2018 பேஸ்பால் காலத்தில், களத்தில் இல்லாத விளையாட்டு வீரர்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்திருந்த ஒரு இளைஞனுக்கு, பயிற்சியாளர் ஒரு பந்தைக் கொடுக்க விரும்பினார். ஆனால் பயிற்சியாளர் அந்தப் பந்தை சிறுவனை நோக்கி எறியும்போது வேறொரு நபர் முந்திக்கொண்டு அதை எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வின் காணொளி புகழ்பெற்றதாகி விட்டது. செய்தி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் அந்த மனிதனின் முரட்டுத்தனத்தை விமர்சித்தது. தவிர, அங்கு இருந்த பார்வையாளர்களுக்கு முழு நிகழ்வும் தெரியாது. இதற்கு முன்பு, ஒரு தவறாய் அடிக்கப்பட்ட பந்தை பிடிப்பதற்கு அந்த மனிதர் இளைஞனுக்கு உதவி செய்திருந்தார் மற்றும் அடுத்தடுத்து அவர்கள் வழியிலே வரும் பந்துகளைப் பகிர்ந்துக்கொண்டு பிடிக்க அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தனர். துரதிஷ்டவசமாக உண்மையான நிகழ்வு வெளிவர இருபத்து நான்கு மணி நேரம் ஆனது. அதற்குள்ளாக கலவரக் கும்பல் அந்த குற்றமற்ற மனிதரை அடித்து, காயப்படுத்திவிட்டனர்.
அநேக நேரங்களில், நாம் துணுக்குளை மட்டும் வைத்துக்கொண்டு முழு உண்மைகளும் தெரிந்துவிட்டதாக நினைக்கிறோம். நம்முடைய நவீன அரைகுறை கலாச்சாரத்தில், முழு நிகழ்வுகளையும் அறிந்துகொள்ளாமல், வியத்தகு காணொலிகளையும், கோபமூட்டும் துணுக்குகளையும் வைத்துக்கொண்டு, மக்களைக் கண்டனம் செய்வது எளிது. இருந்தாலும் “அபாண்டமான சொல்லைப் பரப்ப வேண்டாம்” (யாத். 23:1) என்று வேதாகமம் எச்சரிக்கிறது. குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன், உண்மையைத் தெரிந்துக்கொள்ள, முடிந்த அனைத்தையும் நாம் செய்து, பொய்யில் பங்கேற்காமல் இருக்க உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு விழிப்புணர்வு ஆவி மேற்கொள்ளும்போதும், உணர்வுகள் தூண்டப்படும்போதும், தீர்ப்பலைகள் பெருகும்போதும், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தவறுசெய்யும் கூட்டத்தைப் பின்தொடர்வதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் (வச. 2).
இயேசுவில் விசுவாசிகளாயிருக்கும் நாம், அபாண்டமான சொல்லைப் பரப்பாமலிருக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஞானத்தை வெளிப்படுத்தவும், நம்முடைய வார்த்தைகள் உண்மை என்பதை உறுதிப்படுத்த அவர் நமக்குத் தேவையானதை கொடுப்பாராக.
யாராவது ஒருவர் தவறாக குற்றம் சாட்டப்பட்டிருந்ததை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். இதனால் ஏற்பட்ட சேதம் என்ன? தவறு எவ்வாறு சரி செய்யப்பட்டது?
தேவனே, வெகு விரைவாக காரியங்கள் நடைபெறும் இந்தக் காலத்தில், உண்மையை அறிந்துக் கொள்வது பெரும்பாலும் கடினம். கவனமாய் கேட்டு, நிதானித்து உண்மையைப் பேச எனக்கு உதவி செய்யும்.