். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே” (1 யோவான் 3:16)
நம்முடைய இரட்சிப்பிற்கேதுவான இரக்கத்தை அவர் வெளிப்படுத்தினார். இந்த செய்கையின் மூலம் அவர் நம்மீது வைத்த அன்பை அவருடைய சிலுவையினூடாய் நாம் பார்க்கமுடியும். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியர் நமக்கிருக்கிறார் (எபிரெயர் 4:15) என்பதைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? அதை நிரூபிக்க அவரிடத்தில் தழும்புகள் உண்டு.
தேவன் உன்னை நேசிக்கிறார் என்பதை அறிவதற்கும், அனுபவிப்பதற்குமிடையே உள்ள இடைவெளியை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்? உங்களுக்கு இருக்கும் எல்லா கஷ்டங்களையும் குறித்து பரிதபிக்கும் பிரதானbஆசாரியனாகிய இயேசுவைக் குறித்து சிந்திக்க அது எவ்வகையில் உங்களைத் தூண்டுகிறது?
பரலோகப் பிதாவே, உம்முடைய இரக்கமுள்ள அன்பிற்காய் நன்றி. என்னுடைய பாடுகளை உம்முடைய மகிமைக்காய் பயன்படுத்தும்.
