தன் இராணுவ முகாமின் பாதுகாப்புகளை வலுபடுத்துவதற்காக பாலைவனத்தின் மணலைத் தோண்டிய பிரஞ்சு இராணுவ வீரனுக்கு, பிரம்மாண்டமான ஒரு புதையல் தென்படப்போவது தெரியாது. மணலைத் தோண்டியபோது, அவனுக்கு ஒரு கல் தட்டுப்பட்டது. சாதாரண ஒரு கல் அல்ல அது தான் ரோஸட்டா கல்வெட்டு. மூன்று மொழிகளில் எழுதப்பட்ட ஐந்தாம் டோலமியின் விதிமுறைகள் மற்றும் ஆட்சி பதிவுகள் உள்ளடங்கிய கல்வெட்டு. ஹீரோகிளிஃபிக் எனப்பட்ட எகிப்திய எழுத்துக்கலையின் மகத்துவத்தைப் பிரதிபலிக்கும் 19ஆம் நூற்றாண்டின் பிரம்மாண்டமான அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு அது (தற்போது பிரிட்டிஷ்அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது).
நம்மில் பலருக்கு பெரும்பாலான வேதப்பகுதிகள் ஆழத்தில் புதைந்துள்ள பொக்கிஷங்கள் போன்றவை. சிலுவை மரணத்திற்கு முன்தினம் இரவில், இயேசு தன்னை பின்பற்றியவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை வாக்குப்பண்ணுகிறார். அவர் சொல்லும்போது, “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவான் 16:13) என்று சொல்லுகிறார். வேதத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் ஆச்சரியமான சத்தியங்களின் மீது பரிசுத்த ஆவியானவரே ஒளியூட்டும் ஒரு ரோஸட்டா கல்வெட்டு.
வேதத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து சத்தியங்களையும் நாம் அறிந்துகொள்ள முடியாது என்றாலும், கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு தேவையான அனைத்துக் காரியங்களையும் ஆவியானவர் நமக்குக் கொடுக்கிறார். அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார்.
எந்த வேதப்பகுதிகளை புரிந்துகொள்ள கடினப்படுகிறீர்கள்? அவைகளை வரிசைப்படுத்தி, அவைகளைக் புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவரை நாடுவோம்.
சத்தியத்தின் தேவனே, உம்முடைய ஞானத்தை நான் சரியாய் விளங்கிக்கொள்ளும்பொருட்டு சத்திய ஆவியானவரை சார்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.