லூசி வோர்ஸ்லி ஒரு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். பெரும்பாலான மக்களிடையே பிரசித்திபெற்ற மனிதர்களைப் போல, அவருக்கு சில நேரங்களில் மோசமான மின்னஞ்சல்கள் வரும் – அவருடைய விஷயத்தில், அவருடைய பேச்சின் தடையால் அவளுடைய r-உச்சரிப்பு w-உச்சரிப்பாக ஒலித்தது. ஒருவர் இவ்வாறு எழுதினார்: “லூசி, நான் மழுங்கி இருப்பேன்: உங்கள் சோம்பேறித்தனமான பேச்சை சரி செய்ய கடினமாக முயற்சியுங்கள் அல்லது உங்கள் பேச்சுக் குறிப்புகளிலிருந்து r-ஐ நீக்குங்கள். ஏனெனில் உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அமர்ந்து என்னால் பார்க்க முடியவில்லை அது என்னை கோபமூட்டுகிறது. அன்புடன், டேரன். ”
சிலருக்கு, இது போன்ற ஒரு உணர்ச்சியற்ற கருத்து அதற்கு சமமான முரட்டுத்தனமான பதிலைத் தருவதற்கு தூண்டக்கூடும். ஆனால் லூசி இவ்விதமாக பதிலளித்தார்: “ஓ டேரன், நீங்கள் என் முகத்திற்கு நேராக சொல்ல துணியாத ஒன்றைச் சொல்ல இணையத்தின் அநாமதேயத்தைப் பயன்படுத்தினீர்கள் என்று நினைக்கிறேன். தயவுசெய்து உங்கள் தயவற்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்! லூசி. ”
லூசியின் அந்த மெதுவான பிரதியுத்திரம் வேலை செய்தது. டேரன் மன்னிப்பு கேட்டு, அத்தகைய மின்னஞ்சலை மீண்டும் யாருக்கும் அனுப்ப மாட்டேன் என்று உறுதியளித்தார்..
“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும், ஆனால் கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (15:1). கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். (வச.. 18). சக ஊழியரிடமிருந்து ஒரு விமர்சனக் கருத்து, குடும்ப உறுப்பினரிடமிருந்து ஒரு மோசமான கருத்து அல்லது தெரியாத நபரிடமிருந்து ஒரு மோசமான பதில் ஆகியவற்றைப் பெறும்போது, நம்முடைய தேர்வு இவ்வாறு இருக்கிறது: தீப்பிழம்புகளைத் தூண்டும் கோபமான வார்த்தைகளைப் பேச அல்லது அதை அணைக்கும் மென்மையான சொற்களைப் பேச.
கோபத்தை மாற்றும் வார்த்தைகளைப் பேச தேவன் நமக்கு உதவுவாராக – மற்றும் கடினமான நபர்களை மாற்றவும் உதவுவாராக.
நீங்கள் ஒருவரிடமிருந்து தற்காத்துக் கொண்ட நேரத்தைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறீர்கள்? தேவனுடைய வல்லமையினால் நீங்கள் எவ்வாறு வித்தியாசமாக பதிலளித்திருக்க முடியும்?
அன்புள்ள தேவனே, சண்டையிடும் மக்களிடம் பொறுமையாக, மென்மையான வார்த்தைகளால் பதிலளிக்கும் திறனை எனக்குக் கொடும்.