சிறப்பாய் முடியுங்கள்
என் நாற்பது நிமிட உடற்பயிற்சியின் கடைசி நிமிடங்களை நெருங்கும்போது, என் உடற்பயிற்சி ஆலோசகர், “சிறப்பாய் முடியுங்கள்” என்று கத்துவார். நான் அறிந்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் அநேகர், பயிற்சி நிறைவுறும் முன் அப்படி சொல்லக் கேட்டிருக்கிறேன். பயிற்சியை துவங்குவதுப் போலவே, அதை நிறைவுச்செய்வதும் முக்கியம் என்பதை அவர்கள் அறிவார்கள். மனித உடல் தொடர்ச்சியாக இயங்குகையில், அது தளரும் அல்லது தோயும் என்றும் அறிவார்கள்.
இது, நம் கிறிஸ்தவ ஓட்டத்திற்கும் பொருந்தும். கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக, தான் அதிக உபத்திரவத்தை சந்திக்கப்போகிகிறதை அறிந்து, எருசலேமுக்கு போகையில் பவுல், எபேசுவிலிருந்த மூப்பர்களுக்கு தன் ஓட்டத்தை சிறப்பாய் முடிக்கவேண்டும் என்ற தன் எதிர்பார்பை அறிவிக்கிறார் (அப்போஸ்தலர் 20:17-24). எனினும். பவுல் தடுமாறவில்லை. தேவன் அவரை எதற்காய் அழைத்தாரோ, அதை நேர்த்தியாய் செய்வதே பவுலின் நோக்கம். “தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை” (வச. 24) பிரசங்கிப்பதே அவருடைய பணி. அதை நேர்த்தியாய் செய்து முடிக்க விரும்பினார். தன்னுடைய பாதையில் பாடுகள் வந்தாலும் (வச. 23), தன்னுடைய ஓட்டத்தில் நிலையாய் நின்று, முடிவுக் கோட்டை நோக்கி விரைந்தார்.
நாம் நம்முடைய உடற்பயிற்சியை செய்தாலும், அல்லது தேவன் நமக்குக் கொடுத்த திறமைகள், வார்த்தைகள் மற்றும் கிரியைகளை செயல்படுத்தினாலும், அதை நேர்த்தியாய் நிறைவு செய்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறோம். “சோர்ந்துபோகாமல் இருப்போமாக” (கலாத்தியர் 6:9). பின்வாங்காதீர்கள். உங்கள் ஓட்டத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்வதற்கு தேவையானதை தேவன் அருளுவார்.
ஆசிர்வாதத்தை தவறவிடுதல்
1799ஆம் ஆண்டில் கொன்ராட் ரீட் என்னும் பன்னிரண்டு வயது சிறுவன், வட கரோலினாவில் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில், மின்னும் ஒரு பாறையை கண்டெடுத்தான். புலம்பெயர்ந்த ஏழை விவசாயியான தன் அப்பாவிடம் அதை காண்பிக்க வீட்டிற்கு கொண்டுவந்தான். அந்த பாறையின் மதிப்பு தெரியாத அவனுடைய அப்பா, அதை கதவு நிறுத்தத்திற்கு பயன்படுத்திக்கொண்டார். அந்த வழியாய் அவர்களின் குடும்பம் பல ஆண்டுகள் நடந்துபோயிருக்கிறது.
ஒரு நாள் அந்த ஏழரை கிலோ எடைகொண்ட அந்த தங்கப் பாறையை, அவ்வூரில் வசிக்கும் நகை வியாபாரி பார்த்தார். உடனே இந்த விவசாயக் குடும்பம் செல்வந்தர்களாய் மாறினர். அவர்களுடைய அந்த நிலமே அமெரிக்காவின் தங்கம் கிடைக்கும் முதல் பெரிய நிலமாக அடையாளப்படுத்தப்பட்டது.
சிலநேரம் நம் சுய திட்டங்களையும், வழிகளையும் முன்நிறுத்தி, ஆசீர்வாதங்களை கடந்துபோவதுண்டு. கீழ்படியாமையினால் பாபிலோனியர்களால் சிறைபிடிக்கப்பட்ட பின்னர், தேவன் இஸ்ரவேலுக்கு மீண்டும் ஒரு மீட்பை அறிவித்தார். ஆனால், அவர்கள் எதில் குறைந்து போயினர் என்றும் அவர்களுக்கு நினைப்பூட்டினார். “இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்” என்று தேவன் அறிவிக்கிறார். “பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்... இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள்” என்று அவர்களின் பழைய வழியை விட்டு புதிய வழிக்கு திரும்புவதற்கு உற்சாகப்படுத்துகிறார் (எசாயா 48:17-18, 20).
பாபிலோனிலிருந்து புறப்படுவது என்பது, நம்முடைய பழைய பாவ வழிகளிலிருந்து, அவருக்கு செவிகொடுத்தால் நமக்கு நன்மை செய்யக் காத்திருக்கும் தேவனிடத்தில் திரும்புவது என்று பொருள்படுகிறது.
