இறப்பும் தாழ்மையும்
பண்டைய அறிஞர்கள் ஜெரோம் மற்றும் டெர்டுலியன், பண்டைய ரோமாபுரியின் கதைகளை குறித்து இவ்வாறு குறிப்பிடுகின்றனர், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றிக்கு பின்னர் ஜெயம் பெற்ற அந்த தளபதி ஒளிருகின்ற ஒரு ரதத்தின் மேலேறி தலைநகரின் நடைபாதைகளில் விடியற்காலம் தொடங்கி பொழுதுசாயும் வரை உலா வருவாராம். ஜனங்களும் ஆரவாரம் செய்வார்கள். அந்த தளபதி பெருமிதம் பொங்க, தன் வாழ்நாள் சாதனையான இந்த கௌரவதால் மகிழ்ச்சி அடைவார். எனினும், புராணத்தின்படி அந்த தளபதிக்கு பின்னால் ஒரு பணியாள் நாள்முழுதும் நின்றுகொண்டு அவரது காதில், "மெமென்டோ மோரி" (லத்தீனில் "நீ மரிப்பாய் என்பதை நினைவில்கொள்" என்று அர்த்தம்) என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே இருப்பானாம். அனைத்து பாராட்டுகள் மத்தியில், தளபதிக்கு தான் சாவுக்குரியவன் என்ற நினைப்பு அவன் தாழ்மையாய் இருக்க மிக அவசியப்பட்டது.
யாக்கோபு பெருமை நிறைந்த விருப்பங்களினாலும், தன்னிறைவால் புடைத்துபோன கர்வத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு எழுதினார். அவர்களுடைய ஆணவத்தை எதிர்த்து," தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று" (யாக்கோபு 4:6) என்று உருவகுத்தும் வார்த்தைகளை பேசினார். "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்" (வ.10) என்பதே அவர்களுக்கு தேவைப்பட்டது. மேலும் அவர்கள் எவ்வாறு தாழ்மையடைய முடியும்? அந்த ரோம தளபதிகளை போல அவர்களும், தாங்கள் ஒரு நாள் மரிப்பார்கள் என்பதை நினைவுகூர வேண்டும். "நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." (வ.14) என்று யாக்கோபு வலியுறுத்தினார். அவர்களுடைய பெலவீனங்களை ஒப்புக்கொள்வதே புகையைப்போல காணாமல் போகும் அவர்கள் முயற்சிகளில் வாழ்வதற்கு மாறாக தேவனுடைய சித்தத்தின் கீழ் திடமாக வாழ அவர்களை விடுவித்தது (வ.15)
நம்முடைய நாட்கள் குறுகியது என்பதை நாம் மறக்கும்போது, அது பெருமைக்கு வழிவகுக்கும். ஆனால் நாம் சாவுக்குரியவர்கள் என்பதை புரிந்து தாழ்மைப்படும்போது, நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு மூச்சும் தேவ கிருபையாக பார்ப்போம். மெமென்டோ மோரி ("நீ மரிப்பாய் என்பதை நினைவில்கொள்").
ஜெயமும் தியாகமும்
ஒரு கோடை விடுமுறை வகுப்பில், என் மகன் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மலையில் ஏற விரும்பிய ஒரு சிறுவனை குறித்து புத்தகம் ஒன்றில் படித்தான். அச்சிறுவனுடைய பெரும்பாலான நேரம் இந்த இலட்சியத்திற்கு பயிற்சியெடுக்கவே செலவானது. இறுதியில் அவனுக்கான நேரம் கைகூடிவரும்போது, காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. மலையேற்றத்தில் ஒரு இடத்தில அவனுடைய குழுவிலிருந்த ஒருவன் நோய்வாய்ப்பட, தன் இலக்கை அடைவதற்கு பதிலாக அவனோடு தங்கியிருக்க தீர்மானிக்கிறான்.
