பதினைந்து ஆண்டுகளாக, மைக் பர்டன் தன்னுடைய ஊரில் நடத்திவந்த பரிசுபொருட்கள் விற்கும் கடையில் பல்வேறு வெறுப்பு மிகுந்த சந்திப்புகளை அனுபவித்துள்ளார். ஆனால் 2012-ல் அவரது ஈடுபாட்டை அவரது மனைவி கேள்வி கேட்கத் தொடங்கியபோது, அவரது இதயம் மென்மையாக்கப்பட்டது. தனது இனவெறி கருத்துக்கள் எவ்வளவு தவறானவை என்பதை அவர் உணர்ந்து, இனி ஒருபோதும் அப்படிப்பட்ட நபராக இருக்கக்கூடாது என்று தீர்மானித்தார். ஒரு கலவரக் கூட்டம் அவர்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டிலிருந்து அவர்களை உதைத்து, வெளியேற்றினர்.
உதவிக்காக அவர் எங்கே போனார்? ஆச்சரியப்படும் விதமாக, ஏற்கனவே சண்டையிட்ட ஒரு உள்ளுர் கருப்பின போதகரிடம் சென்றார். போதகரும் அவரது சபை மக்களும் மைக்கின் குடும்பத்திற்கு சில காலம் தங்கும் வசதி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். அவர் ஏன் உதவ ஒப்புக்கொண்டார் என்று கேட்டபோது, பாஸ்டர் கென்னடி விளக்கினார், “இயேசுகிறிஸ்து மிகவும் பிரபலமற்ற சில காரியங்களைச் செய்தார். உதவிசெய்ய வேண்டிய நேரம் வரும்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்யுங்கள்.” பின்னர் மைக் ஒரு முறை கென்னடியின் தேவாலயத்தில் பேசினார் அப்போது தான் வெறுப்பை பரப்பினதிற்காக கறுப்பின சமூகத்திடம் மன்னிப்புக் கோரினார்.
மலைப்பிரசங்கத்தில் பரபலமாகாத சில யோசனைகளை இயேசு கற்பித்தார்: “உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு…. உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (மத்தேயு 5:42,44). தேவனின் அழைப்பைப் பின்பற்றுவதற்கான தலைகீழான வழி அது. இது பலவீனம் போல் தோன்றினாலும், அது உண்மையில் தேவனின் பலத்தைக் கொண்டு செயல்படுவது.
நமக்கு கற்பித்தவரே அவர் எதிர்பார்க்கும் விதத்தில் இந்த தலைகீழான வாழ்க்கையை வாழ்வதற்கான பெலனைக் கொடுப்பவர்.
உங்கள் எதிரிகளைக் நேசிப்பதிலும் மற்றும் கேட்பவர்களுக்கும் கொடுப்பதிலும் இயேசுவின் வார்த்தைகளை நீங்கள் எவ்வாறு வாழ்கிறீர்கள்? நீங்கள் எதை மாற்ற விரும்புகிறீர்கள்?
தேவனே, நீங்கள் என்னை நேசிப்பதைப் போல மற்றவர்களையும் நேசிக்க எனக்கு உதவுங்கள். இன்றே அதை எப்படி செய்வது என்று எனக்குக் காட்டும்.