“முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை ஒருபோதும் நம்பவேண்டாம்” என்று 1964இல் ஜாக் வெண்பெர்க் என்ற ஓர் இளம் சுற்றுச்சூழல் ஆய்வாளர் சொன்னார். அவருடைய அந்த கருத்து அந்த தலைமுறையையே பாதித்தது குறித்து அவர் பின்னர் வருந்தினார். பின்னர் அவர், “என்னுடைய தலையின் உச்சியிலிருந்து நான் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டேன்… அது சிதைந்து முற்றிலும் தவறாய் புரிந்துகொள்ளப்பட்டது” என்று வருந்தினார்.
பல்லாயிரக்கணக்கான மக்களை இலக்காகக் கொண்ட இழிவான கருத்துக்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது அதற்கு நேர்மாறாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு தலைமுறையிலிருந்து மறுதலைமுறைக்கு தொடர்புகொள்ளப்படும் தவறான கருத்துக்கள், இருதரப்பினராலும் தவிர்க்கப்பட வேண்டும். நிச்சயமாக ஒரு சிறந்த வழி இருக்கிறது.
எசேக்கியா ஒரு நல்ல ராஜாவாய் இருந்தபோதிலும், அடுத்த தலைமுறையைக் குறித்த அவருடைய அக்கறை குறைவாயிருந்தது. அவருடைய இளம்பிரயாத்திலேயே அவர் வியாதிகண்டான் (2 இராஜ. 20:1). அவருடைய ஜீவனுக்காய் தேவனிடத்தில் மன்றாடினார் (வச. 2-3). தேவன் அவருடைய ஆயுசுநாட்களை 15 வருடங்கள் கூட்டுகிறார் (வச. 6).
ஆனால் அவருடைய தலைமுறை சிறைபிடிக்கப்பட்டு போகும் என்னும் தகவலை கேள்விப்படும்போது அவர் அதை பொருட்படுத்தவில்லை (வச. 16-18). “என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே” என்று எண்ணுகிறார் (வச. 19). தன்னுடைய நலத்தின் மீது எசேக்கியாவுக்கு இருந்த அக்கறையை அடுத்த தலைமுறையின் மீது காண்பிக்கவில்லை.
நமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் கோட்டைக் கடக்கும் துணிச்சலுள்ள அன்பிற்கு தேவன் நம்மை அழைக்கிறார். பழைய தலைமுறைகளுக்கு இன்றைய இளைய தலைமுறையினரின் இலட்சியமும் படைப்பாற்றலும் தேவை. அதேபோன்று, இளைய தலைமுறையினரும் மூத்தவர்களின் ஞானத்தினாலும் அனுபவத்தினாலும் பயனடையவேண்டும். இது மற்றவர்களைக் குறித்து, கருத்துக்களையும் கோபங்களையும் பரிமாறும் நேரமல்ல. நல்ல சிந்தனைகளை பரிமாறுவோம். நாம் இதில் இணைந்து செயல்படுவோம்.
எந்தெந்த வழிகளில் மற்ற வயதினரை புறக்கணித்து, கனவீனப்படுத்தியுள்ளதாக நீங்கள் எண்ணுகிறீர்கள்? அவர்களுக்கு ஊழியம் செய்ய தேவன் உங்களுக்கு அருளின கிருபைகளை எவ்விதத்தில் பயன்படுத்தலாம்?
தகப்பனே, வாழ்க்கைப் பாதையில் என்னைவிட வேறுபட்டவர்களை உற்சாகப்படுத்தத் தவறினதற்காய் என்னை மன்னியும்.