பகிர்வதற்கு ஏற்றது
நான் இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு, எனது தாயாருக்கு சுவிசேஷம் அறிவித்தேன். இயேசுவை ஏற்றுக்கொள்வர் என நான் எதிர்பார்க்க, அவரோ ஒருவருடமாய் என்னோடு பேசவில்லை. கிறிஸ்தவர்களுடன் அவருக்கு ஏற்பட்ட சில மனவருத்தத்தினால், அவர்களை அவர் நம்புவதில்லை. அவருக்காய் நான் ஜெபித்து, வாராவாரம் அவரை சந்தித்தேன். பரிசுத்த ஆவியானவர் என்னை தேற்றினார். தாயாரோ மௌனமாகவே இருந்தார். கடைசியாய் அவர் என் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்க துவங்க, நான் அவரை நேசிக்கவும், வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் அவருக்கு இயேசுவைக் குறித்து சொல்ல ஆரம்பித்தேன். நாங்கள் ஒப்புரவாகி, சில மாதங்களுக்கு பின், நான் மாறிவிட்டதாக என் தாயார் கூறினார். ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து, என் தாயார் இயேசுவை ஏற்றுக்கொண்டார். அதினால் எங்கள் உறவு இன்னும் ஆழமானது.
கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்து என்னும் மேன்மையான பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. பவுல் அப்போஸ்தலர், “அவரை அறிகிற அறிவின் வாசனையை” (2 கொரிந்தியர் 2:14) பிரசித்தப்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதாவது சுவிசேஷத்தைக் கேட்கிறவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்கள் கிறிஸ்துவின் சுகந்த வாசனையாய் இருக்கிறார்கள் என்றும் அதை நிராகரிப்பவர்கள் மரணத்தைத் தெரிந்துகொள்ளுகிறார்கள் என்றும் அறிவிக்கிறார் (வச.15-16).
நாம் இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு, மற்றவர்களை நேசித்து அவர்களின் வாழ்வை மாற்றக்கூடிய சத்தியத்தை பறைசாற்றும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். கடினமான மற்றும் தனிமையான தருணங்களிலும் கூட நம் தேவையை அவர் சந்திப்பார் என்று நாம் அவரை நம்பலாம். எந்த விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரி, சுவிசேஷத்தை பகிர்வது எப்போதுமே ஏற்றது
ஆழமான துயரம்
குணப்படுத்தமுடியாத ஒரு அரியவகை மூளைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட கரோலின், ஒரு வித்தியாசமான சேவையினால் வாழ்வில் நம்பிக்கையும், நோக்கத்தையும் பெற்றாள். ஒரு தன்னார்வ புகைப்படக்காரராக, கடும் வியாதியுற்ற பிள்ளைகளையும், அவர்கள் குடும்பங்களையும் புகைப்படம் எடுத்தார். இந்த சேவையின் மூலமாய், குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளோடு இருக்கும் விலையேறப்பெற்ற தருணங்கள் புகைப்படமாகின. துயரமான, இன்பமான மற்றும் அழகான எல்லா தருணங்களும் படமாக்கப்பட்டது. அந்த குடும்பங்கள் அனைத்தும், இக்கட்டான தருணங்களிலும் அன்புகாட்டவே தெரிந்துகொண்டதாக அவள் அறிவிக்கிறாள்.
துயரத்தை படம் பிடிப்பதில் சொல்ல முடியாத ஒரு வல்லமை இருக்கிறது. அதின் அழிக்கக்கூடிய வல்லமையும், அதேநேரத்தில் அவற்றின் மத்தியில் இருக்கும் அழகையும், நம்பிக்கையையும் நாம் அனுபவிக்கமுடியும்.
யோபு புத்தகம் முழுமையும், கடினமான சூழ்நிலைகளின் மத்தியில் நடைபெற்ற ஒரு துயரத்தின் புகைப்படம் எனலாம் (1:18-19). பல நாட்கள் யோபுவோடு அமர்ந்திருந்த அவனுடைய நண்பர்கள், அவனுடைய அந்த துயரத்தினால் சலிப்படைந்து, அதை குறைக்கும்பொருட்டு, அது தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்று விளக்குகின்றனர். ஆனால் அதில் ஒன்றையும் ஏற்காத யோபு, இந்த துயர நிலையின் அனுபவத்தை சாட்சியாக, “கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்” (19:24) என்கிறான்.
யோபு புத்தகத்தில், நம் துயரங்களினூடே ஜீவனுள்ள தேவனுக்கு நேரே திரும்புவது உளிவெட்டாகப் பதிந்துள்ளது (வச. 26-27). அவர் நம் வேதனையில் நம்மை தேற்றி, மரணத்திலிருந்து உயிர்தெழுதலுக்கு நம்மை