Archives: நவம்பர் 2021

ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதும்

ஒரு குழந்தையாய், டென்னி பாதுகாப்பற்றவனாய் உணர்ந்தான். அவன் தன் தந்தையின் ஒப்புதலைப் பெற முயன்றான். ஆனால் அதை அவனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் பள்ளியிலோ அல்லது வீட்டிலோ என்ன செய்தாலும் அதை நேர்த்தியாய் செய்வதில்லை. அவன் வளர்ந்தபோதும் அந்த குற்றவுணர்வு அவனுக்குள் இருந்தது. நான் சிறந்தவனா?. என்ற கேள்வி அவனுக்குள் எப்பொழுதும் இருந்தது.

டென்னி, இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்பே பாதுகாப்பாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகவும் உணர ஆரம்பித்தான். அவனை படைத்த ஆண்டவர் அவனை நேசித்து தன்னுடைய பிள்ளையாக்கிக்கொண்டார் என்பதைக் கற்றுக்கொண்டான். கடைசியாக, அவன் மதிப்புமிக்கவன், பாராட்டுக்குரியவன் என்னும் நம்பிக்கையோடு தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான். 

ஏசாயா 43:1-4ல், தேவன் தான் தெரிந்துகொண்ட மற்றும் உருவாக்கின இஸ்ரவேலிடம், அவர்களை தன்னுடைய பெலத்தினாலும் அன்பினாலும் மீட்டுக்கொள்வதாக அறிவிக்கிறார். “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்” என்று அறிவிக்கிறார். அவர் அவர்களை நேசித்தபடியினால், அவர்களின் சார்பில் நின்று செயலாற்றுவதாக அறிவிக்கிறார் (வச. 4).

அவர் நேசிக்கிறவர்கள் மீது உண்டாகும் மதிப்பானது எதிலிருந்தும் கிடைப்பதில்லை, அவர் நம்மை அவருடையவர்களாய் தெரிந்துகொண்டார் என்னும் எளிமையான, வலிமையான சத்தியத்திலிருந்தே கிடைக்கிறது. 

ஏசாயா 43ஆம் அதிகாரத்தில் உள்ள இந்த வார்த்தைகள் டென்னிக்கு வெறும் பாதுகாப்பை மட்டும் கொடுக்கவில்லை, தேவன் அவனை அழைத்த அழைப்பிற்கு தன்னால் இயன்றவரை உண்மையாய் செயல்படவேண்டும் என்ற உத்வேகத்தை அவனுக்குள் ஏற்படுத்தியது. இன்று அவர் ஒரு போதகராய், “நாங்கள் இயேசுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டோம்” என்னும் வாழ்வளிக்கும் செய்தியைக் கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார். இன்று இந்த சத்தியத்தை நாமும் உறுதியாய் நம்பி ஜீவிக்கலாம். 

நம் மெய்யான அங்கீகாரம்

ஒரு மனிதன் முதலில் ஒரு பொருட்கள் சேகரிக்கும் பெட்டியை கையிலெடுத்தார். அவருடைய ஊரில் இருந்த ஒரு மீன் தூண்டில் கடையில், தூண்டில் கொக்கிகள், ஈர்ப்புகள், தக்கைகள் மற்றும் எடைகளுடன் தன்னுடைய வணிகக் கூடையை நிரப்பினார். அத்துடன் ஒரு முழுமையான தூண்டிலோடு கூட குச்சியையும் சுற்றும் குழலையும் தேர்ந்தெடுத்தார். இதற்கு முன்பாக மீன் பிடித்ததுண்டா? என்று கடைக்காரர் அவரிடம் கேட்டார். அவர் இல்லை என்று பதிலளித்தார். “இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று அந்த கடைக்காரர் முதலுதவிப் பெட்டியை நீட்டினார். அதை ஒத்துக்கொண்டு அதற்கான விலையைக் கொடுத்து விடைபெற்ற அந்த மனிதர், மாலையில் கொக்கிகளினாலும், கயிற்றினாலும் கைகளில் ஏற்பட்ட காயங்களுடன் ஒரு மீன் கூட பிடிக்காமல் திரும்பினார்.    

அந்த பிரச்சனை சீமோன் பேதுருவுக்கு இல்லை. அவன் ஒரு திறமையான மீன்பிடிக்கும் நபர். அவனைப் பார்த்து இயேசு, “ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று சொல்லும்போது அவன் ஆச்சரியப்படுகிறான் (லூக்கா 5:4). இரா முழுதும் தேடியும் ஒரு மீனும் அகப்படாத நிலையில் சீமோனும் அவனுடைய குழுவினரும் “தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்” (வச. 6). “இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்” (வச. 7).

அதைப் பார்த்த சீமோன் பேதுரு, “இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்” (வச. 8). இயேசு சீமோனின் உண்மையான அங்கீகாரத்தை அறிந்திருந்தார். தன்னுடைய சீஷனைப் பார்த்து, “இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்” என்று சொன்னார். அதைக் கேட்டமாத்திரத்தில் சீமோன், “எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றான்” (வச. 10-11). நாமும் அவரைப் பின்பற்றும்போது, நம்மை யார் என்பதையும், நாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நமக்கு விளங்கச்செய்வார். 

உம் பிரசன்னத்தில் தங்கியிருக்க!

