அவன் என்னை பார்ப்பதற்கு முன்னே தலைமறைவாய் என் அறைக்கு சென்றேன். நான் என்னை ஒளித்துக் கொள்வதற்கு வெட்கப்படுகிறேன். ஆனால் அவளோடு அப்போதிலிருந்து எப்போதுமே தொடர்புகொள்ள விரும்பவில்லை. அவளை அந்த இடத்தில் வைக்க விரும்பியதை அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அவளுடைய கடந்த கால நடவடிக்கைகள் என்னை காயப்படுத்தியிருந்தாலும் அவளை அதைவிட அதிகமாய் நான் காயப்படுத்திக் கொண்டிருந்தேன்!
யூதர்களும் சமாரியர்களும் இதேபோன்று ஒருவருக்கொருவர் ஒத்துபோகாத உறவில் இருந்தார்கள். புறஜாதியரோடு கலந்து அவர்களின் தெய்வங்களை வழிபட்ட சமாரியர்கள் யூதர்களின் பார்வையில், அவர்களின் பரிசுத்த வித்தையும் விசுவாசத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியவர்கள். அவர்கள் போட்டியாக தங்களுக்கென்று கெர்சோம் மலையில் ஆராதனை ஸ்தலத்தை ஏற்படுத்தினர் (யோவான் 4:20). யூதர்களும் சமாரியர்களை தாழ்வாய் கருதியதால் அவர்களின் தேசங்களின் வழியாய் கடந்துபோவதைக் கூட விரும்பாமல் சுற்றிப் போயினர்.
இயேசு அழகான பாதையை காண்பித்திருக்கிறார். அவர் சமாரியர்களுக்கும் சேர்த்து அனைத்து மக்களுக்கும் இரட்சிப்பைக் கொடுத்தார். பாவியான ஸ்திரீக்கும் அவளுடைய மக்களுக்கும் ஜீவ தண்ணீரைத் தருவதாக வாக்குப் பண்ணியதின் நிமித்தம் சமாரியர்களின் இருதயத்திற்குள் நுழைய துணிந்தார் (வச. 4-42). அவருடைய மாதிரியை பின்பற்றும்படிக்கு கூறியதே சீஷர்களுக்கு கொடுக்கப்பட்ட கடைசி ஆலோசனை. எருசலேமிலிருந்து துவங்கி, சமாரியாவுக்கும் “பூமியின் கடைசி பரியந்தம்” வரைக்கும் ஒவ்வொருவருக்கும் நற்செய்தியை கூறும்படிக்கு அவர்களுக்கு கட்டளை கொடுக்கிறார் (அப். 1:8). சமாரியா என்பது தங்களின் பக்கத்து ஊர் என்பதைக் காட்டிலும் பெரிய இலக்கு. ஊழியத்தின் மிகவும் வேதனையான கட்டம். வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு இருந்த பாரபட்ச சிந்தையைக் கடந்து அவர்கள் விரும்பாத ஒரு சந்ததியை நேசிக்க வேண்டும்.
நம்முடைய சுயபாரபட்சங்களைவிட இயேசு நமக்கு முக்கியமானவரா? ஆம் என்றால் அதற்கு ஒரே வழிதான் உண்டு. உன் “சமாரியனை” நேசி.
நேசிக்கப்பட முடியாதவர்களின் மீது உன் அன்பை எப்படி காண்பிக்கப்போகிறாய்? கடினமான நபரை நேசித்து அவர்களை மென்மையானவர்களாய் பாவித்தது எப்போது?
தகப்பனே, உம் அன்பின் அலைகள் என்மீது பாய்ந்து, அதிலிருந்து நீருற்று மற்றவர்கள் மீது பாயட்டும்.