வகுப்பறையில், என் மகனின் ஆசிரியர், "இக்கதையின் முக்கிய கதாபாத்திரம் அந்த மலையை ஏறாததால் அச்சிறுவன் தோற்றுவிட்டானா?" என கேட்டார். ஒரு மாணவன் "ஆம் ஏனெனில் தோல்வி என்பது அவனுடைய இரத்தத்திலேயே ஊறியுள்ளது" என்றான். ஆனால் இன்னொரு பிள்ளை இதை மறுத்தது. அச்சிறுவன் தோற்கவில்லை ஏனெனில் அவன் முக்கியமான ஒன்றை மற்றவருக்கு உதவுவதற்காக விட்டுக்கொடுத்தான் என்று காரணம் சொன்னான்.
நாம் நம்முடைய திட்டங்களை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்காக அக்கறை கொள்ளும்போது, நாம் இயேசுவை போல நடக்கிறோம். எங்கும் பயணித்து தேவனுடைய சத்தியத்தை பகிர்ந்துகொள்ள இயேசு சொந்த வீடு, நிரந்தர வருமானம் மற்றும் சமுதாய அங்கீகாரம் ஆகியவற்றை தியாகம் செய்தார். இறுதியாக, நம்மை பாவத்திலிருந்து விடுவித்து தேவனுடைய அன்பை காண்பிக்க தன் ஜீவனையே விட்டுக்கொடுத்தார் (1 யோவான் 3:16)
உலக பிரகாரமான ஜெயமும், தேவனுடைய பார்வையில் உள்ள ஜெயமும் அதிக வித்தியாசம் கொண்டவைகள். பிற்படுத்தப்பட்டோரையும், காயப்பட்டோரையும் மீட்க நம்மை உந்தித்தள்ளும் மனஉருக்கத்தை அவர் அதிகமாக மதிப்பீடுகிறார் (வ.17). ஜனங்களை காப்பாற்றும் தீர்மானங்களை அவர் அங்கீகரிக்கிறார். தேவனுடைய உதவியோடு, நாம் நமது மதிப்பீடுகளை அவருடைய மதிப்பீடுகளோடு இசையும்படிச் செய்து அவரையும், மற்றவர்களையும் நேசிக்க நம்மையே ஒப்புக்கொடுப்பதே எல்லாவற்றையும் பார்க்கிலும் மிக குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
நமக்கு தேவையானதை பெறுதல்
ஆரோன் பர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமநிலை உடைக்கும் வாக்கெடுப்பின் முடிவிற்காக கவலையோடு காத்திருந்தார். 1800ல் தாமஸ் ஜெபர்ஸனுடனான அதிபருக்கான தேர்தல் போட்டியில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில், தன்னையே அதிபராக தேர்வுக்குழு அறிவிக்கும் என்று ஆரோன் பர் நம்ப காரணமிருந்தது. எனினும் அவர் தோற்றார், கசப்பு அவரை ஆழமாய் ஊடுருவியது. அலெக்சாண்டர் ஹாமில்டன் தன்னை அதிபர் வேட்பாளராக ஆதரிக்காத காரணத்தால் அவருக்கு எதிராக மனக்கசப்பை வளர்த்துக்கொண்ட பர், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே ஹாமில்டனை துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொன்றார். இந்த கொலையால் வென்குண்டெழுந்த முழு தேசமும் அவருக்கு விரோதமாக திரும்ப, பர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட முதியவராக மரித்தார்.
அரசியல் விளையாட்டுக்கள் சரித்திரத்தில் கொடுமையான பங்காற்றியுள்ளன. தாவீது ராஜா மரிக்கும் தருவாயில் இருக்கையில், அவருடைய குமாரன் அதோனியா என்பவன் தாவீதின் தளபதியையும், மிக முக்கியமான ஆசாரியனையும் தன்னை ராஜாவாக்கும்படி தனக்கென்று பணியமர்த்திக்கொண்டான் (1 இராஜாக்கள் 1:5-8). ஆனால் தாவீது சாலொமோனையே ராஜாவாக தெரிந்து கொண்டார் (வ.17). தீர்க்கதரிசியான நாத்தானின் உதவியோடு இந்த கிளர்ச்சி முறியடிக்கப்படுகிறது (வ.11-53). அதோனியா சற்று ஓய்ந்தாலும், மீண்டும் இரண்டாம் முறை அரியணை ஏற திட்டம் தீட்டினான், எனவே சாலொமோன் அவனை கொல்ல வேண்டியிருந்தது (1 இராஜாக்கள் 2:13-25).
