சாக் ஒரு தனிமையான ஆள். அவன் நகர வீதிகளில் நடந்து செல்லும்போது அவனை எதிர்க்கின்ற இரைச்சலை உணர்ந்தான். ஆனால் பிறகு அவனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அலெக்ஸாந்திரியாவிலுள்ள கிளெமண்ட் என்ற திருச்சபை தலைவர், “சாக் ஒரு முக்கியமான கிறிஸ்தவத் தலைவரும், சிசெரியாவில் ஒரு சபையின் போதகருமானார்” என்றார். ஆம், இயேசுவைப் பார்க்க வேணடுமென்று காட்டத்தி மரத்தில் ஏறின, வரி வசூலிக்கும் சகேயுவைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் (லூக்கா 19:1-10).

மரத்தில் ஏறுவதற்கு எது அவரைத் தூண்டியது? வரி வசூலிப்பவர்கள் துரோகிகளாகக் கருதப்பட்டனர். ஏனென்றால் ரோம அரசாங்கத்திற்கு சேவை செய்ய தங்கள் சொந்த மக்களிடமே மிக அதிகமாக இவர்கள் வரி வசூலித்தனர். அவர்களையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நற்பண்பு இயேசுவிடம் இருந்தது. தன்னையும் இயேசு ஏற்றுக்கொள்வாரா என்று சகேயு நினைத்திருக்கக் கூடும். அவன் குள்ளனாயிருந்தப்படியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணமுடியவில்லை (லூக்கா 19:3). ஒருவேளை இயேசுவைப் பார்க்க அவன் காட்டத்தி மரத்தில் ஏறியிருக்கலாம். 

இயேசுவும் சகேயுவைத் தேடிக்கொண்டிருந்தார். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துப் பார்த்து, அவனைக் கண்டு “சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்” என்றார் (வச. 5). இப்படி தள்ளப்பட்ட ஒருவரின் வீட்டிற்கு விருந்தினராகப் போவது மிகவும் அவசியம் என்று இயேசு எண்ணினார். கற்பனை செய்துப் பாருங்கள்! உலகத்தின் இரட்சகர் இயேசு, சமுதாயத்தில் தள்ளப்பட்டவருடன் நேரம் செலவிட விரும்பினார். 

ஒருவேளை நம்முடைய இருதயம், உறவுகள், அல்லது வாழ்க்கை சீர்படவேண்டுமோ, சகேயுவைப் போல நமக்கும் நம்பிக்கை உண்டு. நாம் அவரிடத்தில் திரும்பும்போது இயேசு ஒருபோதும் நம்மை புறக்கணிக்கமாட்டார். உடைந்ததையும், இழந்ததையும் அவர் திரும்பத் தந்து, நம்முடைய வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுப்பார்.