Archives: செப்டம்பர் 2021

ஒரு ஜீவனுள்ள பத்திரம்

தன்னுடைய தாத்தாவின் படைப்பை நினைவுகூறும் வகையில் பீட்டர் கிராஃட் - “வேதாகமம், எந்தப் பதிப்பில் இருந்தாலும், அதை எடுப்பவர்கள், அதை புரிந்துக்கொள்வது மட்டுமல்லாமல், வேதத்தை ஜீவனுள்ள பத்திரமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல இப்போதும் பொருத்தமானதாகவும், ஆபத்தானதாகவும், உற்சாகமூட்டுகிறதாயும் இருக்கிறதை அனுபவிக்க வேண்டுமென்றும்” எழுதுகிறார். இளைஞர்கள் மத்தியில் ஊழியம் செய்த, பீட்டருடைய தாத்தா ஜெ.பி. ஃபிலிப்ஸ், இரண்டாம் உலகப்போரின்போது, தன்னுடைய ஆலயத்தில் இருக்கும் மாணவர்களுக்கு உயிரூட்டும் வகையில் ஆங்கில வேதாகமத்தின் புதிய பொழிப்புரையை மேற்கொண்டார். 

ஃபிலிப்புடைய மாணவர்களைப் போல – மொழிபெயர்ப்பின் காரணமாக மட்டுமல்ல - வேதத்தை வாசிக்கவும், அதை அனுபவிக்கவும் தடைகளை எதிர்கொள்கிறோம். நேரம், ஒழுக்கம் அல்லது புரிந்துகொள்ள சரியான கருவிகள் இல்லாதிருக்கலாம். ஆனால் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று சங்கீதம் 1:1-2 கூறுகிறது. வேதத்தை அனுதினமும் தியானிக்கும்போது, நாம் எல்லா சூழ்நிலைகளிலும், எப்பேற்ப்பட்ட கடினமானதாக இருந்தாலும், நாம் தழைக்க முடியும். 

நீங்கள் வேதத்தை எவ்வாறு காண்கிறீர்கள்? இன்றும் வாழ்வதற்கான நுண்ணறிவுடன் இயேசுவை விசுவாசித்து அவரை பின்பற்றுவதற்கான அழைப்பு ஆபத்தானதாகவும், தேவனையும், மனுகுலத்தையும் மிக நெருக்கமாக அறிந்துக்கொள்ள உற்சாகமூட்டுகிறதற்கு பொருத்தமாகவும் இருக்கிறது. நமக்கு தினமும் வாழ்வதற்கு தேவைப்படும் நீர்க்கால்களை (வச. 3) போல இருக்கிறது. இன்றைக்கு அவரைச் சார்ந்துக்கொண்டு, நேரத்தைக் கொடுத்து, சரியான கருவிகளைப் பெற்றுக்கொண்டு, வேதத்தை ஜீவனுள்ள பத்திரமாக அனுபவிக்க தேவன் உதவிசெய்ய கேட்போம்.

அன்பின் மகா பெரிய செயல்

ஒரு தேசிய வனப்பகுதியில், தேன் காளான் என்று பரவலாக அறியப்படும் ஒரு வகை பூஞ்சை 2,200 ஏக்கர் பரப்பளவில் மரத்தின் வேர்வழியாகப் பரவுகிறது. இது, இதுவரை கண்டிராத மிகப் பெரிய உயிரினமாகும். இது ஆயிரம் மடங்கிற்கு மேலாக தன்னுடைய கருப்பு குறுகு நீள்படிவ இழைகளை வனத்திற்கு இடையில் நெய்து, மரங்கள் வளரும்போதே அவைகளை கொன்றுவிடுகிறது. “ரைஸோமார்ஃப்ஸ்” என்று இந்த குறுகு நீள்படிவ இழைகள், மண்ணுக்குள் சுமார் பத்து அடி ஆழம் மட்டும் சுரங்கம் போல் ஊடுறுவுகிறது. இந்த உயிரினம் நம்ப முடியாத அளவுக்கு மிகப் பெரியதாக இருந்தாலும், அது ஒரு ஒற்றை நுண்துளை போல ஆரம்பமானது.

ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று என்று வேதம் கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் - ஆதாம் மற்றும் இயேசு – ஆகிய இரு நபர்களை வேறுபடுத்திக் காண்பிக்கிறார் (ரோமர் 5:14-15). ஆதாமுடைய பாவம் எல்லா மனுஷருக்கும் ஆக்கினையும் மரணமும் கொண்டுவந்தது (வச. 12). ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷரும் பாவிகளாகி, தேவனுக்கு முன்பாக ஆக்கினைக்கு நிற்கவேண்டியிருந்தது (வச. 17). ஆனால் மனுக்குலத்தின் பாவப் பிரச்சனையை கையாள அவருக்கு ஒரு வழி இருந்தது. சிலுவையில் இயேசுவின் நீதியான செயலினிமித்தம் தேவன், நித்திய ஜீவனையும், அவர் முன் நிற்கும்படியான உரிமையையும் கொடுக்கிறார். கிறிஸ்துவின் அன்பு மற்றும் கீழ்படிந்த செயல், ஆதாமின் ஒரே கீழ்படியாமையை மேற்கொள்ளும் வல்லமையுடையதாயும், எல்லாருக்கும் ஜீவனைக் கொடுக்க வல்லமை வாய்ந்ததாயும் இருந்தது (வச. 18).

இயேசு தம்முடைய சிலுவை மரணத்தினால், அவரை விசுவாசிக்கும் யாவருக்கும் நித்திய ஜீவனை அளிக்கிறார். நீங்கள் இன்னும் அவருடைய மன்னிப்பையும் இரட்சிப்பையும் பெறவில்லையென்றால், இன்றைக்கே அதைச் செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு விசுவாசியாயிருந்தால், அன்பினிமித்தம் அவர் செய்த மகா பெரிய செயலுக்காக அவரைத் துதியுங்கள்.

ஞானத்திலிருந்து மகிழ்ச்சி வரை

தொலைபேசி ஒலித்ததும் நான் தாமதமின்றி அதை எடுத்தேன். எங்கள் சபை குடும்பத்திலேயே மூத்த வயதுடைய, துடிப்பான, கடின உழைப்புள்ள, கிட்டதட்ட நூறு வயதுடைய பெண்மணி என்னை அழைத்தாள். தான் சமீபத்தில் எழுதிய புத்தகத்தின் இறுதித் தொகுப்பைக் கொடுத்து, இதை முடிக்க சில கேள்விகளை எழுதச் சொன்னாள். இருப்பினும், நான், எப்போதும்போல, அவளுடைய வாழ்க்கை, வேலை, அன்பு மற்றும் குடும்பத்தைக் குறித்து கேள்விகள் கேட்டேன். அவளுடைய நீண்ட வாழக்கையிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் ஞானத்தினால் பிரகாசித்தது. அவள் என்னைப் பார்த்து “உன்னைத் தயார் செய்” என்று சொன்னாள். அவள் அதைச் செய்ய மறந்த தருணங்களை நினைத்து நாங்கள் சிரித்துக் கொண்டிருந்தோம் - அவளுடைய அற்புதமான நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மையான மகிழ்ச்சியினால் பக்குவப்பட்டிருந்தன.

ஞானம் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று வேதாகமம் கற்றுக்கொடுக்கிறது. “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியை சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்” (நீதி. 3:13). ஞானத்திலிருந்து மகிழ்ச்சி வரை – என்ற இந்தப் பாதை மெய்யாகவே ஒரு வேதாகம ஒழுக்கம் என்று நாம் காண்கிறோம். “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்.” தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும், அறிவையும், இன்பத்தையும் அளிக்கிறார்” (பிரசங்கி 2:26). “அதின் (ஞானம்) வழிகள் இனிதான வழிகள்” (நீதி. 3:17). 

வாழ்க்கையின் விஷயங்களைப் பிரதிபலிக்கும் வகையில், சி.எஸ்.லூயிஸ் அவர்கள், இது “பரலோகத்தின் தீவிரமான வணிகம்” என்று அறிவிக்கிறார். ஆயினும் அந்தப் பாதை ஞானத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. 107 வயதான என்னுடைய சபை நண்பர் ஒப்புக்கொள்வார். அவள் இராஜாவினிடத்திற்கு ஞானத்துடனும், மகிழ்ச்சியுடனும் கவனமாய் நடந்தாள். 

