குறிப்பிட்ட ஒரு கிராமத்திலிருந்து நாங்கள் துணிகரமாய் காட்டுக்குள் வெகுதூரம் பயணம் மேற்கொண்டோம். சில மாதங்கள் கடந்தபின், தண்ணீரின் மெல்லிய ஓசை எங்கள் காதுகளில் தொனித்தது. வேகமாய் நடக்கத் தொடங்கின எங்களை விரைவில் கருத்த மலைகளுக்கு இடையிலிருந்த வெண்மையான நீரோட்டம் வரவேற்றது. மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு காட்சி!
நாங்கள் அந்த இன்பச் சுற்றுலாவை அனுபவிக்க எண்ணி, எங்களுடைய பயணத்திற்கு துணைபுரிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலரை நாங்கள் திருப்பி அனுப்பிவிட்டோம். நல்ல திட்டம் தான். ஆனால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது? நாங்கள் எதுவும் கொண்டுவரவில்லை. என்னுடைய நண்பர்கள் அருகிலிருந்த காட்டுக்குள் சென்று சில பழங்கள், காய்கறிகள், மீன்கள் என்று சேகரித்து வந்தனர். அந்த ஆகாரம் எங்களுக்கு புதிதாயிருந்தது. ஆனால் மிக சுவையாய் தெரிந்தது.
தேவனுடைய சிரு~;டிப்பில் நம் தேவைகள் அளவுக்கு அதிகமாய் இறைந்து கிடக்கிறது. அதற்கு ஆதாரமாய், “பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது” (ஆதியாகமம் 1:12) என்பதை எடுத்துக்கொள்ளலாம். “விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும் விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும்” (வச. 29) உண்டாக்கி, அவைகளை தேவன் நமக்கு ஆகாரமாய் கொடுத்திருக்கிறார்.
உன் தேவைகளுக்காய் தேவனை நம்புவது சிலவேளைகளில் கடினமாய் தோன்றுகிறதா? நீங்கள் இயற்கையை ரசிக்கும் ஒர் நடைபயணம் மேற்கொள்ளலாமே? உங்கள் பார்வையில் தென்படுவது இயேசுவின் உறுதியான வார்த்தைகளை நினைவுபடுத்தட்டும்: “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” (மத்தேயு 6:31-32).
தேவன் உங்கள் கடந்தகால தேவைகளை சந்தித்திருக்கிறாரா? தொடர்ந்து உங்களுடைய தேவைக்காய் அவரை எப்படி சார்ந்துகொள்வீர்கள்?
அன்பான தகப்பனே, நீர் தாராளமாய் கொடுக்கிற தேவன். என் தேவைகளுக்காய் உம்மையே நம்ப எனக்கு உதவி செய்யும்.