இளமைப்பருவம் என்பது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இக்கட்டான ஒரு பருவம். என்னுடைய இளமைப் பருவத்தில் என் தாயாரிடத்திலிருந்து என்னை தனியே அடையாளப்படுத்த எண்ணிய நான், அவர்களுடைய கருத்துகள், விதிமுறைகள், நோக்கங்கள் ஆகியவைகள் என்னை தவறாய் நடத்துகிறது என்று புறக்கணித்தேன். அவைகள் நல்லது என்பதை ஒரு கட்டத்தில் புரிந்துகொள்ள நேரிட்டாலும், அந்த பருவத்தில் அதை என்னால் செய்யமுடியவில்லை. அதை மீறுவது எனக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்த என் தாய் என்னுடைய மீறுதல்களைக் குறித்து புலம்பினார்.

தேவனும் அவருடைய பிள்ளைகளான இஸ்ரவேலைக் குறித்து இதேபோன்று எண்ணினார். தேவன் தன்னுடைய ஞானத்தை பத்து கற்பனைகளாய் கொடுத்துள்ளார் (உபாகமம் 5:7-21). அவைகள் விதிமுறைகளை உள்ளடக்கிய பட்டியல் போல் தெரிந்தாலும், “அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி..” (வச.29) என்று தேவன் அதை கொடுத்ததற்கான சித்தத்தை மோசேக்கு வெளிப்படுத்துகிறார். கர்த்தருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதின் மூலம் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் தேவ பிரசன்னத்தை இஸ்ரவேலர்கள் அனுபவிக்க முடியும் என்ற தேவனுடைய இருதயத்தை மோசே அறிந்திருந்தார் (வச.33). 

கர்த்தருடைய கற்பனைகள் நன்மையானவைகள் என்பதை உணராமல் தேவனோடு ஒரு இளமைப்பருவ அனுபவத்திற்குள் கடந்துசெல்கிறோம். நமக்கு எது நல்லது, எது ஞானத்திற்கேதுவானது என்று தேவன் வைத்துள்ளவைகளை உணர்ந்து அதை கவனமாய் கைக்கொள்ள பிரயாசப்படுவோம். நாம் இயேசுவைப் போல மாறுவதற்கும், ஆவிக்குரிய முதிர்ச்சி நம்மில் ஏற்படுத்துவதுமே அவருடைய வழிநடத்துதல்களின் நோக்கமாயிருக்கிறது (சங். 119:97-104; எபேசியர் 4:15; 2 பேதுரு 3:18).