இசைக்குழுவைப் போல

என் மனைவி அதிகமாய் பார்க்க விரும்பும் ஒரு கலைஞனின் இசை நிகழ்ச்சியைக் கேட்க, அதற்குரிய டிக்கெட்டுகளுடன் அவளை ஆச்சரியப்படுத்தினேன். திறமை மிக்க அந்தப் பாடகர் ஒரு இசைக்குழுவுடன் வந்திருந்தார். மேலும் அந்த அமைப்பு கடல் மட்டத்திலிருந்து 6000 அடிகளுக்கு மேல், 300 அடி பாறை அமைப்புகளுக்கிடையே கட்டப்பட்ட ஒரு அரைவட்ட அரங்கமாயிருந்தது. இசைக்குழுவினர், எல்லாராலும் அதிகமாய் நேசிக்கப்பட்ட அநேக இலக்கிய நயம் வாய்ந்த மற்றும் நாட்டுப்புற இசைகளை வாசித்தனர். “அமேஸிங் கிரேஸ்” என்ற உன்னதமான பாடலை அவர்கள் இறுதியாக வாசித்தனர். அந்த அழகான, உகந்ததான ஏற்பாடு எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. 

நல்லிணக்கத்தைப் பற்றி ஏதோ அழகான - தனித்தனியான கருவிகள் ஒன்றாக சேர்ந்து இசைக்கப்படும்போது பெரிய மற்றும் அடுக்கடுக்கான கவிஞர்களின் இயற்கை நிலக்காட்சி போல படைக்கப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பியருக்கு எழுதும்போது, அழகான நல்லிணக்கம் - “ஏக சிந்தையும்” “ஏக அன்பும்”, இசைந்த ஆத்துமாக்களாய்” “ஒன்றையே சிந்தித்து” கொண்டிருப்பது என்று சுட்டிக்காட்டினார் (பிலிப்பியர் 2:2). இயேசுவின் தாழ்மையான மனப்போக்கு மற்றும் அவரையே கொடுக்கும் அன்பைப் போலவே அல்ல. மாறாக, அதையே தழுவிக்கொள்ளவே அவர் நம்மிடம் கூறுகிறார். பவுல் நன்கு அறிந்த மற்றும் கற்றுக்கொடுத்த சுவிசேஷம், நம்முடைய வேறுபாடுகளை அழிக்காது. ஆனால் நம்மிடையே உள்ள பிரிவினைகளை அகற்றிவிடும். பல அறிஞர்கள், இங்குள்ள பவுலின் வார்த்தைகள் (வச. 6-11), ஒரு ஆரம்பக்கால பாடலுக்கு முகவுரையாய் இருக்கும் என்று நம்புவது சுவாரஸ்யமானது. 

நம்முடைய தனித்துவமான வாழ்க்கையிலும், சூழலிலும் நாம் பரிசுத்த ஆவியானவரை கிரியைசெய்ய அனுமதிக்கும்போது, இயேசுவைப் போல நம்மை மாற்றி, நாம் எல்லாரும் சேர்ந்து, கிறிஸ்துவின் தாழ்மையான அன்பை பிரதிபலிக்கும் இசைக்குழுவைப் போலாகிறோம்.

கோவிட்டுக்கும் அப்பால்

2004-ல் ஸ்ரீலங்காவையும் மற்ற ஆசிய நாடுகளையும் சுனாமி தாக்கியபோது, அச்சமயத்தில் கிறிஸ்துவுக்கு வாலிபர் அமைப்பின் தேசிய இயக்குநராக இருந்த அஜித் பெர்னாண்டோ அவர்கள் தான் பார்த்த பெருந்துயர் சம்பவங்களின் அடிப்படையில் “சுனாமிக்குப் பின்” என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். பின்னாட்களில் அமெரிக்க வளைகுடாவை தாக்கிய கேட்ரீனா மற்றும் ரீடா புயல் பேரழிவுக்குப் பின் அந்தப் புத்தகம் சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டது.

சொல்லொணா இழப்புகள் மற்றும் பயங்கரங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கு அவருடைய புத்தகம் சொல்லும் செய்தி மிகவும் உதவியாக இருக்கிறது. ஆகவே, அதை தற்காலத்திற்கு…