கப் கேக்கின் பிளாஸ்டிக் கன்டைனரை கன்வேயர் பெல்ட்டின் மூலம் காசாளரை நோக்கி அனுப்பினாள். அதைத் தொடர்ந்து, பிறந்த நாள் அட்டை மற்றும் பல்வேறு சிப்ஸ் பாக்கெட்டுகள் வந்தன. அவளது தலைமுடி, குடுமியிலிருந்து சோர்வுற்ற முன்நெற்றியில் முடிசூடியது. அவளது குறுநடை போடும் குழந்தை கவனத்தை ஈர்த்தது. எழுத்தர் மொத்த தொகையை அறிவித்தார், அம்மாவின் முகம் சோர்ந்தது. “ஓ! நான் எதையாவது திருப்பி வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இவை அனைத்தும் அவளுடைய கொண்டாடத்திற்கு தேவை,” என்று தன் குழந்தையைப் பார்த்து வருத்தத்துடன் பெருமூச்சு விட்டாள்.
வரிசையில் அவள் பின்னால் நின்று, மற்றொரு வாடிக்கையாளர் இந்த தாயின் வலியை உணர்ந்தார். பெத்தானியா மரியாளுக்கு இயேசு சொன்ன வார்த்தைகளில் இந்த காட்சி நன்கு தெரியும்: “இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” (மாற்கு 14:8). அவரது இறப்பு மற்றும் அடக்கத்திற்கு முன்பாக விலையுயர்ந்த தைலத்தால் அவரை அபிஷேகம் செய்த பிறகு, மரியாள் சீஷர்களால் கேலி செய்யப்பட்டார். அவள் செய்ததை பாராட்டியதின் மூலம் இயேசு தமது சீஷர்களைத் திருத்தினார். அவர் “அவளால் முடிந்த அனைத்தையும் செய்தாள்” என்று கூறவில்லை மாறாக, “அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” என்று கூறினார். வாசனை திரவியத்தின் பகட்டான செலவு அவருடைய நோக்கம் அல்ல; மரியாளின் அன்பை செயலில் முதலீடு செய்ததே முக்கியமானது. இயேசுவுடனான உறவு அதற்கான அர்த்தத்தை அளிக்கிறது.
அந்தத் தருணத்தில், அந்த தாய் மறுப்பு தெரிவிப்பதற்கு முன்பு, இரண்டாவது வாடிக்கையாளர் முன்னோக்கி சாய்ந்து தனது கிரெடிட் கார்டின் மூலம் பொருட்களை வாங்குவதற்கான அனைத்து பணத்தையும் செலுத்தினார். இது ஒரு பெரிய செலவு அல்ல; அந்த மாதத்தில் அவளின் செலவுபோக பணம் மீதமிருந்தது. ஆனால் அந்த தாய்க்கு அதுதான் எல்லாமே. அவளுடைய தேவையின் தருணத்தில் தூய அன்பின் சைகை ஊற்றப்பட்டது.
எந்த எதிர்பாராத வழிகளில் இயேசு உங்களுக்கு உதவினார்? உங்களால் எல்லாம் செய்யமுடியாது எனினும், இன்று தேவையுள்ளோரைக் காணும்போது இயேசுவின் மீதான உங்கள் அன்பை எப்படி பிரதிபலிக்கலாம்?
பிதாவே, இன்று என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வதற்கான உம்முடைய அழைப்பை தெரிந்துகொள்ள என் கண்களைத் திறந்தருளும்.