கடிகாரம் அதிகாலை 1.55 மணிக்கு ஒலித்தது. பின்னிரவு உரையாடலின் சுமையினால் எனக்குத் தூக்கம் வரவில்லை. சிக்கலாயிருந்த என்னுடைய படுக்கை விரிப்பை பிரித்துக்கொண்டு அமைதியாக படுத்துக்கொண்டேன். தூங்குவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கூகிளில் தேடினேன். ஆனால் மாறாக சிறுதூக்கம் தூங்காதீர்கள், காப்பி குடிக்க வேண்டாம், பகல் வேளைகளில் நாள் தாமதமாக வேலை செய்ய வேண்டாம் என்று என்ன செய்யக் கூடாது என்பதையே பார்த்தேன். இன்னும் வாசிக்கும்போது, என்னுடைய டேப்லட் கணிணியில் படிக்க தாமதமாக திரை நேரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்ற ஆலோசனை சொல்லப்பட்டிருந்தது. அச்சச்சோ! உரை அனுப்புவது ஒரு நல்ல யோசனையாக இருக்கவில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டுமானால், செய்யக்கூடாதவைகளின் பட்டியல்களே இருக்கின்றன. 

பழைய ஏற்பாட்டில், ஓய்வைத் தழுவிக்கொள்ள, ஓய்வுநாளில் என்னென்ன செய்யக்கூடாது என்ற கட்டளைகளை தேவன் கொடுத்திருந்தார். ஆனால் இயேசு ஒரு புதிய வழியைக் காண்பித்தார். விதிமுறைகளை வலியுறுத்துவதற்கு பதிலாக, சீஷர்களை உறவுக்குள்ளாக அழைத்தார். “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” மத்தேயு 11:28. இதற்கு முந்தைய வசனத்தில், நமக்கு அவர் வெளிப்படுத்தின, தேவனோடு, அவர் வைத்திருந்த உறவை சுட்டிக்காட்டினார். பிதாவிடமிருந்து இயேசு அனுபவித்த உதவிகளை நம்மாலும் அனுபவிக்க முடியும்.

நம்முடைய தூக்கத்துக்கு இடையூறு உண்டாக்கும் சில பொழுதுபோக்குகளை நாம் தவிர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்போது, கிறிஸ்துவுக்குள் ஓய்வெடுப்பது கட்டளையை விட அதிகமாக உறவோடு தொடர்புடையது. நான் வாசிப்பதை நிறுத்திவிட்டு என்னுடைய கனத்த இருதயத்தை, இயேசுவின் அழைப்பிதழான “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே…” என்ற தலையணையின் மேல் வைத்துவிட்டேன்.