Archives: டிசம்பர் 2021

நேர்த்தியான பெயர்

ஆகஸ்ட் மாதத்தின் உஷ்ணமான ஒருநாளில் என் மனைவி என்னுடைய இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் போராடிக்கொண்டிருந்த வரை அவன் பெயரில்லாமலேயே இருந்தான். ஐஸ்கிரீம் கடைகளில் அமர்ந்தும், நீளமான கார் பயணம் மேற்கொண்டும் அவனுக்கு பெயரை தீர்மானிக்க முயன்றோம். எங்களால் முடியவில்லை. அவனுக்கு மீகா என்று பெயர் சூட்டும் வரைக்கும் அவனை “வில்லியம்ஸின் குழந்தை” என்றே அழைத்தோம். 

நேர்த்தியான ஒரு பெயரை தேர்ந்தெடுப்பது சற்று வெறுப்பான ஒன்று. உலகத்தை நித்திய மாற்றத்திற்குள் கொண்டுவரும் இலக்குடன் இவ்வுலகத்திற்கு வந்த தேவனைப்போல் நாம் இல்லை. ஆகாஸ் ராஜாவின் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளும்பொருட்டு ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் தேவனிடத்தில் ஒரு அடையாளத்தைக் கேட்கும்படிக்கு தேவன் ஆகாஸை ஏவினார் (ஏசாயா 7:10-11). அடையாளத்தைக் கேட்க ராஜா மறுத்தாலும், தேவனாகவே ஓர் அடையாளத்தைக் கொடுக்கிறார்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (வச. 14). தேவன் அந்த பிள்ளைக்குப் பெயரிடுகிறார். அந்த பிள்ளையானது நம்பிக்கையிழந்திருக்கிற மக்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாய் இருப்பார். இயேசுவின் பிறப்பைப் பதிவுசெய்யும் மத்தேயு அந்த பெயருக்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறார் (மத்தேயு 1:23). இயேசு இம்மானுவேலாய் இருப்பார். அவர் தேவனுடைய ஸ்தானாதிபதியாக மட்டுமல்லாது, பாவத்தினால் நம்பிக்கையிழந்திருந்த மக்களை மீட்கும்பொருட்டு, மாம்சத்தில் உதித்த தேவனாயிருப்பார். 

தேவன் நமக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். அவருடைய குமாரனே அந்த அடையாளம். அவருடைய குமாரனுடைய பெயர் இம்மானுவேல் - தேவன் நம்மோடிருக்கிறார். அவருடைய பிரசன்னத்தையும் அன்பையும் பிரதிபலிக்கும் பெயர். அந்த இம்மானுவேலை நாம் இன்று பற்றிக்கொள்ளும்படியாகவும், அவர் நம்மோடு இருக்கிறார் என்று அறியவும் அவர் நம்மை அழைக்கிறார்.

உற்சாகமாய் கொடுக்கிறவர்

மூன்றாம் நூற்றாண்டில் பிறந்த நிக்கோலஸ் என்பவர், அவர் மரித்த பல நூற்றாண்டுகள் கழித்து சாண்ட கிளாஸ் (கிறிஸ்மஸ் தாத்தா) என்று அழைக்கப்படுவார் என்பது அவருக்கு தெரியாது. அவர் தேவனை நேசித்து, மக்கள் மீது அக்கறைக்கொண்டு, தன்னுடையவைகள் எல்லாவற்றையும் உற்சாகமாய் மற்றவர்களுக்கு கொடுப்பதிலும் நற்கிரியை செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு சாதாரண மனிதர். அவரைக் குறித்து சொல்லப்பட்ட ஒரு கதையில், பணத் தேவையிலிருந்த ஒரு குடும்பத்திற்கு, இரவில் அவர்களின் வீட்டு ஜன்னல் வழியே ஒரு தங்கம் நிறைந்த பையை இவர் தூக்கி வீச, அது அவர்களின் வீட்டிலிருந்த காலணிக்குள் போய் விழுந்தது என்று கூறப்படுகிறது. 

நிக்கோலஸ்க்கு நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்த பவுல் அப்போஸ்தலர் கொரிந்திய திருச்சபை விசுவாசிகளை உற்சாகமாய் கொடுக்கும்படிக்கு வலியுறுத்துகிறார். எருசலேமிலிருந்த மக்களின் பெரிய பொருளாதார தேவையைக் குறித்து கூறி, அவர்களை தாராளமாய் கொடுக்கும்படிக்கு உற்சாகப்படுத்துகிறார். தங்கள் ஆஸ்திகளையும் பொருளையும் கொடுப்பவர்களுக்கு வரும் ஆசீர்வாதங்களைக் குறித்து பவுல் கூறுகிறார். “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (2 கொரி. 9:6)) என்று அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். உற்சாகமாய் கொடுப்பதினால், அவர்கள் ஒவ்வொருநாளும் சம்பூரணமுள்ளவர்களாய் மாறி (வச. 11), தேவனை கனப்படுத்துகிறார்கள்.  

தகப்பனே, இந்த கிறிஸ்மஸ் நாட்களில் மட்டுமல்லாது, ஆண்டு முழுவதும் அனைவருக்கும் உற்சாகமாய் கொடுக்கிறவர்களாய் மாற எங்களுக்கு உதவிசெய்வீரா? விவரிக்கமுடியாத ஆச்சரியமான உம்முடைய குமாரனாகிய இயேசு என்னும் பரிசை எங்களுக்கு அருளியதற்காக உமக்கு நன்றி (வச. 15). 

