லெபனான் தேசத்தில் நடந்த கொடுமையான உள்நாட்டு போரில் ஐந்து வருடமாக பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் நாட்டு பத்திரிக்கையாளர் ஜான் மெக்கார்த்தி தன்னை விடுதலை செய்ய நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முக்கியமான நபரை சந்திப்பதற்கு 25 வருடங்கள் ஆயின. உலக ஐக்கிய நாடுகளின் தூதரான ஜியாண்டோமேனிக்கோ பிக்கோ-வை மெக்கார்த்தி சந்தித்த போது “என் விடுதலைக்கு நன்றி” என்று கூறினார். அவருடைய இந்த இதயபூர்வமான வார்த்தைகள் மிகவும் கனமான வார்த்தைகள் ஏனென்றால் மெக்கார்தியையும் மற்றவர்களையும் விடுவிக்க பிக்கோ தன்னுடைய சொந்த உயிரையே பணயம் வைத்தார் .

விசுவாசிகள் ஆகிய நாம் அதிகமாக போராடி பெற்றுக் கொண்ட விடுதலையுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். நம்மையும் சேர்த்து நமக்காக ரோம சிலுவையில் இயேசு தம் ஜீவனை தந்தார். “ நாம் விடுதலை பெறும்படி கிறிஸ்து நம்மை விடுதலை ஆக்கினார்” (கலா 5:1) என்பதை நாம் அறிவோம்.

யோவான் எழுதின சுவிசேஷமும் கிறிஸ்துவுக்குள் விடுதலை உண்டு என்பதை “ குமாரன் விடுதலை ஆக்கினால் மெய்யாகவே விடுதலை உண்டு” (யோ 8:36) என்று சுட்டிக்காட்டுகிறது.

எவ்வழிகளில் விடுதலை? பாவமும், அதன் பிடியிலிருந்து மாத்திரம் விடுதலை அல்லாமல், குற்றங்கள், அவமானம், கவலை, சாத்தானின் பொய்கள், மூடநம்பிக்கைகள், தவறான போதனைகள் மற்றும் நித்திய மரணத்திலிருந்தும் நம்மை இயேசு விடுவிக்கிறார். அவைகள் எதற்கும் நாம் பிணைக்கைதிகள் அல்ல. நம் எதிரிகளிடம் அன்பு செலுத்தவும், அன்பில் நடக்கவும், நம்பிகையோடு வாழ நமக்கு விடுதலை கிடைத்தது. பரிசுத்த ஆவியின் வழிநடத்தலின் மூலம் நாம் மன்னிப்பு பெற்றதின் நிமித்தம் மற்றவர்களையும் நாம் மன்னிப்போம்.

இவை அனைத்திற்கும் தேவனுக்கு நன்றி செலுத்தி, மற்றவர்களிடம் அன்பு செலுத்துவோம். அதன் மூலம் அவர்கள் மெய்யான விடுதலையை அறிந்து கொள்வார்கள்.