அமெரிக்காவின் அரசியல்வாதி ஜான் லூவிஸ் 2020ஆம் ஆண்டு மரித்தபோது நிறைய அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர். 1965இல், மார்டின் லூத்தர் கிங் ஜூனியரோடு சேர்ந்து கருப்பின மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கோரி, போராட்டம் நடத்தியுள்ளார். அந்த அணிவகுப்பின்போது லூவிஸின் கபாலத்தில் அடிபட்டு, அந்த தழும்பை அவர் வாழ்நாள் முழுவதும் சுமக்கவேண்டியிருந்தது. “நீ நியாயமில்லாத ஒன்றைப் பார்க்கும்போது, அங்கு நீ பேசுவதற்கு அல்லது ஏதாவது செய்வதற்கான பொறுப்பு உனக்கு உள்ளது” என்று லூவிஸ் கூறுகிறார். “நல்லப் போராட்டத்திற்கு குரல் கொடுப்பதற்கு என்றுமே பயப்படாதேயுங்கள்” என்றும் கூறுகிறார்.
உண்மையாய் நின்று, சரியென்று தோன்றுகிற “நல்ல போராட்டத்தை” போராடுவதைக் குறித்து லூவிஸ் துவக்கத்திலிருந்தே அறிந்திருக்கிறார். பிரபலமாகாத சில விஷயங்களை அவர் பேசவேண்டியிருந்தது. ஆமோஸ் தீர்க்கதரிசியும் இதை நன்கு அறிந்திருந்தார். இஸ்ரவேலின் பாவத்தையும் அநியாயத்தையும் பார்த்த அவரால் சும்மாயிருக்க முடியவில்லை. ஆமோஸ் இஸ்ரவேலின் ஆளும்வர்க்கம் எவ்வாறு “தரித்திரரை மிதித்து, அவன் கையிலே லஞ்சம் வாங்கி, “பொளிந்த கற்களால் வீடுகளை” கட்டி, “இன்பமான திராட்சைத் தோட்டங்களை” நாட்டினார்கள் என்று அறிவிக்கிறார் (ஆமோஸ் 5:11-12). தன்னுடைய பாதுகாப்பையும் சுகத்தையும் கருதி ஒதுங்கி நிற்காமல், ஆமோஸ் அவர்களின் தீமையை சுட்டிக்காட்டுகிறார். தேவையான ஒரு நல்ல போராட்டத்தை தீர்க்கதரிசி மேற்கொள்ளுகிறார்.
ஆனால் இந்த போராட்டம் எல்லோருக்குமான நீதியை முன்வைத்து செய்யப்படுகிற நல்லப் போராட்டம். “நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது” (வச. 24) என்று ஆமோஸ் சூளுரைக்கிறார். நல்ல போராட்டத்தில் நாம் ஈடுபடும்போது (நீதியுள்ள, முரட்டுத்தனமில்லாத, நீதியை வலியுறுத்தும் போராட்டம்), நன்மையும் சௌக்கியமுமே நம்முடைய இலக்காயிருக்கும்.
உங்களை எந்த நல்ல போராட்டத்தில் ஈடுபடும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் தூண்டுகிறார்? தேவனுடைய வழியில் நியாயத்தை நிலைநாட்ட எவ்வாறு போராடுவீர்கள்?
பரலோகப் பிதாவே, என் போக்கில் விட்டுவிட்டால் உம் எதிர்பார்ப்பிற்கு மாறாக நடக்க கூடும், ஆகையால். உம்மை கனப்படுத்த நான் செய்யவேண்டியதை பகுத்தறிய எனக்கு உதவிசெய்யும்.