பதினெட்டு வயது நிரம்பி காடன், கல்வி உதவித்தொகையில் தனக்கு ஒரு கல்லூரியில் சேர்க்கை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தான். உயர்நிலைப் பள்ளியில் ஒரு வளாக ஊழியத்தில் ஈடுபட்டிருந்த அவன், புதிய சூழலில் இதேபோன்ற ஊழியத்தில் பங்கேற்க எதிர்பார்த்தான். அவன் தனது பகுதிநேர வேலையிலிருந்து பணத்தை மிச்சப்படுத்தினான். மேலும் ஒரு புதிய வேலையில் சிறந்த முன்னிலைப் பெற்றான். அவன் சில குறிக்கோள்களை மனதில் வைத்திருந்தான், எல்லாமே அட்டவணைபடி சரியாக நடந்து கொண்டிருந்தது.

பின்னர் 2020 வசந்த காலத்தில் எற்பட்ட ஒரு உலகளாவிய சுகாதார நெருக்கடி எல்லாவற்றையும் மாற்றியது.

தனது முதல் செமஸ்டர் ஆன்லைனில் இருக்கக்கூடும் என்பதை பள்ளி நிர்வாகம் கேடனுக்கு தெரியப்படுத்தியது. அவனுடைய கல்லூரி வளாக ஊழியம் நிறுத்தப்பட்டது. அவனுடைய வேலை வாய்ப்பும் வறண்டுவிட்டது. அவன் விரக்தியடைந்தபோது, அவனது நண்பர், “ஆமாம், அவர்கள் வாயில் குத்து விழும் வரை அனைவருக்கும் ஒரு திட்டம் உள்ளது” என்ற ஒரு பிரபலமான குத்துச்சண்டை வீரரின் வார்த்தைகளை அவனுக்கு நினைவுபடுத்தினான்.

நீதிமொழிகள் 16, நாம் நம் செய்கைகளை கர்த்தருக்கு ஒப்புவிக்கும்போது, அவர் நம்முடைய திட்டங்களை உறுதிப்படுத்துவார், அவருடைய சித்தத்தின்படி காரியங்களைச் செய்வார் (வச. 3-4) என்று கூறுகிறது. இருப்பினும் உண்மையான அர்ப்பணிப்பு சற்று கடினமாக இருக்கும். இது நம்முடைய காரியத்தை நாம் சுயாதீனமாய் நம்முடைய போக்கில் செய்யாமல், தேவனின் வழிநடத்துதலுக்கான திறந்த இதயத்தை வரவேற்கிறது (வச. 9, 19:21).

நிறைவேறாத கனவுகள் ஏமாற்றத்தைத் தரக்கூடும். ஆனால் நம் எதிர்காலத்தைக் குறித்த நம்முடைய குறுகிய பார்வை, எல்லாம் அறிந்த தேவனுடைய திட்டத்தை எப்போதுமே ஈடுகட்ட முடியாது. நாம் அவருக்குக் கீழ்ப்படியும்போது, முன்னோக்கி செல்லும் பாதையை நாம் காணாதபோதும் அவர் நம் நடைகளை இன்னும் அன்பாக வழிநடத்துகிறார் என்பதில் உறுதியாக இருக்க முடியும் (16:9).