நம்முடைய வீடுகளில் உள்ள ஸ்மார்ட் சாதனங்களில் பதிக்கப்பட்டிருக்கும் அலெக்ஸா மற்றும் சிரி போன்ற குரல் உதவி கருவிகள் சில நேரங்களில் நாம் சொல்வதை தவறாக புரிந்துக்கொள்ளுகிறது. ஒரு ஆறு வயதுக் குழந்தை தன் குடும்பத்தில் புதிதாக வாங்கப்பட்ட இந்தக் கருவியிடம் குக்கிஸ்களைப் பற்றியும் பொம்மை வீட்டைப் பற்றியும் பேசினாள். சற்று நேரத்திற்குப் பிறகு, ஏழு பவுண்ட் குக்கிஸ்களும், 170 டாலர் மதிப்புக்கொண்ட பொம்மை வீடும் தங்கள் வீடு நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக அவள் தாய்க்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. லண்டனில் ஒரு பேசும் கிளி, தன்னுடைய உரிமையாளர் ஆன்லைனில் எதுவும் வாங்கவில்லை என்றாலும், அவருக்குத் தெரியாமல், தங்கப்பரிசுகள் உள்ள டப்பாக்களின் ஒரு பொட்டலத்தை ஆர்டர் செய்திருந்தது. ஒரு நபர் இந்தக் கருவியிடம் “வாழும் அரையின் விளக்குகளை இயக்க” சொன்னபோது “புட்டிங் அரை இங்கு இல்லை” என்று பதிலளித்தது.

தேவனிடம் நாம் பேசும்போது அத்தகைய தவறான புரிதல் அவரிடமில்லை. நாம் செய்யும் செயலைவிட நம்முடைய இருதயத்தை அவர் நன்கு அறிந்தபடியால் அவர் ஒருபோதும் குழப்பமடைவதில்லை. ஆவியானவர் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்துப்பார்த்து, தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளுகிறார். தேவன் நம்மை முதிர்ச்சியுள்ளவர்களாக்குவதற்கும், அவருடைய குமாரனைப் போல நாம் மாறுவதற்கும், தமது நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாவிலுள்ள தேவாலயங்களுக்கு கூறினார் (ரோமர் 8:28). ஆவியானவரும் நம்முடைய பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றப்படி வேண்டிக்கொள்வது இன்னதென்று அறியாதிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (வச. 26-27).

உங்களை தேவனிடம் வெளிப்படுத்துவதற்கு சங்கடமாக இருக்கிறதா? என்ன, எப்படி ஜெபிக்க வேண்டும் என்று புரியவில்லையா? இருதயத்தில் இருந்து முடிந்ததைச் சொல்லுங்கள். ஆவியானவர் உங்களைப் புரிந்துக்கொண்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்.