தொலைபேசி ஒலித்ததும் நான் தாமதமின்றி அதை எடுத்தேன். எங்கள் சபை குடும்பத்திலேயே மூத்த வயதுடைய, துடிப்பான, கடின உழைப்புள்ள, கிட்டதட்ட நூறு வயதுடைய பெண்மணி என்னை அழைத்தாள். தான் சமீபத்தில் எழுதிய புத்தகத்தின் இறுதித் தொகுப்பைக் கொடுத்து, இதை முடிக்க சில கேள்விகளை எழுதச் சொன்னாள். இருப்பினும், நான், எப்போதும்போல, அவளுடைய வாழ்க்கை, வேலை, அன்பு மற்றும் குடும்பத்தைக் குறித்து கேள்விகள் கேட்டேன். அவளுடைய நீண்ட வாழக்கையிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் ஞானத்தினால் பிரகாசித்தது. அவள் என்னைப் பார்த்து “உன்னைத் தயார் செய்” என்று சொன்னாள். அவள் அதைச் செய்ய மறந்த தருணங்களை நினைத்து நாங்கள் சிரித்துக் கொண்டிருந்தோம் – அவளுடைய அற்புதமான நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மையான மகிழ்ச்சியினால் பக்குவப்பட்டிருந்தன.
ஞானம் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று வேதாகமம் கற்றுக்கொடுக்கிறது. “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியை சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்” (நீதி. 3:13). ஞானத்திலிருந்து மகிழ்ச்சி வரை – என்ற இந்தப் பாதை மெய்யாகவே ஒரு வேதாகம ஒழுக்கம் என்று நாம் காண்கிறோம். “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்.” தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும், அறிவையும், இன்பத்தையும் அளிக்கிறார்” (பிரசங்கி 2:26). “அதின் (ஞானம்) வழிகள் இனிதான வழிகள்” (நீதி. 3:17).
வாழ்க்கையின் விஷயங்களைப் பிரதிபலிக்கும் வகையில், சி.எஸ்.லூயிஸ் அவர்கள், இது “பரலோகத்தின் தீவிரமான வணிகம்” என்று அறிவிக்கிறார். ஆயினும் அந்தப் பாதை ஞானத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. 107 வயதான என்னுடைய சபை நண்பர் ஒப்புக்கொள்வார். அவள் இராஜாவினிடத்திற்கு ஞானத்துடனும், மகிழ்ச்சியுடனும் கவனமாய் நடந்தாள்.
மகிழ்ச்சியைக் கண்டடைய நீங்கள் எந்தெந்தப் பாதைகளில் சென்றீர்கள்? ஞானம் எப்படி உங்களை மகிழ்ச்சிக்கு நேராய் நடத்தும்?
அன்புள்ள தேவனே, நான் கடினமான பாதைகளில் நடக்கும்போது, என்னை உம்முடைய ஞானம் மற்றும் மகிழ்ச்சியின் பாதையில் நடத்தும்.