லூயி செம்பரெனியுடைய இராணுவ விமானம் இரண்டாம் உலகப்போரின் போது கடலில் மோதியது. அதிலிருந்த பதினொரு பேர்களில் எட்டுப் பேர் மரித்தனர். லூயி மற்றும் மற்ற இரண்டு பேரும் உயிர்காக்கும் படகில் ஏறிக்கொண்டனர். அவர்கள் அந்தப் படகில் இரண்டு மாதங்கள், சுறாக்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொண்டு, புயல்களைக் கடந்து, எதிராளி போர் விமானங்களின் குண்டுவீச்சிலிருந்து வரும் தோட்டாக்களிலிருந்து தப்பித்து, மீன்களையும், பறவைகளையும் பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு திரிந்துக்கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு தீவில் அவர்கள் இறங்கினவுடன் கைதுசெய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளாக லூயி அடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, இரக்கமின்றி போர்க்கைதியாக வேலை செய்தார். அவருடைய குறிப்பிடத்தக்க கதை “அன்புரோக்கன்” என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வேதாகமத்திலுள்ள உடைக்கப்படமுடியாத கதாபாத்திரங்களில் எரேமியாவும் ஒருவர். எதிராளிகளின் சதிச்செயல்களை சகித்துக்கொண்டார் (எரேமியா 11:18), கசையால் அடிக்கப்பட்டு, காவலிலே போடப்பட்டார் (20:2), அடிக்கப்பட்டு காவற்கிடங்கில் போடப்பட்டார் (37:15-16), கயிறுகளால் கட்டி உளையிலே இறக்கிவிட்டார்கள் (38:6). தேவன் அவரைக் காக்கும்படி அவரோடு கூட இருப்பதாக வாக்குபண்ணினதால் அவர் உயிர்பிழைத்தார் (1:8). “நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னை என்றும் கைவிடுவதில்லை” (எபிரெயர் 13:5) என்று தேவன் அதேபோல ஒரு வாக்குத்தத்தத்தை நமக்கும் கொடுத்திருக்கிறார். எரேமியாவையோ, நம்மையோ, பிரச்சனை வராதபடி காப்பாற்றுவேன் என்று வாக்களிக்கவில்லை; மாறாக, பிரச்சனைகளைக் கடக்க நம்மோடுகூட இருப்பதாக வாக்களித்திருக்கிறார்.
லூயி தேவனுடைய பாதுகாப்பைக் கண்டுக்கொண்டார். போருக்குப் பின் தன்னுடைய வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார். தன்னை சிறைப்பிடித்தவர்களை மன்னித்து, சிலரை கிறிஸ்துவுக்குள் நடத்தினார். நாம் எல்லா பிராச்சனைகளையும் தவிர்க்கமுடியாவிட்டாலும், நாம் அவைகளோடு தனிமையாக அவதிப்பட வேண்டியதில்லை என்று லூயி உணர்ந்தார். இயேசுவோடு அவைகளை நாம் எதிர்கொண்டால் நாம் உடைக்கப்பட முடியாதவர்களாகி விடுவோம்.
உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் பிரச்சனை எது? இந்த சோதனையில், அவர் உங்களோடு இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நம்புவதாக இயேசுவிடம் கூறுங்கள். அவர் உங்களை சுமக்க அனுமதிக்கவும்.
இயேசுவே, எந்தப் புயலைப் பார்க்கிலும் நீர் வல்லமையுள்ளவர். இப்போது நான் எதிர்கொள்ளும் பிரச்சனையில் என்னை நடத்தும்.