சிம்ரா, தன்னுடைய மகன் அடிமைத்தனத்தோடு போராடுவதைக் கண்டு மிகவும் துக்கமடைந்தாள். “நான் மோசமாக உணர்கிறேன், நான் ஜெபிக்கும்போது என் அழுகையை நிறுத்த முடியாததால் எனக்கு விசுவாசம் இல்லையென்று தேவன் நினைக்கிறாரா?” “தேவன் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், உண்மையான உணர்ச்சிகளை தேவன் கையாளமுடியும் என்று எனக்குத் தெரியும். நாம் நினைக்கிறது அவருக்குத் தெரியாது என்பது போல அல்ல” என்று நான் கூறினேன். நான் சிம்ராவுடன் சேர்ந்து அவளுடைய மகனின் விடுதலைக்காக கண்ணீரோடு மன்றாடி ஜெபித்தோம்.
தங்கள் போராட்டங்களில் தேவனோடு மல்லுகட்டும் அநேகருடைய எடுத்துக்காட்டுகள் வேதத்தில் உள்ளது. தேவனுடைய நிலையான மற்றும் வல்லமையான பிரசன்னத்தின் சமாதானத்துக்காக தன்னுடைய ஆழ்ந்த ஏக்கத்தை சங்கீதம் 42ஐ எழுதியவர் வெளிப்படுத்துகிறார். அவர் சகித்துக்கொண்ட துயரத்தினால் ஏற்பட்ட கண்ணீரையும் மனச்சோர்வையும் ஒப்புக்கொள்ளுகிறார். தேவனுடைய உண்மைத் தன்மையை நினைக்கும்போது அவர் உள்ளத்தில் இருக்கும் குழப்பம், நம்பிக்கையின் துதியாக வெளியே ஊற்றப்படுகிறது. தன்னுடைய “ஆத்துமாவை” உற்சாகப்படுத்த சங்கீதக்காரன் “தேவனை நோக்கி காத்திரு. என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்” (வச. 11) என்று எழுதுகிறார். தேவனைப் பற்றி அவர் அறிந்துக்கொண்டது உண்மைக்கும், மறுக்கமுடியாத அவருடைய உணர்ச்சிகளின் யதார்தத்திற்கும் இடையில் முன்னும் பின்னுமாக இழுக்கப்படுகிறார்.
தேவன் நம்மை அவருடைய சாயலாகவும், உணர்ச்சிகளுடனும் வடிவமைத்திருக்கிறார். மற்றவர்களுக்காக நாம் சிந்தும் கண்ணீர் – நமக்கு விசுவாமில்லாததால் அல்ல; மாறாக, ஆழ்ந்த அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. நமக்கு உணர்ச்சிகள் இருக்கிறது என்று தேவன் அறிந்திருப்பதால், நாம் மூல காயங்களுடனும், பழைய தழும்புகளுடனும் அவரை அணுகலாம். ஓவ்வொரு ஜெபமும், அமைதியானதாக இருந்தாலும், கண்ணீருடனாயிருந்தாலும், நம்பிக்கையோடு கூச்சலிட்டாலும், அவர் நம்மைக் கேட்டு, விசாரிக்கிறவர் என்ற வாக்குத்தத்தத்தை, நம்பிக்கையோடு வெளிப்படுத்துகிறது.
எந்த உணர்ச்சிகளை தேவனிடமிருந்து மறைக்க முயற்சித்திருக்கிறீர்கள்? கடினமான அல்லது அதிகமான உணர்ச்சிகளைக் குறித்து தேவனிடம் உண்மையாயிருப்பது பெரும்பாலும் ஏன் கடினமாயிருக்கிறது?
மாறாத தகப்பனே, நான் உணருகிறேன் என்றும் எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் என் உணர்ச்சிகளை செயல்படுத்த நீர் எனக்கு உறுதியளிக்கிறதற்காக நன்றி.