“எதிர்பாராதவிதமாக, நாங்கள் சமீபத்தில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்” என்று ஷ்ரேயா கூறினாள். “அதை நாங்கள் இருவருமே விரும்பவில்லை; ஆனாலும், அவளைச் சுற்றியிருப்பவர்கள் அவளுடைய மனோபாவங்களினாளும், செய்கைகளினாலும் காயப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அப்படிச் சொன்னேன். அந்தப் பெண், ஷ்ரேயா ஆலோசனை கொடுத்துக் கொண்டிருந்த ஒரு வாலிபப் பெண் தான். ஆரம்பத்தில் அவர்களுடைய உரையாடல், சற்று விகற்பமாய் தோன்றினாலும், அது நன்மையாகவும் அவர்களின் உறவை பலப்படுத்தும் விதத்திலும் அமைந்தது. சில வாரங்கள் கழித்து, அவர்கள் இருவரும் சேர்ந்து, மனத்தாழ்மை என்ற கருத்தின் அடிப்படையில் திருச்சபைகளுக்கிடையேயான ஒரு ஜெப நேரத்தை நடத்தினார்கள்.
ஆலோசனை ஊழியங்களல்லாமல், கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்குள் கடினமான உரையாடலில் ஈடுபடுகிறோம். காலத்திற்க்கப்பாற்பட்ட ஞானத்தைப் போதிக்கும் நீதிமொழிகள் புத்தகம், கடிந்துகொள்ளுதலை கொடுப்பதற்கும் பெற்றுக்கொள்ளுவதற்கும் அவசியமான தாழ்மையைக் குறித்து அடிக்கடி எடுத்துரைக்கிறது. ஆரோக்கியமான கடிந்துகொள்ளுதலை, “ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதல்” என்றும், அது மெய்யான ஞானத்திற்கு வழிநடத்துகிறது என்றும் அறிவிக்கிறது (நீதிமொழிகள் 15:31). நீதிமொழிகள் 15:5, மூடன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான், கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி என்கிறது. கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான் (வச. 10) என்று வெளிப்படையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயாவின் வாழ்க்கையில் நடந்ததுபோல, அன்பினிமித்தம் நிகழ்ந்த கடிந்துகொள்ளுதல் ஒரு புதிய உறவை துவக்கியது.
உங்களுடைய வாழ்க்கையில், உங்களுடைய அன்பான வார்த்தைகள் மற்றும் திருத்தம் தேவைப்படும் நபர் யாரேனும் இருக்கிறார்களா? அல்லது சமீபத்தில் உங்களிடத்தில் அன்பாய் கடிந்துகொண்டவர்களிடம் நீங்கள் கோபமாகவோ அல்லது வித்தியாசமாகவோ நடந்துகொண்டீர்களா? புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான் (வச. 32). மற்றவர்களை அன்பாய்க் கடிந்துகொள்ளவும், அதே அன்போடு நம்மைக் கடிந்துகொள்கிறவர்களை ஏற்றுக்கொள்ளவும் தேவனிடத்தில் உதவி கேட்போம்.
ஆரோக்கியமான கடிந்துகொள்ளுதலை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்? மனத்தாழ்மை உங்களிடத்தில் எவ்வாறாகக் காணப்படுகிறது?
அன்பான தேவனே, நான் உம்முடைய ஞானத்தைத் தேடுகிறேன். ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் தாழ்மையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும்.