வேதத்தை உதாரணப்படுத்துவது

டச்சு தேசத்தின் வீடுகளெங்கிலும் காணப்படும் நீலமும் வெண்மையும் கலந்த பீங்கான் ஓடுகள் டெல்ஃப்ட் என்னும் நகரத்தில் உருவாக்கப்பட்டவைகள். அவைகள் பொதுவாக நெதர்லாந்தின் பிரபலமான காட்சிகளான அழகான நிலப்பரப்புகள், எங்கும் நிறைந்த காற்றாலைகள் மற்றும் மக்கள் வேலை செய்யும், விளையாடும் காட்சிகள் அகியவற்றை பிரதிபலிக்கின்றன. 

19ஆம் நூற்றாண்டில் சார்லஸ் டிக்கன்ஸ் என்பவரால் எழுதப்பட்ட “எ கிறிஸ்மஸ் கேரல்” என்னும் புத்தகத்தில் இந்த பீங்கான் ஓடுகள் எவ்வாறு வேதாகமத்தை உதாரணப்படுத்துகிறது என்பதை விவரிக்கிறார். ஒரு டச்சுக்காரர் இந்த ஓடுகளைப் பயன்படுத்தி கட்டமைத்த குளிர்காயும் நெருப்பிடம் பற்றி அவர் கூறுகிறார். “அதில் காயீன் ஆபேல், பார்வோன் குமாரத்திகள், சேபாவின் ராணிகள்,... மற்றும் கடலில் பயணிக்கும் அப்போஸ்தலர்கள்” என்று அவர் வடிவமைத்துள்ளார். பல குடும்பங்களுக்கு இந்த நெருப்பிடம், குடும்பமாக அமர்ந்து வேதாகமத்தைக் கற்கும் இடமாகவும் கதைகளை பகிருவதற்கு ஏதுவாகவும் உள்ளது. தேவனுடைய குணாதிசயங்களான நீதி இரக்கம் மற்றும் கிருபை ஆகியவைகளை கற்றுக்கொள்ளமுடிகிறது. 

வேதாகமத்தின் சத்தியங்கள் இன்றும் ஏற்புடையதாயிருக்கிறது. சங்கீதம் 78, “பூர்வகாலத்து மறைபொருளை விவரித்து, நாம் கேள்விப்பட்டவைகள் மற்றும் பிதாக்கள் நமக்கு அறிவித்தவைகளை” (வச. 2-3) போதிக்கும்படிக்கு அறிவுறுத்துகிறது. மேலும் “கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும்” (வச. 4,6) பின்வரும் சந்ததிக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் சொல்லும்படிக்கு அறிவுறுத்துகிறது. 

தேவனுடைய துணையோடு, தேவனை முற்றிலும் கனம்பண்ணும் விதத்தில், வேதாகமத்தின் சத்தியங்களை அடுத்த தலைமுறையினருக்கு நேர்த்தியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தும் படைப்பாற்றல் கொண்ட வழிகளை நாம் கண்டறிவோம். 

இன்றைய தலைமுறை

“முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை ஒருபோதும் நம்பவேண்டாம்” என்று 1964இல் ஜாக் வெண்பெர்க் என்ற ஓர் இளம் சுற்றுச்சூழல் ஆய்வாளர் சொன்னார். அவருடைய அந்த கருத்து அந்த தலைமுறையையே பாதித்தது குறித்து அவர் பின்னர் வருந்தினார். பின்னர் அவர், “என்னுடைய தலையின் உச்சியிலிருந்து நான் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டேன்... அது சிதைந்து முற்றிலும் தவறாய் புரிந்துகொள்ளப்பட்டது” என்று வருந்தினார். 

பல்லாயிரக்கணக்கான மக்களை இலக்காகக் கொண்ட இழிவான கருத்துக்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது அதற்கு நேர்மாறாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு தலைமுறையிலிருந்து மறுதலைமுறைக்கு தொடர்புகொள்ளப்படும் தவறான கருத்துக்கள், இருதரப்பினராலும் தவிர்க்கப்பட வேண்டும். நிச்சயமாக ஒரு சிறந்த வழி இருக்கிறது. 

எசேக்கியா ஒரு நல்ல ராஜாவாய் இருந்தபோதிலும், அடுத்த தலைமுறையைக் குறித்த அவருடைய அக்கறை குறைவாயிருந்தது. அவருடைய இளம்பிரயாத்திலேயே அவர் வியாதிகண்டான் (2 இராஜ. 20:1). அவருடைய ஜீவனுக்காய் தேவனிடத்தில் மன்றாடினார் (வச. 2-3). தேவன் அவருடைய ஆயுசுநாட்களை 15 வருடங்கள் கூட்டுகிறார் (வச. 6).

ஆனால் அவருடைய தலைமுறை சிறைபிடிக்கப்பட்டு போகும் என்னும் தகவலை கேள்விப்படும்போது அவர் அதை பொருட்படுத்தவில்லை (வச. 16-18). “என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே” என்று எண்ணுகிறார் (வச. 19). தன்னுடைய நலத்தின் மீது எசேக்கியாவுக்கு இருந்த அக்கறையை அடுத்த தலைமுறையின் மீது காண்பிக்கவில்லை. 

நமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் கோட்டைக் கடக்கும் துணிச்சலுள்ள அன்பிற்கு தேவன் நம்மை அழைக்கிறார். பழைய தலைமுறைகளுக்கு இன்றைய இளைய தலைமுறையினரின் இலட்சியமும் படைப்பாற்றலும் தேவை. அதேபோன்று, இளைய தலைமுறையினரும் மூத்தவர்களின் ஞானத்தினாலும் அனுபவத்தினாலும் பயனடையவேண்டும். இது மற்றவர்களைக் குறித்து, கருத்துக்களையும் கோபங்களையும் பரிமாறும் நேரமல்ல. நல்ல சிந்தனைகளை பரிமாறுவோம். நாம் இதில் இணைந்து செயல்படுவோம்.