இயேசு யாரென்று மக்கள் நம்புகிறார்கள்? அவரை ஒரு சிறந்த ஆசிரியர் என்று ஒத்துக்கொள்ளும் சிலர் அவரை ஒரு மனிதர் என்றே நம்புகிறார்கள். எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ், “இந்த மனிதர் ஒரு தேவனுடைய குமாரனாயிருக்கலாம், அல்லது பித்தம்பிடித்தவராகவோ மோசமானவராகவோ இருக்கலாம். அவரை முட்டாள் என்று நீங்கள் நிதானித்து, அவர் மீது எச்சில் துப்பி, அவரை பிசுhசு என்று சொல்லி கொலை செய்யலாம். அல்லது, அவரது பாதத்தில் விழுந்து அவரை தேவனென்று அழைக்கலாம். ஆனால் அவரை ஒரு சிறந்த மனித ஆசிரியர் மட்டும் தான் என்று சொல்லுவது மதியீனமானது” என்று எழுதுகிறார். இயேசு தன்னை தேவனென்று பொய்யாக அறிக்கையிட்டிருந்தால், அவர் ஒரு சிறந்த தீர்க்கதரிசியாய் இருந்திருக்க முடியாது என்னும் கருத்தை வலியுறுத்துவதற்காகவே “மியர் கிறிஸ்டியானிட்டி” என்கிற புத்தகத்தில் இருந்து பிரபலமான இந்த வார்த்தைகள் முன்வைக்கிறது. அது ஒரு கள்ள உபதேசமாயிருந்திருக்கும். 

தம்முடைய சீஷர்கள் கிராமங்களுக்கு இடையே நடந்துகொண்டிருந்தபோது, இயேசு அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார் (மாற்கு 8:27). யோவான் ஸ்னாநகன், எலியா மற்றும் தீர்க்கதரிசிகளில் ஒருவர் (வச. 28) என்று அவர்கள் பல்வேறு பதில்களை முன்வைக்கின்றனர். ஆனால் அவர்கள் என்ன நம்பினார்கள் என்பதை இயேசு அறிய விரும்பினார். “நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று அவர்களைக் கேட்கிறார். பேதுரு சரியாகப் புரிந்து கொண்டார், “நீரே மேசியா” (வச. 29), இரட்சகர்.

ஆனால் இயேசு யாரென்று சொல்கிறோம்? “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30) என்று இயேசு சொன்ன வாக்கியம் பொய்யாயிருக்கமாகில், அவர் ஒரு சிறந்த ஆசிரியராகவோ, தீர்க்கதரிசியாகவோ இருக்க முடியாது. அவரை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிட்ட அவருடைய சீஷர்களும், பிசுhசுகளும் கூட அறிக்கையிட்டன (மத்தேயு 8:29; 16:16; 1