அவர்கள் தங்களுடைய காரில் ஏறிப்போனபோது, தன் தாயாரின் கைகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தர்ஷன் ஆலயத்தின் கதவை நோக்கி ஓடினான். அவன் அங்கிருந்து வருவதை விரும்பவில்லை. அவனுடைய தாயார் அவன் பின்னாக ஓடி, அவனை தன் கைகளினால் அணைத்து மீண்டும் புறப்படுவதற்கு தயாரானாள். தர்ஷனை அணைத்து, அவனுடைய தாயார் அவனை வெளியே கூட்டிச்செல்லும்போது, அவன் ஆலயத்தை நோக்கி தன் கைகளை நீட்டியவாறு அடம்பிடித்துக்கொண்டே வெளியே சென்றான். 

தர்ஷன், ஆலயத்தில் தனக்கிருக்கும் நண்பர்களை விட்டுப் பிரிய மனதில்லாமல் அப்படி செய்திருக்கலாம். ஆனால் அவனுடைய அந்த ஆர்வம், தாவீது தேவனை ஆராதிக்க காண்பித்த ஆர்வத்திற்கு ஒத்திருக்கிறது. தன்னுடைய நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன்னுடைய சத்துருக்களை அழிக்கும்படிக்கு தேவனிடத்தில் கெஞ்சினாலும், அவன் சமாதானமாயிருப்பதற்கு, “நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” என்கிறார் (27:4). அவர்; எங்கேயிருந்தாலும் தேவ பிரசன்னத்தை அனுவித்து தேவனோடு இருப்பதையே நாடினான். இஸ்ரவேலின் சிறந்த கதாநாயகனும் படைத்தலைவனுமான தாவீது, “கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்” என்று தன் விருப்பத்தை பிரதிபலிக்கிறான் (வச. 6). 

அவர் விசுவாசத்தினால் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குள் வாசம்பண்ணுகிறார் என்பதினால், நாம் அவரை எங்கு வேண்டுமானாலும் ஆராதிக்கமுடியும் (1 கொரிந்தியர் 3:16; எபேசியர் 3:17). தேவ பிரசன்னத்தில் நம்முடைய நாட்களை கழிக்கவும், மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து அவரை ஆராதிக்கவும் முற்படுவோம். கட்டடத்தின் சுவரில் அல்ல, தேவனில் நம்முடைய பாதுகாப்பையும் நம்முடைய அதிகப்படியான மகிழ்ச்சியையும் நாம் அடைகிறோம். 

வல்லமையுள்ளதும் நேசிக்கக்கூடியதும்

ஈக்வேடார் எரிமலை 2020ஆம் ஆண்டில் வெடித்து சிதறியது. அதிலிருந்து வெளிவந்த கருமையான தீப்பிளம்புகள் 12,000 மீட்டர் உயரத்திற்கு எழும்பிற்று என்று செய்தி ஊடகங்கள் அறிவிக்கிறது. அந்த பிளம்பு நான்கு மாகாணங்களில் (ஏறத்தாழ 198,000 ஏக்கர்) பாய்ந்து சாம்பல் நிறத்தில் காணப்பட்டது. வானம் மங்கலாகவும், இருள் சூழ்ந்தும் காணப்பட்டது. காற்று சற்று தடிமனாய் வீசியதால் சுவாசிக்க கடினமாய் தோன்றியது. பெலிசியானோ இங்கா என்ற விவசாயி, “எல் கமர்சியோ” என்ற பத்திரிக்கையில் அளித்த பேட்டியொன்றில், “இந்த தூசுகளெல்லாம் எங்கிருந்து வந்தன என்று எங்களுக்குத் தெரியாது... ஆனால் வானம் இருட்டுவதை கண்டு நாங்கள் அஞ்சினோம்” என்று கூறியுள்ளார். 

இஸ்ரவேலர்கள், “சேர்ந்துவந்து, (சீனாய்) மலையின் அடிவாரத்தில்” நின்று, “அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும்” சூழ்ந்ததைக் கண்டு அஞ்சினர் (உபாகமம் 4:11). அதிரக்கூடிய தேவனுடைய சத்தத்தைக் கேட்டு மக்கள் அஞ்சினர். அது பயமுறுத்தக்கூடியதாயிருந்தது. ஜீவனுள்ள தேவனை சாட்சியிடும் ஆச்சரியமான ஒரு அனுபவமாய் அது இருந்தது.

பின்பு “கர்த்தர்… பேசினார்,” அவர்கள், “வார்த்தைகளின் சத்தத்தை” கேட்டார்கள், ஆனால் “ஒரு ரூபத்தையும் காணவில்லை” (வச. 12). அவர்களின் எலும்புகளை அதிரப்பண்ணிய வார்த்தை அவர்களுக்கு ஜீவனையும் நம்பிக்கையையும் கொடுத்தது. தேவன் இஸ்ரவேலர்களுக்கு பத்துக் கற்பனைகளைக் கொடுத்து, அவர்களோடு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார். கருமேகத்திலிருந்து ஒலித்த அந்த சத்தம் அவர்களை அதிரப்பண்ணியது. ஆனால் அவர்களை கவர்ந்திழுத்து நேசித்தது (யாத்திரரகமம் 34:6-7). தேவன் வல்லமையுள்ளவர், உலகத்திற்கு அப்பாற்பட்டவர், அதிரக்கூடியவர். ஆனாலும் அவர் நம்மை அன்போடு நெருங்குகிறார். வல்லமையுள்ள அன்பான தேவனே நம்முடைய அத்தியாவசிய தேவை.