நம் மனுஷீக சுபாவமே நமக்கு உரிமை இல்லாதவைகளை சொந்தமாக்கிக்கொள்ள தூண்டுகிறது! நம் எவ்வளவுதான் கடினமாய் அதிகாரம், கவுரவம் அல்லது சொத்துக்களை அடைய முயன்றாலும் அது ஒரு போதும் நமக்கு நிறைவை தராது. அது எப்போதுமே நமக்கு பற்றாக்குறையாய் தான் இருக்கும். ஆனால் இயேசுவோ நம்மை போலல்லாமல் "மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (பிலிப்பியர் 2:8)
இதற்கு முரணாக, சுயநலமாக நம்முடைய சொந்த விருப்பங்களையே நாம் தொடர்ந்தால் நம்முடைய ஆழமான, உண்மையான ஏக்கங்கள் தீராது. முடிவுகள் அனைத்தையும் தேவனுடைய கரங்களில் விட்டுவிடுவதே சமாதானதிற்கும், சந்தோஷத்திற்குமான ஒரே வழி.
இனிமையான நித்திரை
என் தோழி இரவில் விழித்துக்கொள்ளும் போது, அவள் "என் இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்" என்ற பாடலின் வரிகளை நினைத்துக்கொள்வாள். அதை அவள் "நடு இரவின் பாடல்" என்றழைப்பாள் ஏனெனில் அவள் தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், அவரை நேசிக்க அவள் கொண்டிருந்த அநேக காரணங்களையும் அவளுக்கு அந்த பாடல் நினைவூட்டியது.
வாழ்க்கையில் தூக்கம் என்பது ஒரு அவசியமான, ஆனால் சிலசமயங்களில் மழுப்பலான பகுதியாகவும் உள்ளது. சிலநேரம் நம் வாழ்வில் அறிக்கையிடாத பாவங்களை நம் சிந்தைக்கு கொண்டுவரும் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தை உணர்வோம், அல்லது நம் வேலை, நம் உறவுகள், நம் பொருளாதாரம், நம் ஆரோக்கியம், அல்லது நம் பிள்ளைகள் போன்றவற்றை நினைத்து கவலைப்பட ஆரம்பிப்போம். உடனே நிச்சயமற்ற, கவலை நிறைந்த ஒரு எதிர்காலம் நம் எண்ணங்களில் வட்டமிட துவங்கும். நாம் சுதாகரித்து நேரம் கடந்திருக்கும் என்றெண்ணி கடிகாரத்தை பார்ப்போம் ஆனால் படுத்து சில நிமிடங்களே ஆகியிருக்கும்.
நீதிமொழிகள் 3:19-24 ல், நாம் தேவனுடைய ஞானம், புத்தி மற்றும் நல் ஆலோசனை ஆகியவற்றை காத்துக்கொள்ளும்போது நித்திரையின் நற்பலன்களையும் நாம் பெறுவோமென்று சாலொமோன் ராஜா நம்மை அறிவுறுத்துகிறார். உண்மையில் அவர், "அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும்...நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்."(வ) என்பதில் உரிமை பாராட்டினார்.
ஒருவேளை நம் அனைவருக்குமே ஒரு "நடு இரவின் பாடலோ", ஜெபமோ, அல்லது வேத வசனமோ மெல்லிய குரலில் ஒலித்து நம்மை நம்முடைய குழப்பமான சிந்தனைகளிலிருந்து மீட்டு தேவனையும், அவரது குணாதிசயத்தையும் உற்றுக்கவனிக்கும் சிந்தனைக்கு கொண்டுசெல்ல தேவைப்படுகிறது. சுத்தமான மனசாட்சியும், தேவனின் உண்மைத்தன்மைக்கு நன்றி நிறைந்த இதயமும், அன்புமே நமக்கு இனிமையான நித்திரையை கொண்டுவரும்.